உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பனை மரத்தில் கார் மோதி குழந்தைகள் உட்பட மூன்று பேர் பலி

பனை மரத்தில் கார் மோதி குழந்தைகள் உட்பட மூன்று பேர் பலி

சாயல்குடி: ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே வாலிநோக்கத்தை சேர்ந்தவர் அப்துல் மாலிக். 33. இவர். திருப்பூரில் பிரியாணி கடை நடத்தி வருகிறார். சமீபத்தில் வாலிநோக்கம் வந்த அப்துல் மாலிக் குடும்பத்தினருடன், காரில் குற்றாலம் சென்று விட்டு ஊர் திரும்பிக் கொண்டிருந்தார். காரை அவரே ஓட்டினார்.நேற்று மாலை 5:00 மணிக்கு கிழக்கு கடற்கரை சாலை வழியாக சாயல்குடி அருகே எல்லைப்பிஞ்சை என்ற இடத்தில் காரில் வந்து கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக ரோட்டில் இருந்து விலகிய கார், வேகமாக ரோட்டோர பனை மரங்களுக்கிடையே மோதியது. இதில் காரின் முன் பகுதி நொறுங்கியது. இதில் அப்துல் மாலிக் மாமியார் பரீதா பீவி. 58, அப்துல் மாலிக் மகள் அப்ரீன் பாத்திமா, 3, சீனி பர்கான் என்ற அவரின் 8 மாத ஆண் குழந்தை சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். அப்துல் மாலிக் கால் பகுதி காரில் சிக்கிக் கொண்டது. சாயல்குடி தீயணைப்பு நிலைய அலுவலர் முத்து தலைமையில் மீட்பு வீரர்கள் அவரை மீட்டனர்.காயமடைந்த அவர், மனைவி பாத்திமுத்து ஜொகரா, 30, மகள் அஸ்ரின் பாத்திமா, 7, ராமநாதபுரம் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். சாயல்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்













சமீபத்திய செய்தி