உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பால்கனியில் தவறி விழுந்த குழந்தையின் தாய் துாக்கிட்டு தற்கொலை

பால்கனியில் தவறி விழுந்த குழந்தையின் தாய் துாக்கிட்டு தற்கொலை

மேட்டுப்பாளையம்: திருவாரூரை சேர்ந்தவர் வெங்கடேஷ், 35. கோவை மாவட்டம், காரமடையை சேர்ந்தவர் ரம்யா, 33; இருவரும் பிரபல ஐ.டி., நிறுவனத்தில் பணிபுரிந்தனர்.ஏழு ஆண்டுகளுக்கு முன் காதலித்து, இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். சென்னை, திருமுல்லைவாயலில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்த இந்த தம்பதிக்கு 5 வயதில் ஒரு மகனும், 7 மாத ஒரு பெண் குழந்தையும் உள்ளனர்.சில நாட்களுக்கு முன் இவர்களது 7 மாத பெண் குழந்தை, அடுக்குமாடி குடியிருப்பு மாடியில் உள்ள பால்கனி தகர ஷீட்டில் தவறி விழுந்தது. குழந்தையை அக்கம் பக்கத்தினர் இணைந்து மீட்டனர். குழந்தையை மீட்ட ஒவ்வொரு வினாடியும் சினிமா திகில் காட்சி போன்று இருந்தது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவ, பலரும் குழந்தையின் தாய்க்கு எதிராக கருத்துக்களை பதிவிட்டனர். இதனால், ரம்யா மிகுந்த மன அழுத்தத்தில் இருந்துள்ளார்.ரம்யாவுக்கு ஒரு மாறுதல் வேண்டும் என்பதற்காக காரமடையில் உள்ள ரம்யாவின் பெற்றோர் வீட்டிற்கு, 10 நாட்களுக்கு முன் வெங்கடேஷ் அவரை அழைத்து வந்தார். இந்நிலையில், ரம்யாவின் பெற்றோர் திருமண விழாவில் பங்கேற்க வெளியே சென்றனர். கணவரும் வீட்டில் இல்லை. நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத போது, ரம்யா துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.இரவில் வெங்கடேஷ் வீடு திரும்பிய போது ரம்யா துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. அவர் மன அழுத்தத்தால் தற்கொலை செய்து கொண்டாரா, வேறு காரணமா என்பது குறித்து காரமடை போலீசார் விசாரிக்கின்றனர்.--


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

R S BALA
மே 20, 2024 20:04

ஊருக்கு இளைத்தவன் என்று தொடங்கும் பழமொழி உண்டு அது போல இந்த சம்பவத்தில் எதோ உள்குத்து இருப்பது போல் தெரிகிறது அது தெரியாமல் சமூகவலைத்தளத்தின் மீது பழியா


கனோஜ் ஆங்ரே
மே 21, 2024 11:33

அய்யா ஆர்எஸ்பாலா என்ன சொன்னீங்க “சமூக வலைதளம்”த்துல உன்ன மாதிரி நிறைய யோக்கியனுங்க நல்லவனுங்கதான் இருக்குறாங்க அத்துடன், சமூக வலைதளத்தில் திருக்குறள், நாலடியார், திவ்யபிரபந்தம், பெரியபுராணம் போன்ற முக்திக்கான வழிகள்தான் பதிவு செய்யப்படுகிறது சமூக வலைதளத்தில் நுழைந்தாலே மனிதனின் அத்தனை வக்கிரங்களும் பதிவாக வெளியே தெரிகிறது இதுல சமூக வலைதளத்தை யோக்கியமானதுன்னு சொல்றதுலந்தே நீங்க எப்படிப்பட்டவர்னு தெரியுது “எங்கப்பன் குதிருக்குள்ளார இல்லே”ன்னு உங்க கமெண்ட்டாலேயே நீங்க யார் என்பதை நிரூபித்துவிட்டீர்


கனோஜ் ஆங்ரே
மே 20, 2024 19:55

இவற்றுக்கெல்லாம் காரணமே இன்றைய இளைய தலைமுறையினரிடம் இருக்கும் அவசரம் அவசர அவசரமாய் குறை பிரசவத்தில் பிறந்து அவசர அவசரமாய் வளர்ந்து அவசர அவசரமாய் படித்து சம்பாதிக்க அவசர அவசரமாய் பணியில் சேர்ந்து புள்ள பெத்துக்க அவசர அவசரமாய் காதல் செய்து, கல்யாணம் செய்து அவசர அவசரமாய் குறை பிரசவத்துல புள்ளைய பெத்துகிட்டு அவசர அவசரமாய் கார், பங்களா வாங்கிட்டு இப்படி எல்லாமே அவசர அவசரமாய் பறக்காக்கா மாதிரி பறப்பதின் விளைவுதான் சகிப்புதன்மையின்மைதான் முக்கிய காரணமே அதாவது , , களில் பிறந்தவர்கள் கஷ்டத்தில் பிறந்து, வளர்ந்து, கஷ்டத்திலேயே சிறிய பள்ளியில் படித்து, பாஸ் செய்து, படிப்புக்கேத்த வேலை கிடைக்காமல் கிடைக்கிற வேலையில் முழுஈடுபாட்டுடன் , சம்பளம் வாங்கி இரவு பகல் என கஷ்டப்பட்டு வேலை செஞ்சு கொஞ்சம் கொஞ்சமாக முன்னேற்றம் அடைஞ்சுதன் ஆயுளின் பாதியில் நிம்மதியாக ஒரு நிரந்தர நாற்காலியின் அமர்ந்த பின்னர், திருமணம் செய்து கொண்டு மீண்டும் கஷ்டப்பட்டு ஓடி ஓடி உழைத்து, உழைத்து பிள்ளைகளை பெற்று மனைவி, பிள்ளைகள் முன்னேற்றத்துக்காக தனது வயது கடந்த பின்பும் ஓடி, ஓடி சொந்த வீடு வாங்கி, பிள்ளைகளை நல்ல படிப்பு படிக்க வைத்து, திருமணம் செய்து வைத்த பின்னராவது நிம்மதி மூச்சு விடுகிறானா என்றால் இல்லை இன்னும் உழைக்க வேண்டும் என்ற எண்ணம் மனதில் இருந்தாலும் வயதுமூப்பு காரணமாக முடியாமல் நடை தளர்ந்து, உடல் தளர்ந்து இப்போதும் உழைத்துக் கொண்டு, வாழ்க்கையில் தனக்கு ஏற்பட்ட கஷ்டங்களையும், துன்பங்களையும், துயரங்களையும் அனுபவ பாடமாக எடுத்துக் கொண்டு இந்த தள்ளாத மூப்பிலும் உழைக்க ஓடுகிறான் அவனுக்கு அவனது பெற்றோர் சிறிய வயதிலேயே உழைக்கவும், கஷ்டங்களை தாங்கவும், இன்னல்களை எதிர்கொள்ளவும் கற்றுக் கொடுத்தார்கள் என்பதைவிட தன் பெற்றோர் பட்ட கஷ்டத்தை பார்த்து, பார்த்து அந்த , , களில் பிறந்த கல் தன்னைத்தானே அனுபவம் எனும் உளி கொண்டு செதுக்கிக் கொண்டு அழகான சிலையாக தன்னைத்தானே வடித்துக் கொண்டது இது அன்றைய தலைமுறை இன்றைய தலைமுறையில் அனைத்து சந்தோஷங்களும், சுகமும், இன்பமும் உட்கார்ந்த இடத்திலேயே கிடைக்க வேண்டும் உழைக்க திராணியற்றவர்கள் முழு உடலுழைப்பு செலுத்தாத சோம்பேறிகள் கஷ்டப்பட விரும்பாத ஜென்மங்கள்? பத்தாம் வகுப்பு பெயில் ஆன தற்கொலை செய்து கொள்வது அந்த பத்தாம் வகுப்பு பையனுக்கு உலகம்னா என்ன? படிப்புன்னா என்ன? கஷ்டம்னா என்ன? அனுபவம்னா என்னன்னு தெரியாது அவனுக்கு தெரிஞ்சதெல்லாம் பறக்கும் விமானம் கையில் கிடைக்க வேண்டும் என்கிற கனவுலகத்தில் மிதப்பதுதான் வாழ்க்கையில் இன்றைய கஷ்டம், துன்பம் என்பதுதான் நாளைய நமது சந்தோஷமான இன்பமான வாழ்க்கைக்கு அடித்தளம் என்பதை மறந்த ஜென்மங்கள் இன்றைய இளையதலைமுறை பொறந்தவுடனே எழுந்து ஓடணும்னு நினைக்குற முட்டாள்கள் அதுங்களெல்லாம் இதுமாதிரி வாழ்க்கையை பார்த்து பயந்து ஓடும் கோழைகள் மனிதனாய் வாழத் தகுதியற்ற ஜென்மங்கள்தான் கஷ்டம் என்பது நம்மை நாமே செதுக்கிக் கொள்ளும் உளி என்பதை மறந்த முட்டாள்களான இன்றைய இளையதலைமுறையின் எதிர்காலம் வெறும் இருட்டுதான் அவர்களுக்கு இருண்ட காலம்தான் “கஷ்டப்பட்டதன் பலன் கிடைக்காமல் போகாது அப்படி கிடைக்கவில்லையென்றால், அதற்காக நீ கஷ்டப்படவில்லை என்பதுன் நிதர்சமான உண்மை” என என் பள்ளி ஆசிரியர்தான் சொன்ன அறிவுரைதான் தற்கொலை செய்து கொண்ட இளைஞிகள் உள்ளிட்ட இன்றைய இளையதலைமுறைக்கு நான் சொல்லும் அறிவுரை


வாய்மையே வெல்லும்
மே 20, 2024 18:16

துட்டுக்கு ஆசைப்பட்டு இருவரும் போட்டி போட்டு சம்பாரிச்சு என்ன பண்ண போறீங்க உடனே பெண்களின் மீது உரிமை மீறல்கள் என பொங்குவோருக்கு ஒரு கேள்வி கல்யாணம் ஆன பின்பு குழந்தை கிடைத்தவுடன் அடங்கி ஒடுங்கி வீட்டில் இருந்து மழலைகள் சற்று வளரும் வரைக்கும் சம்பாரிப்பதை நிறுத்தினால் தான் என்ன கெட்டுபோய்விடப்போகிறது ?


Raa
மே 20, 2024 13:10

உயிர் பிழைத்த அந்த பிஞ்சுக்குழந்தை மீது வரும் / வரப்போகும் கணைகளைப்பற்றி இறந்த தாய் யோசிக்க மறந்துவிட்டார்


Sck
மே 20, 2024 11:17

இது என்ன ஒரு மனோவியாதி. மிக சமீபகாலமாக மில்லினியல் மற்றும் ஜென் ஸீ தலைமுறையினர் இடையே பார்க்கிறேன். அவ்வளவு கோழைகளாகவா இருக்கிறார்கள். கேவலமான சிந்தனை, துளியும் கூட தைரியமின்மை, கோழைதனமான மனம். சீ.


karthik
மே 20, 2024 11:40

உங்களை மாதிரி ஆளுங்களுடைய வலைதள கருத்து தான் அந்த பெண்ணை இந்த முடிவு எடுக்க தூண்டியது


RAMAKRISHNAN NATESAN
மே 20, 2024 09:19

வதந்திகளை மெய்ப்பிப்பது போல முடிவைத் தேடிக்கொண்டார்


karthik
மே 20, 2024 08:49

சமூக வலைத்தளம் என்பது பொறுப்பற்ற கழிசடைகளின் கூடாரமாக மாறிவிட்டது வார்த்தையாலையே ஒரு பெண்ணை கொன்று விட்டார்கள் இப்போது அந்த பிஞ்சு குழந்தை தான் பாவம் இதனை நாள் குடித்த தாய்ப்பால் திடீரென கிடைக்கவில்லையே ஏன் என்ற புரியாமல் தவிக்கும் பாவம்


N Annamalai
மே 20, 2024 07:22

சோகம் பிழைத்த குழந்தையை வளர்க்க வேண்டாமா ?யார் என்ன சொன்னாலும் பொருட்படுத்தி இருக்க கூடாது


மேலும் செய்திகள்