டிரைவர் அடித்து கொலை 3 பேரிடம் விசாரணை
உளுந்துார்பேட்டை: போதையில் டிரைவரை அடித்து கொலை செய்த வழக்கில் 3 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்து திருவெண்காடு பகுதியை சேர்ந்தவர் மாயவன், 47; கெடாராம் கொண்டான் பகுதியை சேர்ந்தவர் நாகராஜ், 45; டிரைவர்களான இருவரும், கடந்த 18ம் தேதி இரவு சென்னையில் இருந்து லாரியில் சாம்பல் லோடு ஏற்றிக்கொண்டு அரியலூருக்கு செல்லும் வழியில் உளுந்துார்பேட்டை அடுத்த பரிக்கல் அருகே நிறுத்திவிட்டு இருவரும் மது குடித்தனர். அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இதில் படுகாயமடைந்த மாயவனை, அருகில் இருந்தவர்கள் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்தார்.இதுகுறித்து திருநாவலுார் போலீசார் கொலை வழக்கு பதிந்து, நாகராஜ் உள்ளிட்ட மூவரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.