உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மாமல்லபுரத்தில் பிப்.,26ல் த.வெ.க., 2ம் ஆண்டு விழா; 18 பேர் கொண்ட ஒருங்கிணைப்பு குழு அமைப்பு

மாமல்லபுரத்தில் பிப்.,26ல் த.வெ.க., 2ம் ஆண்டு விழா; 18 பேர் கொண்ட ஒருங்கிணைப்பு குழு அமைப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: பிப்.,26ம் தேதி மாமல்லபுரத்தில் நடக்கும் த.வெ.க., 2ம் ஆண்டு துவக்க விழாவை ஒருங்கிணைக்க 18 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா, மாமல்லபுரத்தில் பிப்ரவரி 26ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்நிகழ்ச்சியில், கட்சி நிர்வாகிகள் உட்பட 2,000 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்க திட்டமிடப்பட்டு உள்ளது. பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்திற்கு, மாவட்ட செயலர்களை வரவழைத்து, கட்சி சார்பில் அனுமதி சீட்டுகள் நேற்று வழங்கப்பட்டன. விஜய்க்கு 'ஒய்' பிரிவு பாதுகாப்பை மத்திய அரசு சமீபத்தில் வழங்கியுள்ளது. இந்த பாதுகாப்பை ஏற்றுக்கொண்டு, முதல் நிகழ்ச்சியில் விஜய் பங்கேற்க உள்ளார். இந்நிலையில், இன்று (பிப்.,24) த.வெ.க., 2ம் ஆண்டு விழாவை ஒருங்கிணைக்க 18 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு அக்கட்சி தலைமை வெளியிட்டுள்ளது.குழுவில், சி.சூரியநாராயணன் (செங்கல்பட்டு), மோகன் ராஜா (செங்கல்பட்டு), எம்.எஸ்.பாலாஜி (செங்கல்பட்டு), வி.நரேந்திரன் (செங்கல்பட்டு), தீனா (திருப்போரூர்), தியாகு (திருப்போரூர்), ராஜேஷ் (திருப்போரூர்), ரமேஷ் (திருப்போரூர்), சுசி கணேஷ் (திருப்போரூர்), கே.தேவா (திருப்போரூர்), எஸ்.விஸ்வநாதன் (திருப்போரூர்), ஹேமா (திருப்போரூர்), விஜயதேவி (திருப்போரூர்), புஷ்ப ராஜ் (திருப்போரூர்), பவானி (திருப்போரூர்), கவுதம் (திருப்போரூர்), ஜான் ரமேஷ் (மதுராந்தகம்), கண்ணன் (திருப்போரூர்) ஆகிய 18 பேர் இடம்பெற்று உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

V வைகுண்டேஸ்வரன்
பிப் 24, 2025 16:56

தவெக வை பாஜக தான் ஆரம்பிக்க சொன்னது என்று திமுக ஆதரவாளர்களும், திமுக தான் ஆரம்பிக்க சொன்னது என்று பாஜக ஆதாரவாளர்களும் சொல்லுகிறார்கள். ஆனால் விஜய் ரெண்டு கட்சியையும் திட்டறார். அதனால் யாருடன் கூட்டணி வைப்பார்? அதிமுக வுடனா? இ பி எஸ் ஸை முதல்வர் ஆக்கவா கட்சி என்று ரசிகர்கள் கேட்பார்களே? சர்ப் ரைஸ் தான்


jayvee
பிப் 24, 2025 16:38

இதென்னடா கூத்து .. சினிமா மூணு நாள் ஓடினாலே வெற்றி விழா எடுப்பதைப்போல உள்ளது இந்த கூத்து .. வெறும் சில்வண்டு மற்றும் கிருத்துவ வாக்குகளை நம்பி கட்சி ஆரம்பித்துள்ள விஜய்க்கு இது தேவையா ?


naranam
பிப் 24, 2025 16:05

மாமல்லபுரம் உலகப் புகழ்மிக்க ஒரு தொன்மையான சுற்றுலாத் தலம். அதனைக் தவெக வினர் கெடுத்து விடாமல் இருப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்.


Madras Madra
பிப் 24, 2025 15:33

திமுக வுக்கு ஒத்து ஊதற கட்சிக்கு விழா ஒரு கேடு


Laddoo
பிப் 24, 2025 14:49

கேரவன் தலைவனின் காசை புஸ்ஸென ஊதித் தள்ளிடுஙக. சொந்தமா பேசத் தெரியாது. டயலாக் எழுதிக் கொடுத்து பேசச் சொல்லி இயக்குங்க. "இந்த நாடகம் அந்த மேடையில் எத்தனை நாளம்மா"