உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கதிர்ஆனந்தை கைது செய்ய போறாங்க: துரைமுருகன் கதறல்

கதிர்ஆனந்தை கைது செய்ய போறாங்க: துரைமுருகன் கதறல்

வேலுார்: ''தி.மு.க., வேட்பாளர் கதிர்ஆனந்தை கைது செய்ய, மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்பதாக தகவல் வந்துள்ளது,'' என, அமைச்சர் துரைமுருகன் கூறினார்.வேலுார் மாவட்டம் குடியாத்தத்தில், தி.மு.க., தேர்தல் அலுவலகத்தை அமைச்சர் துரைமுருகன் திறந்து வைத்து பேசியதாவது: குடியாத்தத்தில் விதிகளை மீறி ஏரியில், நீதிமன்றம் கட்டிக்கொடுத்தேன். அதனால் இன்று வரை, எனக்கு உயர் நீதிமன்றத்தில் இருந்து நோட்டீஸ் வந்து கொண்டே இருக்கிறது.கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வருவதால், காட்பாடி தொகுதியில், 12 முறை தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறேன். தி.மு.க., வேட்பாளர் கதிர்ஆனந்த்தும் வாக்குறுதிகளை நிறைவேற்றி தருவார்.இந்தியாவில் ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே கட்சி, அது பா.ஜ., தான் என கொண்டு வர வேண்டும் என, வட கொரியாவில் நடப்பதை போல், ஒரு ஆட்சியை இங்கு நடத்த நினைக்கின்றனர். நீங்கள் போடுகிற ஓட்டு, ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்காக போடப்படும் ஓட்டு.தவறினால், மீண்டும் ஒரு மிசா வரும். மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன், தி.மு.க.,வையும், அதன் கூட்டணியையும் உடைத்தெறிவேன் என, ஒரு மாபெரும் தலைவர், இதுபோன்ற வார்த்தைகளை கூறலாமா? வாரிசு அரசியல் நடத்துவதாக கூறுகின்றனர். வாரிசு அரசியல் என்றால் என்ன, ஆம்பளையா இருக்கிறவன், கல்யாணம் பண்ணிக்கிறான். அதிலும், ஆண்மையாக இருக்கிறவன் பிள்ளைகளை பெற்றுக் கொள்கிறான். இதற்கு நாங்கள் என்ன பண்ணுவது? பின், பிள்ளை வளர்கிறது. எங்களை போன்று கட்சி வேலை செய்கிறது; கட்சிக்காரர்கள் தேர்தலில் நிற்க வைக்க சொல்கிறார்கள். இவ்வாறு அவர் பேசினார். பின், அமைச்சர் துரைமுருகன் நிருபர்களிடம் கூறுகையில், ''வேட்பாளர் கதிர்ஆனந்தை எப்படியாவது கைது செய்து விட, ஒரு செல்வாக்கு மிக்க வேட்பாளர், மத்திய அரசிடம் அழுத்தம் கொடுத்து வருகிறார். இதுகுறித்து, மேலிடத்திலிருந்து எங்களுக்கு தகவல் வந்துள்ளது. இதைப்பற்றி நாங்கள் கவலைப்படவில்லை,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

தமிழன்
மார் 31, 2024 19:23

ஒரு டிக்கெட் காலி


Narayanan
மார் 28, 2024 13:36

kathianand s today speech was very ugly he said that all ladies were very beautiful because of Rs /- given by Stalin government The shameless ladies should not take this blood money and free bus service They are making our ladies as beggars


M.S.Jayagopal
மார் 28, 2024 08:54

To implement vaarisu arasiyal, Stalin is allowing all his partymen to loot in the Government and from the publicIf he takes action against them then he cant bring his son as his vaarisu This is the danger of vaarisu arasiyalWe have to make laws to check/prevent growth of vaarisu arasiyal Nothing else will help to prevent this menace


Mohan das GANDHI
மார் 22, 2024 15:58

kodi roobaai manal kuvaarigal moolam panam petrradhu durai muruganum kadhir aanandhum kiruminal kutrravaaligale


Lion Drsekar
மார் 22, 2024 14:54

He is not worrying about himself, He has safe guarded him and all his ?? worrying for the second generation Vandhe matharam


Rajamani K
மார் 22, 2024 10:48

அப்போ ராஜா, இளவரசன் ஆட்சிக்கும் ஜனநாயகத்திற்கும் என்ன வித்தியாசம்


Narayanan
மார் 22, 2024 10:12

when Duraimurugan and his family not bothered about the ED action, then please keep quite Dont mislead the public Duraimurugan already told that their house doors are always ed


Arachi
மார் 22, 2024 09:03

என்னதான் நடக்கும் நடக்கட்டுமே


VENKATASUBRAMANIAN
மார் 22, 2024 08:14

யோக்கியன் வரான் சொம்பை எடுத்து உள்ளே வை என்றுதான் இவர்களின் நிலைமை திமிர் பேச்சு


krishnamurthy
மார் 22, 2024 07:57

sei endru kurugirar pol ullathu


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி