உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / டூவீலரில் கஞ்சா கடத்திய திருவள்ளூர் வாலிபர் கைது

டூவீலரில் கஞ்சா கடத்திய திருவள்ளூர் வாலிபர் கைது

ராமநாதபுரம்: -ராமநாதபுரம் மாவட்டம் பேராவூர் கிழக்கு கடற்கரை சாலையில் டூவீலரில் 2 கிலோ 100 கிராம் கஞ்சா கடத்திய திருவள்ளூரைச் சேர்ந்த கோபியை 22, போலீசார் கைது செய்தனர்.ராமநாதபுரம் கேணிக்கரை எஸ்.ஐ., தினேஷ்பாபு தலைமையிலான போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். பேராவூர் கிழக்கு கடற்கரை சாலை சந்திப்பில் நம்பர் பிளேட் இல்லாத டூவீலருடன் வாலிபர் நின்றிருந்தார். அவர் போலீசாரைக்கண்டதும் ஓடத்தொடங்கினார். அவரை விரட்டி பிடித்து விசாரித்த போது அவர் திருவள்ளூர் மாவட்டம் காசிநாதபுரம் கோலாபுரியம்மன் கோயில்தெருவை சேர்ந்த அண்ணாதுரை மகன் கோபி எனத்தெரியவந்தது. டூவீலரில் பிளாஸ்டிக் பையில் இருந்த 2கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் , கோபியை கைது செய்து டூவீலர், அலைபேசியை பறிமுதல் செய்தனர். அவர் எப்படி இங்கு வந்தார், யாருக்காக எங்கிருந்து எங்கு கஞ்சா கடத்தினார் என விசாரணை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











முக்கிய வீடியோ