உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சிதைந்த ஈ.வெ.ரா., பொய் ரூபம்; அதனாலேயே சீமானுக்கு சிரமம்

சிதைந்த ஈ.வெ.ரா., பொய் ரூபம்; அதனாலேயே சீமானுக்கு சிரமம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தஞ்சாவூர்: தமிழக பா.ஜ., மூத்த தலைவர் எச்.ராஜா அளித்த பேட்டி: தமிழகத்தை கொந்தளிப்பான சூழலில் வைத்திருக்க வேண்டும் என, முதல்வர் ஸ்டாலின் விரும்புகிறார். அதனாலேயே, மறுசீரமைப்பு தொடர்பாக எவ்வித அறிவிப்பும் இல்லாத நிலையில் பதற்றத்தை உருவாக்கி, அது குறித்து விவாதிக்க அனைத்து கட்சி கூட்டம் கூட்டியுள்ளார். இது, மக்களை ஏமாற்றி திசைதிருப்பும் செயல்.முதல்வருக்கு தமிழ்மொழி பற்று, எள் முனை அளவு இருக்குமேயானால், அவரது குடும்பத்தினர் நடத்தும் சன்சைன் பள்ளியை சமச்சீர் பள்ளியாக மாற்ற வேண்டும். தமிழ்ப்பற்று கொஞ்சம் கூட, முதல்வருக்கு இல்லை. அவருடைய குடும்பத்தினரால் தான் தமிழுக்கு ஆபத்து.ஈ.வெ.ரா., பொய் ரூபத்தை கொஞ்சம் கொஞ்சமாக சிதைத்து விட்டார் சீமான். அதை தாங்கிக்கொள்ள முடியாத சிலர், சீமானை சிரமப்படுத்துகின்றனர்.தி.மு.க., ஆட்சிக்கு வந்த உடன், பள்ளிகளில் நீதிபோதனை வகுப்பு நிறுத்தப்பட்டு விட்டது. அதனாலேயே, சமூக நன்னடத்தை கெட்டுப்போய் உள்ளது. ஆட்சி அதிகாரத்தில் திராவிடர்கள் தாக்கத்தை, தமிழகத்தில் இருந்து விரட்டாமல், பள்ளிக்கூடத்தில் நடக்கிற பாலியல் வன்கொடுமையை நிறுத்த முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 25 )

V. CHAKARAPANI
மார் 04, 2025 08:29

பாலியல் வன் கொடுமை நடக்காமல் இருக்க பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளுக்கு ஆடை கட்டுப்பாடு அவசியம். டிவி க்கள் நடத்தும் விருது வழங்கும் விழாவில் உடை கட்டுப்பாடே இல்லை. மேலும் பெண் பிள்ளைகள் அபரிமிதமாக வளர்ச்சி. தற்போது இருக்கும் சூழலில் பெண்கள் படிக்கும் மேல்நிலை பள்ளி மற்றும் இடை நிலை, ஆரம்ப பள்ளி அனைத்து பள்ளிகளுக்கும் தலைமை ஆசிரியர், உடற் பயிற்சி ஆசிரியர் உட்பட அனைவருமே பெண் ஆசிரியர்களாக நியமிக்கப் படவேண்டும். மேலும் செல்போன் போன்ற சாதனங்களாலும் சிறுவர் பாலியல் வன் கொடுமை ஏற்படுகிறது. இதற்கு அரசாங்கம் தகுந்த சட்டம் இயற்றி கடுமையான தண்டனை விதிக்க வேண்டும்.


கொங்கு தமிழன் பிரசாந்த்
மார் 03, 2025 22:59

தந்தை பெரியாரை பற்றி மக்களுக்கு நினைவூட்டி கொண்டே இருப்பதற்கு H.Raja, சீமான், அண்ணாமலைக்கு நன்றி. ஈ வெ ரா புகழ் நிலைத்து இருக்கும்.


கொங்கு தமிழன் பிரஷாந்த்
மார் 03, 2025 18:10

மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழகம் மக்கள் சிந்தனையும், கல்வியும், பெண்கள் முன்னேறி இருப்பதற்கு பெரியார் செய்த புரட்சியும், மாற்றங்களே. பெரியாரின் கடவுள் எதிர்ப்பை மட்டும் வெளிக்காட்டி அரசியல் இங்கு செய்ய நினைத்தால் தோல்விதான் வந்து சேரும். 40 ஆண்டுகளாக இது தான் நடக்கிறது. H.ராஜா போன்றோர் மத்தியில் இருக்கும் ஒன்றிய அரசுடன் பேசி மக்களுக்கு நல்ல திட்டங்களை கொண்டு வந்து மக்களின் மனதை கவர முயற்சிக்கலாம், ஆனால் பண்ண மாட்டார் எண்என்றால் பாஜகவில் இவரை யாரும் மதிப்பதில்லை.


தஞ்சை மன்னர்
மார் 03, 2025 14:15

சீமான் உங்களை போன்றோரின் சுயரூபம் தான் பொதுஜனத்திற்கு வெளித்தெரிகிறது அது ஒன்றுதான் நிச்சயம் நீங்கள் என்னதான் குரங்கு வேஷம் போட்டு பல்வேறு குட்டி கரணம் போட்டாலும் உங்களால் ஈ வெ ரா பற்றிய சிந்தனை வெளியேற்ற முடியாது அந்த சிந்தனை தற்போது இங்கே வேலைக்கு வரும் வட இந்திய பீட வாயன்களுக்கும் நன்றாக விளங்கி கொண்டு வருகின்றனர் அது மட்டும் நிச்சயம் எனவே இந்த ஈ வெ ரா ஒழிப்பு மற்றும் அதனை கொண்டு நீங்கள் இங்கே கால் ஊன்றிவிடலாம் என்று நினைத்தால் மற்றொரு மண்டைக்காடு சம்பவம் உண்டு மேலும் வேஷ்டி அவிழ்ப்பும் நடக்கும் இந்த வயசில் தேவையா உமக்கு


பல்லவி
மார் 03, 2025 13:43

மத்தியில் ஆளும் பா ஜ 140 கோடி மக்களை ஏமாற்றும் செயல் செய்கிறது மாநில கல்வி நிறுவனங்களை ஏமாற்றி விற்பனை செய்கிறது


rameshkumar natarajan
மார் 03, 2025 12:07

What he is saying. Till dravidian movement and periyar took up the issue many suppressed communities were allowed temple entry, street entry, allowed wear upper clothes, school entry, etc. If these people dont know the history, tamil nadu will teach them a good lesson.


sridhar
மார் 03, 2025 12:46

Before teaching lessons to others get yourself educated. Temple entry movement in TN was spearheaded by some Brahmins like Vaidhyanathan Iyer. E ve ra had no role to play in that. He went to Vaikom in Kerala where he was one among the many proors and not the leader of the group.


Sidharth
மார் 03, 2025 11:09

விசாகா கமிட்டி கட்சியின் ஆதரவு


Barakat Ali
மார் 03, 2025 08:33

ஹெச் ராஜா சரியாகத்தான் சொல்லியிருக்கிறார் ..... திராவிடியா மாடலின் புரட்டுக்களைப் புட்டுப்புட்டு வைக்கிறார் .....


அப்புசாமி
மார் 03, 2025 08:18

காந்தியின் நிஜரூபத்தையே தூக்கி சாப்புட்டவங்க பா.ஜ காரங்க.


PR Makudeswaran
மார் 03, 2025 09:36

தி மு க வினர் என்னவாம்


Kasimani Baskaran
மார் 03, 2025 07:19

கொள்கை ரீதியாக முதலீடுகள் என்று சொல்லக்கூடிய கோட்பாடுகள் பெரிதாக எதுவும் இல்லாத காரணத்தால் தீம்க்கா தனக்கு பரம விரோதியான ராம்சாமியையும் அதன் கோட்பாடுகளையும் திருடி இன்று காலத்தை ஓட்டுகிறது. திருடப்பட்டவை அனைத்தும் பழைய விடுதலை இதழ்கள் மூலம் எளிதில் புரிந்துகொள்ளக்கூடியவை. ஜாதி வெறுப்பு, மத வெறுப்பு ஆகியவை அவர்களின் பிரதானம். இட ஒதுக்கீட்டை கட்டிக்கொண்டு, வீட்டில் பிராமணரை மணந்து இரண்டையும் எதிர்ப்பதைப்போன்ற மகா கோமாளித்தனம் உலகில் இருக்கவே முடியாது. அடுத்தப்பக்கம் ஊழல் மூலம் சம்பாதித்ததில் ஒரு பகுதியை தேர்தலுக்கு செலவு செய்து மாநிலத்தை குழிக்குள் தள்ள முயல்வது. சங்கிகள் விடுதலை இதழ்களை பொதுமக்களிடையே பிரபலப்படுத்தினாலே போதும் - பெரியார் என்ற பிம்பம் முடிவுக்கு வரும். அதனுடன் மூலதனமில்லாத திம்மக்காவும் காணாமல் போய்விடும். சோ சொன்னது போல அடுத்து தீம்கா கொடியில் ஆண்டாள் கோவில் சின்னமோ அல்லது வேலோ அல்லது திரிசூலமோ கூட வர வாய்ப்பு இருக்கிறது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை