உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இளங்கோவன் பாராட்டுக்கு தி.மு.க., நன்றி

இளங்கோவன் பாராட்டுக்கு தி.மு.க., நன்றி

திருப்பூர்: தமிழக அரசை பாராட்டிய ஈரோடு காங்கிரஸ் எம்.எல்.ஏ., இளங்கோவனுக்கு நன்றி தெரிவித்து, செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் கடிதம் அனுப்பியுள்ளார்.தமிழக செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ., இளங்கோவனுக்கு அனுப்பியுள்ள கடிதம்:ஈரோட்டில், 17ம் தேதி நடந்த காங்கிரஸ் கூட்டத்தில் பேசும் போது, முதல்வர் ஸ்டாலின் தலைமையில், நல்லாட்சி தந்து கொண்டு இருப்பதற்கு, முழுமனதோடு பாராட்டி உள்ளீர்கள். அந்த ஆட்சி திராவிட மாடல் ஆட்சி என்றும், காமராஜர் ஆட்சி, கக்கனின் நேர்மையையும் சொல்லலாம் என்றும், நல்லாட்சி நடத்துபவருக்கு நாம் துணை நிற்க வேண்டும் என்று, தாங்கள் கூறிய கருத்து தெரிய வந்தது. முதல்வர் ஸ்டாலின் அரசை வழிநடத்தும் பாங்கை பாராட்டி கருத்து தெரிவித்தமைக்கு, மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன். இந்த கடிதத்தின் வாயிலாக அன்புடன் நன்றி தெரிவிக்கிறேன்.இவ்வாறு, அமைச்சர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ