வாசகர்கள் கருத்துகள் ( 1 )
Yes you told the exact status of Congress Education policy. That’s why the new Education Policy brought, in that 3 language policy for all states, not just Tamil Nadu.
கடந்த 60 ஆண்டுகளாக தமிழகத்தில், இரு மொழிக் கொள்கை உள்ளது. ஆனால், வடநாட்டில், இன்றும் ஒரு மொழிக் கொள்கைதான் உள்ளது. வடமாநிலங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கிறேன்; மக்களை சந்தித்துள்ளேன். அவர்களுக்கு ஒரு மொழி தான் தெரியும். பேச்சு மொழி ஹிந்தி, அரசு மொழி ஹிந்தி, பயிற்சி மொழி ஹிந்தி; பாட மொழி ஹிந்தி. அங்கு ஆங்கில ஆசிரியர்களை, அரசு பள்ளிகளில் நியமிப்பதே இல்லை. தமிழகத்தில், 52 கேந்திர வித்யாலயா பள்ளிகள் உள்ளன. அதை நடத்துவது மத்திய அரசு. ஆனால், அங்கு பயிற்சி மொழி ஆங்கிலம். இரண்டாவது மொழி ஹிந்தி அல்லது சமஸ்கிருதம். மூன்றாவது மொழி என்பது அங்கு சொல்லிக் கொடுக்கவே இல்லை. 52 பள்ளிகளிலும் தமிழை கற்றுக் கொடுக்கவும் இல்லை. இந்த லட்சணத்தில் தான் மத்திய அரசு, 'நீங்கள் மும்மொழி கல்வி திட்டத்தை நிறைவேற்றாததால், தமிழகத்துக்கு தர வேண்டிய கல்வி நிதியை தரமாட்டோம்' என்கிறது. ப.சிதம்பரம், முன்னாள் மத்திய அமைச்சர்
Yes you told the exact status of Congress Education policy. That’s why the new Education Policy brought, in that 3 language policy for all states, not just Tamil Nadu.