உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இயற்கை விவசாயத்தில் விளைந்த 4.5 கிலோ எடையுள்ள முள்ளங்கி ஊட்டியில் பார்வையாளர்கள் வியப்பு

இயற்கை விவசாயத்தில் விளைந்த 4.5 கிலோ எடையுள்ள முள்ளங்கி ஊட்டியில் பார்வையாளர்கள் வியப்பு

ஊட்டி: நீலகிரியின் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கில், 2018ம் ஆண்டு, நீலகிரி இயற்கை விவசாய மாவட்டமாக அறிவிக்கப்பட்டது. இயற்கை விவசாயம் மேற்கொண்டு வரும் விவசாயிகள், தாங்கள் உற்பத்தி செய்த மலை காய்கறிகளை சந்தைப்படுத்த வசதியாக, ஊட்டி சேரிங்கிராஸ் வளாகத்தில் விற்பனை நிலையம் அமைக்கப்பட்டது. அதில், நேற்று விற்பனைக்கு வந்த காய்கறியில், 4 கிலோ மற்றும் 4.5 கிலோ எடை கொண்ட முள்ளங்கிகள் இடம்பெற்றன. இவற்றைப் பார்த்தவர்கள் வியப்படைந்தனர்.நீலகிரி மாவட்ட இயற்கை விவசாய குழு உறுப்பினர் சிவகுமார் கூறியதாவது:தாம்பட்டி கிராமத்தில் விளைந்த, 4 கிலோ மற்றும் 4.5 கிலோ எடை கொண்ட இரு வெள்ளை முள்ளங்கிகள் உள்ளன. ரசாயன மருந்துகள் இல்லாமல் விளைவித்த முள்ளங்கியை, அனைவரும் பார்க்க வேண்டும் என்ற நோக்கத்தில், விற்பனைக்கு எடுத்து வந்தேன். இயற்கை விவசாயம் மேற்கொள்ள விவசாயிகள் முன்வர வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.நீலகிரி மாவட்ட இயற்கை விவசாய குழு ஒருங்கிணைப்பாளர் சந்திரன் கூறுகையில், ''இயற்கை விவசாயத்திற்காக மாநில அரசு, 50 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளது. கடந்தாண்டில், 2.19 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. நடப்பாண்டில், 2.25 கோடி ரூபாய்க்கு திட்ட அறிக்கை அனுப்பியுள்ளோம். ''மாவட்டம் முழுதும், 1,200 விவசாயிகள் இயற்கை விவசாயம் மேற்கொண்டு வருகின்றனர். இந்த எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்கப்படும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை