| ADDED : ஜூலை 09, 2024 11:23 PM
விழுப்புரம்,:விக்கிரவாண்டி தொகுதி பா.ம.க., வேட்பாளர் அன்புமணி உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதிக்கான இடைத் தேர்தல் இன்று நடக்கிறது. இத்தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ம.க., சார்பில் சி.அன்புமணி போட்டியிடுகிறார். இவர் நேற்று இரவு 7:00 மணிக்கு விழுப்புரம்-திருச்சி நெடுஞ்சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்ந்தார். இதனால், தொண்டர்கள் மத்தியில் பரபரப்பு நிலவியது.இந்நிலையில் சிகிச்சை முடிந்து இரவு 9:35 மணிக்கு வெளியே வந்த அவர் கூறியதாவது;கடந்த இரு தினங்களாக தொடர் பிரசாரத்தில் இருந்ததால் சரியாக சாப்பிடவில்லை. இதனால், இனு்று (நேற்று) காலை சற்று மயக்கம் ஏற்பட்டது. உடல் பரிசோதனை செய்து கொள்வதற்காக மருத்துவமனைக்கு வந்தேன். தற்போது பரிசோதனை முடிந்து வீடு திரும்புகிறேன். உடல் நிலை நன்றாக உள்ளது. இன்று தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பா.ம.க., வேட்பாளர் திடீரென மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற சம்பவத்தால் விழுப்புரத்தில் பரபரப்பு நிலவியது.