வாசகர்கள் கருத்துகள் ( 1 )
பொது மக்கள் எப்படி கஷ்ட பட்டால் என்ன? மாடல் ஆட்சியின் தலைவலி இல்ல
பல்லடம்:'மும்மொழிக் கல்வி எங்கள் உரிமை' என, பல்லடத்தில், இல்லத்தரசியர் கோலமிட்டு தங்கள் எண்ணங்களை வெளிப்படுத்தினர்.திருப்பூர் மாவட்டம், பல்லடம் பச்சாபாளையம் பகுதியில் உள்ள சில வீடுகளில், 'மும்மொழிக் கல்வி, எங்கள் உரிமை' என, இல்லத்தரசிகள் பலர், தங்கள் வீடுகளின் முன் கோலம் வரைந்து, தங்கள் எண்ணத்தை வெளிப்படுத்தி உள்ளனர். பச்சாபாளையத்தைச் சேர்ந்த இல்லத்தரசி மல்லிகா கூறியதாவது:தாலியை அடமானம் வைத்தே என் மகனையும், மகளையும் படிக்க வைத்தோம். எனது மகன், அரசு பள்ளியில் படித்து, ஐ.டி., வேலையில் உள்ளான். ஹிந்தி, ஆங்கிலம் தெரியாமல் சிரமப்பட்டான்.மாணவர்கள், பன்மொழியில் புலமையுடன் இருப்பது அவசியம். தமிழகத்தில் மட்டுமல்ல, எங்குமே ஹிந்தி திணிப்பு இல்லை. தனியார் பள்ளி மாணவர்கள் ஹிந்தியை கற்கின்றனர்.நம்மால், அது முடியவில்லையே என்ற ஏக்கம், அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு ஒரு நாளும் ஏற்படக்கூடாது. அதற்கு புதிய கல்விக் கொள்கையை ஏற்பதுதான் ஒரேவழி.எனவேதான், மும்மொழிக் கல்வி கட்டாயம் வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக, எங்கள் பகுதியில் உள்ள சில வீதிகளில் கோலம் வரைந்தோம்.இவ்வாறு அவர் கூறினார்.
பொது மக்கள் எப்படி கஷ்ட பட்டால் என்ன? மாடல் ஆட்சியின் தலைவலி இல்ல