உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 12,850 சதுர கி.மீ., தாவரம் அழிப்பு அறிக்கை கேட்குது தீர்ப்பாயம்

12,850 சதுர கி.மீ., தாவரம் அழிப்பு அறிக்கை கேட்குது தீர்ப்பாயம்

சென்னை:இந்திய அறிவியல் கழக ஆய்வாளர்கள் ராமச்சந்திரன், வினய், பரத் வெளியிட்ட ஆய்வுக் கட்டுரை: கர்நாடகாவின் குடகு முதல் தமிழகத்தின் பூம்புகார் வரை, காவிரி படுகை பகுதியில், 1965 முதல் 2016 வரை 50 ஆண்டு களில், 12,850 சதுர கிலோ மீட்டர் பரப்பளவிற்கு மரங்கள், செடி, கொடிகள் என இயற்கையாக செழித்து வளர்ந்திருந்த தாவரங்கள், 46 சதவீதம் அளவுக்கு அழிக்கப்பட்டுஉள்ளன. இதனால், சுற்றுச்சூழலுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இது தொடர்பாக, நாளிதழ்களில் வெளியான செய்தி அடிப்படையில் வழக்கு பதிந்து விசாரித்த தீர்ப்பாய நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, நிபுணர் குழு உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர் பிறப்பித்த உத்தரவு:தென்மாநிலங்களில் பாயும் முக்கிய நதியான காவிரி படுகை பகுதிகளில், 12,850 சதுர கி.மீ., பரப்பளவுக்கு தாவரங்கள் அழிக்கப்பட்டிருப்பதாக வெளியான கட்டுரை குறித்து, மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகமும், தமிழகம், கர்நாடகா, கேரளம் ஆகிய மாநில வனத்துறைகளும் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.இவ்வாறு உத்தரவிட்ட தீர்ப்பாயம், விசாரணையை வரும் செப்டம்பர் 2ம் தேதிக்கு தள்ளிவைத்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை