உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தடையை திரும்ப பெற வியாபாரிகள் கோரிக்கை

தடையை திரும்ப பெற வியாபாரிகள் கோரிக்கை

தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு, தமிழக உணவுப்பொருள் வியாபாரிகள் சங்கத்தின் கவுரவ ஆலோசகர் ஜெயப்பிரகாசம் அனுப்பியுள்ள கடிதம்:கடந்த 20 நாட்களாக, பல பகுதிகளிலும் தொழில் வணிகம் முடங்கி விட்டது. ஜூன் 4 வரை தேர்தல் நடத்தை விதிகள் தொடரும் என்று அறிவித்த காரணத்தால், தொழில் வணிகம் முற்றிலுமாக முடங்கி, வேலைவாய்ப்பை இழக்கும் நிலை உருவாகி விடும்.தமிழகத்தில் ஏப்., 19ல் ஓட்டுப்பதிவு முடிவடைகிறது. அன்று முதல் நடத்தை விதிகள் திரும்ப பெறப்படும் என அறிவிக்க வேண்டும். சில அரசியல் கட்சிகள் செய்யும் தவறுக்காக வணிகர்கள், விவசாயிகள், பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். ஜூன் 4 வரை நடத்தை விதிகள் அமலில் இருக்கும் என்ற அறிவிப்பை திரும்ப பெற வேண்டும்.இவ்வாறு கடிதத்தில் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்