| ADDED : ஆக 08, 2024 08:14 PM
கோவில்பட்டியில் புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அளித்தபேட்டி:திமுக ஆட்சி பொறுப்பு ஏற்றது முதல் தமிழகத்தில் வளர்ச்சிப்பணிகள் எதுவும் நடைபெறவில்லை, தமிழகத்தில் அமைதியில்லை, சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து காணப்படுகிறது. கொலை,கொள்ளைகள் அதிகரித்து காணப்படுகிறது. இதற்கு காரணம் மது,போதை தான் காரணம்.ஆட்சிக்கு வருவதற்கு முன்பு தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும், படிப்படியாக மதுக்கடைகள் எண்ணிக்கை குறைக்கப்படும் என்று திமுக வாக்குறுதி அளித்தது மட்டுமின்றி, பூரண மது விலக்கு கோரி திமுக போராட்டம் நடத்தியது.ஆனால் திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை, டாஸ்மாக் கடைகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது மட்டுமின்றி தனியார் பார்களும் அதிகரித்துள்ளது. இன்றைக்கு ஏரளமான மக்கள் மதுவிற்கு அடிமையாகி உள்ளனர். மேலும் அதிக கொலைகள் நடக்க காரணம் மது தான்அது மட்டுமின்றி கிராமங்கள் வரை கஞ்சா விற்பனை அதிகரித்துள்ளது.பூரண மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்க வேண்டும், விலைவாசி உயர்வினை கட்டுப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 6 அம்ச கோரிக்களை வலியுறுத்தி புதிய தமிழகம் சார்பில் தமிழகம் முழுவதும் விரைவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறேன்சமீபத்தில் உச்சநீதிமன்றத்தில் உள் இடஒதுக்கீடு தொடர்பான தீர்ப்பு வந்தது.தமிழகத்தில் அருந்தியதிருக்கு கொடுத்த உள் ஒதுக்கீடு காரணமாக 14 ஆண்டுகாலமாக தேவேந்திர குலவேளாளர், ஆதி திராவிடர் சமூக மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். திமுகவின் உள் ஒதுக்கீடு திட்டத்தின் காரணமாக சுமார் ஒன்றைகோடி பேர் மிகப்பெரிய பாதிக்குள்ளாகி உள்ளனர்.உள்ஒதுக்கீடு தொடர்பாக உண்மை தன்மை தெரியமால் பல அரசியல் கட்சியினர் ஆதரவு கொடுக்கின்றனர்அருந்ததியர் சமூகத்திற்கு 3சதவீதம் இட ஒதுக்கிPடு கொடுத்ததை பற்றி எவ்வித ஆட்சபணை இல்லை, ஆனால் இட ஒதுக்கீட்டினை அமுலாக்கிய முறை என்பது முற்றிலும் தவறானதுஉள் இட ஒதுக்கீடு மூலமாக பாதிக்கப்பட்ட சமூக மக்களின் கூட்டத்தினை கூட்டி ஆலோசனை நடத்த இருக்கிறோம்தமிழகத்தில் அரசு பதவியில் இருக்கும் மற்றும் ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகள் வேலைக்கான பயிற்சி மையங்கள் நடத்துகின்றனர். இந்த மையங்கள் மூலமாக டி.என்.பி.எஸ்.பி மூலம் நடைபெறும் தேர்வுகளின் வினாத்தாள்கள் வெளியாகிறது. அந்த மையங்களில் படிக்க கூடியவர்கள் தான் வேலை வாய்ப்புக்கு செல்லும் நிலை உள்ளதுதமிழக அரசு அடுத்தவர்களை (நீட் தேர்வு) குறை சொல்வதற்கு முன்பு முதலில் இங்கு நடக்கும் முறைகேடுகளை தடுக்க வேண்டும், வரும் சட்டமன்ற தேர்தலில் ஆளும் கட்சியை எதிர்த்து மெகா கூட்டணி ஏற்பட வாய்ப்பு உள்ளதாக தெரிவித்தார்.