உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / டிரெண்டாகுது மோடி அகெய்ன்

டிரெண்டாகுது மோடி அகெய்ன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை: தியானத்திற்காக கன்னியாகுமரி வந்த பிரதமர் மோடியை எதிர்த்து 'கோபேக் மோடி' என 'எக்ஸ்' தளத்தில் டிரெண்டாக்கும் எதிர்க்கட்சிகளுக்கு, பா.ஜ.,வினர் 'மோடி அகெய்ன்' என ஹேஷ்டேக்கை டிரெண்ட் ஆக்கி பதிலடி கொடுத்து வருகின்றனர்.பிரதமர் மோடியின் கன்னியாகுமரி வருகை தேர்தல் விதிமுறைக்கு மாறானது எனக்கூறி தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. மேலும் அவரது வருகையை கண்டித்து 'கோபேக் மோடி' என எக்ஸ் தளத்தில் ஹேஷ்டேக் டிரெண்ட் செய்து வருகின்றன. இதையடுத்து பா.ஜ.,வின் ஐ.டி.,விங்கும் எக்ஸ் தளத்தில் பதிலடியாக 'மோடி அகெய்ன்' என ஹேஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகிறது. மாநில தலைவர் அண்ணாமலை ஆலோசனைப்படி, ஐ.டி.விங்க் தலைவர் பாலாஜி உள்ளிட்டோர் உடனே களத்தில் இறங்கினர்.ஐ.டி.,விங்க் நிர்வாகிகள் கூறுகையில் ''மோடியை வரவேற்று நேற்று மாலை 4:00 மணிக்கு ஹேஷ்டேக் டிரெண்ட் செய்ய திட்டமிட்டோம். ஆனால் தி.மு.க.,வினர் காலை 11:00 மணிக்கே 'கோபேக் மோடி' என டிரெண்ட் செய்தனர்.உடனே பா.ஜ.,வும் பதிலடி கொடுக்கும் வகையில் களத்தில் இறங்கி மீண்டும் மோடி என்கிற வகையில் 'மோடி அகெய்ன்' என டிரெண்ட் செய்தோம். துவங்கிய சில மணி நேரத்திலேயே எதிர்க்கட்சிகளின் ஹேஷ்டேக்கை கடந்து ஒரு லட்சத்துக்கும் மேல் பார்வைகளை பெற்றது. இதனால் கட்சியினர் உற்சாகமடைந்துள்ளனர்'' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

v.s Tyagarajan
ஜூன் 01, 2024 15:22

I dont think the current rulers in Tamilnadu can sit even for 15 mts quietly in the prayer hall.


s. viswanathan
மே 31, 2024 15:10

விவேகானந்தர் அந்த பாறையில் தவம் செய்தார். இந்த பாறை தான் இந்தியா மிக குறைந்த அளவுக்கு விலகி உள்ளது. அங்கு தவம் செய்தால் இந்திய திரு நாட்டை பார்த்து தவம் செய்வது போலும். திரு மோடி அவர்களும் இதை தான் செய்தார். பாரத மாத அவருக்கு இந்தியாவை ஆள வரம் கொடுப்பார்கள் ???


venugopal s
மே 31, 2024 13:07

பிரதமர் மோடி அவர்கள் கன்னியாகுமரி வந்ததற்கு பதிலாக ஆக்ரா சென்றிருக்க வேண்டும்!


enkeyem
மே 31, 2024 12:16

மோடி விவேகானந்தா தியான மண்டபத்தில் தியானம் மேற்கொள்வது அவரது தனிப்பட்ட விருப்பம். அரசியல் அல்ல. இங்கே திருவள்ளுவர் சிலைக்கு அவர் போகாவிட்டால் அப்படி என்ன பெரிய பிரச்சினை? இந்து பண்டிகைகளுக்கு மட்டும் வாழ்த்து சொல்லாமல் புறக்கணிக்கும் முதல்வர் செயல் உனக்கு பிரச்சினையாக தெரிய வில்லையா. அப்போது பொங்க வேண்டியது தானே


Narayanan Muthu
மே 31, 2024 11:23

மோடி again என்பது மீண்டும் குஜராத் முதல்வராகவா. அதற்க்கு கூட வாய்ப்பு குறைவே


Indian
மே 31, 2024 11:22

மறுபடியும் மோடி குஜராத்தின் முதல்வராக......


sankar
மே 31, 2024 16:45

சிரிப்பு வரலை


selvelraj
மே 31, 2024 11:04

ஏம்பா கழக உபிக்களே டெல்லியில் புள்ளி கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க செல்லும் தமிழக முதல்வரை go back ஸ்டாலின் என்று சொல்ல எவ்வளவு நேரம் ஆகும். அப்படி செய்ய மாட்டார்கள். இது அவர்களுடைய பெருந்தன்மையை காட்டுகின்றது. சுதந்திர இந்தியாவில் யாரும் எங்கும் செல்வதற்கு தடை இல்லை. பிரதமர் தமிழகம் வருவதை எதிர்ப்பார்களாம் ஆனால் பிரதமரால் தமிழகத்திற்கு பயனளிக்கும் திட்டங்களில் திராவிட ஸ்டிக்கர் ஒட்டுவாங்க. இதுதான் திராவிட நியாயம். வெட்கம் கெட்ட கூட்டம்


Barakat Ali
மே 31, 2024 09:47

திருவள்ளுவர் சிலையருகில் போகாவிட்டால் அதுவும் பிரச்னை ஆகும் ...


sankaranarayanan
மே 31, 2024 09:37

பூனை கண்ணை மூடிக்கொண்டால் என்ன பூலோகமே இருண்டு போயிடும் இவர்கள் கோ பேக் என்று சொன்னதால் அவர்கள் பின்நோக்கி செல்கிறார்கள் என்பதே விளங்கும், இவர்களுக்கும் இதேபோன்று வடக்கே இவர்கள் செல்லும்போது அவர்கள் செய்வார்களேயானால் இவர்களால் அதை பொறுத்துக் கொள்ளவே முடியாது இதெல்லாம் அரசியல் வளர்ச்சி குன்றியதை காட்டுகிறது


veeramani
மே 31, 2024 09:18

குஜராத்தை நல்வழியில் ஆட்சிபுரிந்த திரு மோடி ஜி அவர்கள் தனது சொந்த விருப்பத்தின் ஏரில் தியானம் செய்வதற்கு விவேகாநந்தா பாறை கோவிலுக்கு வந்துள்ளார். அவருக்கு பாதுகாப்பு கொடுப்பது இந்திய யூனியனில் உள்ள போலீஸ் கடமை. இதில் ஒரு பியூனும் மற்றவர்களும் கருத்து சொல்லி திரும்ப லும் என மீடியாவில் கருத்து பதிவிடுவது நல்லதல்ல ஆபத்தானது . இதில் சண்டையிட்டு கோ ள்வது இந்திய மக்களுக்கு அழகல்ல


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை