உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நீச்சல் குளத்தில் குளித்த சிறுவன் மூச்சு திணறி சாவு

நீச்சல் குளத்தில் குளித்த சிறுவன் மூச்சு திணறி சாவு

வானுார்: ஆரோவில் அருகே நீச்சல் குளத்தில் குளித்த சிறுவன் மூச்சு திணறி இறந்தார்.சென்னை, பெரியார் நகரை சேர்ந்தவர் பாரதி கண்ணன். இவர், நேற்று மதியம் 2:00 மணிக்கு தனது மகன் ராபின், 6; என்பவரோடு, விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் அருகே திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் உள்ள தனியார் ஓட்டலுக்கு சென்றார்.அங்குள்ள நீச்சல் குளத்தில் ராபின் குளித்தபோது திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. உடன், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.அங்கு, சிறுவனை பரிசோதித்த டாக்டர்கள் இறந்ததை உறுதி செய்துள்ளனர். ஆரோவில் போலீசார், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். இறந்த சிறுவனின் கண்கள் தானமாக ஜிப்மர் மருத்துவ மனையில் வழங்கப் பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ