உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அமைச்சர் சொன்னாரே... என்னாச்சு? கேட்கும் மாட்டுவண்டி தொழிலாளர்கள்

அமைச்சர் சொன்னாரே... என்னாச்சு? கேட்கும் மாட்டுவண்டி தொழிலாளர்கள்

தஞ்சாவூர்:பட்டுக்கோட்டையில் நேற்று இரட்டை மாட்டு வண்டி கூலி தொழிலாளர்கள் நலச்சங்கம் சார்பில், ஆற்றில் மணல் எடுக்க அனுமதிக்கக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை தலைமை தபால் நிலையம் அருகே இரட்டை மாட்டு வண்டி கூலி தொழிலாளர் நலச்சங்கம் சார்பில், சங்கத் தலைவர் குமரேசன் தலைமையில், ஆறுகளில் மணல் அள்ள மாட்டு வண்டிகளுக்கு அனுமதி வழங்க வேண்டும்.போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட வண்டிகளை திரும்ப ஒப்படைக்க வேண்டும் என, பல்வேறுகோரிக்கைளை வலியுறுத்தி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.சங்க நிர்வாகிகள் கூறியதாவது:மேலும், மாட்டுவண்டி தொழிலாளர்கள் வாழ்வாதாரம் மிகவும் நலிவுற்ற நிலையில் உள்ளது.அதை மீட்டெடுத்து, எங்களுக்கு வாழ்வாதாரம் அளிக்க வேண்டிய பொறுப்பு தமிழக அரசின் கையில் உள்ளது. மாட்டு வண்டிகளை போலீசார் பிடித்து வைத்துள்ளதால், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு, மாடுகளை விற்று வேறு வேலைக்குச் செல்லும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.அ.தி.மு.க., ஆட்சியில், 14 மாதம் மாட்டு வண்டியில் மண் அள்ள அனுமதி கொடுத்தனர்.'தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், ஆற்றுக்குள் இறங்கி தொழிலாளர் மணல் எடுக்கலாம்'என, அமைச்சர் செந்தில் பாலாஜி வாக்குறுதி அளித்தார். அது என்னவாயிற்று?லாரிகளில் மணல் அள்ள அனுமதித்து, குவாரியில் முறைகேடாக மணல் அள்ளப்படுகிறது.ஆனால், மாட்டுவண்டியில்அள்ளினால், நீராதாரம் பாதிக்கப்படும் என, கைது செய்வதுதான் வேடிக்கை.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை