உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திருநெல்வேலி மாநகராட்சி மேயர் வேட்பாளராக கிட்டு அறிவிப்பு

திருநெல்வேலி மாநகராட்சி மேயர் வேட்பாளராக கிட்டு அறிவிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகராட்சியில் தி.மு.க., மேயர் வேட்பாளராக கிட்டு என்ற ராமகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளார்.திருநெல்வேலி மாநகராட்சியில் மொத்தமுள்ள 55 கவுன்சிலர்களில் 4 அ.தி.மு.க., கவுன்சிலர்கள் தவிர தி.மு.க., கூட்டணி பெரும்பான்மையாக உள்ளது. தி.மு.க., கவுன்சிலர் சரவணன் கடந்த முறை மேயராக தேர்வு செய்யப்பட்டார். மற்ற கவுன்சிலர்களின் வார்டுகளுக்கு பணிகளை முறையாக ஒதுக்கி தரவில்லை எனக் கூறி தி.மு.க., கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இப்பிரச்னையில் கட்சி தலைமை உத்தரவுப்படி அண்மையில் அவர் ராஜினாமா செய்தார்.இந்நிலையில், இன்று (ஆகஸ்ட் 04) திருநெல்வேலி மாநகராட்சியில் தி.மு.க., மேயர் வேட்பாளராக கிட்டு என்ற ராமகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளார். நாளை காலை 10:30 மணிக்கு வேட்பு மனு தாக்கல் செய்து போட்டி இருந்தால் தேர்தலை நடத்தி, பிற்பகலில் முடிவை அறிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.தி.மு.க., மேயர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள கிட்டு என்ற ராமகிருஷ்ணன் சைவ வேளாளர் சமூகத்தை சேர்ந்தவர். இவர் 25வது வார்டு தி.மு.க., கவுன்சிலராக உள்ளார். 3 முறை கவுன்சிலராக இருந்தவர். கிட்டுவிற்கு தி.மு.க., மற்றும் கவுன்சிலர்கள் வட்டாரங்களில் ஆதரவு உள்ளது.துணை மேயர் கே.ஆர்.ராஜு மேயராகும் முயற்சி மேற்கொண்டார். சென்னையில் சில தினங்கள் காத்திருந்தார். இருப்பினும் துணைமேயரை மேயராக தேர்ந்தெடுக்கும் வாய்ப்புகள் இல்லாததால் அவர் முயற்சிகளை கைவிட்டு விட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Agora sivam Raja ram Sharma
ஆக 06, 2024 12:35

very nice and good GENTLE PERSON


THIRUMALAI KUMAR
ஆக 05, 2024 13:17

மிகவும் நல்லவர்


kannagasabai
ஆக 05, 2024 11:27

கிட்டுப்பிள்ளை வாழ்க வளர்க நன்றி


பிரேம்ஜி
ஆக 05, 2024 06:18

யார் மேயராக வந்தாலும் மக்களுக்கு பிரயோசனம் இல்லை. மேயர் பெரும் தனக்காரர் ஆவார்.


பெரிய ராசு
ஆக 04, 2024 15:12

ஜரூரா திருடவேண்டியது தான்


S. Gopalakrishnan
ஆக 04, 2024 12:48

இவர் தகுதியானவர்தானா ? இவர் மீது எத்தனை குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன ?


duruvasar
ஆக 04, 2024 12:23

பார்ப்பதற்க்கு மாண்புமிகு மாசு அய்யாவின் சகோதரர் போல் தெரிகிறார்.


மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி