உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரூ.20 லட்சம் கேட்டு மிரட்டியவர் சிக்கினார்

ரூ.20 லட்சம் கேட்டு மிரட்டியவர் சிக்கினார்

புதுடில்லி:கார் விற்பனையாளரிடம் 20 லட்சம் ரூபாய் பறிக்க முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.டில்லி ராணி பாக் பகுதியைச் சேர்ந்தவர் கரன் திங்ரா, 30. ரஜோரி கார்டனில் உல்ள 'ட்ரீம் டாய்ஸ் கார்' என்ற பயன்படுத்திய கார்களை வாங்கி விற்கும் ஷோரூம் உரிமையாளருக்கு போன் செய்து 20 லட்சம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டினார். தரவில்லை என்றால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளார்.ஷோரூம் உரிமையாளர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். கரண் திங்க்ராவை நேற்று கைது செய்தனர்.இதேபோல இன்னும் பலரை திங்க்ரா மிரட்டியது விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவரிடம் தீவிர விசாரணை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ