உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட சாராய வியாபாரி தப்பியோட்டம் சங்கராபுரம் போலீஸ் ஸ்டேஷனில் பரபரப்பு

விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட சாராய வியாபாரி தப்பியோட்டம் சங்கராபுரம் போலீஸ் ஸ்டேஷனில் பரபரப்பு

சங்கராபுரம்: சங்கராபுரம் போலீஸ் ஸ்டேஷனுக்கு விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட சாராய வியாபாரி தப்பியோடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளசாராய சம்பவத்தை தொடர்ந்து கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சாராய ரெய்டு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதனையொட்டி சங்கராபுரம் போலீசார் நேற்று காலை சேஷசமுத்திரம் கிராமத்தில் ரெய்டு மேற்கொண்டனர். அப்போது, அங்கு சாராயம் விற்றுக் கொண்டிருந்த 5 பேரை கைது செய்தனர். மேலும், அப்பகுதி சாராய வியாபாரி மணிகண்டன்,40; என்பவரை விசாரணைக்காக ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர்.அங்கு சாராயம் விற்ற 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த நேரத்தில் மணிகண்டன் தலைமறைவானார். விசாரணைக்கு அழைத்து வந்த மணிகண்டன் தப்பிச் சென்றதை அறிந்து அதிர்ச்சியடைந்த போலீசார், அவரை தீவிரமாக தேடிவருகின்றனர். இச்சம்பவம் சங்கராபுரம் போலீஸ் வட்டாரத்தில் பரப்பபை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ