உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மோதியதில் தீப்பிடித்த லாரிகள் டிரைவர் பலி

மோதியதில் தீப்பிடித்த லாரிகள் டிரைவர் பலி

திருவண்ணாமலை: திருவண்ணாமலையிலிருந்து சிமென்ட் கான்கிரீட் கலவை ஏற்றிய லாரி தர்மபுரி புறப்பட்டது. அரியலுார் மாவட்டத்தைச் சேர்ந்த ரகு, 40, லாரியை ஓட்டினார்.திருவண்ணாமலை அடுத்த பாச்சல் கிராமம் அருகே பெங்களூரு சாலையில் லாரி நேற்று அதிகாலை சென்றது. அப்போது எதிரே, செங்கத்திலிருந்து திருவண்ணாமலை நோக்கி வந்த சரக்கு லாரி, சிமென்ட் கலவை லாரி மீது நேருக்கு நேர் மோதியதில், இரு லாரிகளும் தீப்பிடித்தன.இந்த விபத்தில் சரக்கு லாரி டிரைவர் பிரதாப், 38, இடிபாடுகளில் சிக்கியதால், தீயில் கருகி பலியானார். மற்றொரு லாரி டிரைவர் ரகு தீயில் சிக்கி படுகாயமடைந்தார்; கிளீனர் குதித்து தப்பினார். தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை