உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / குறுவை சாகுபடி தொகுப்பு அரசியல் ஏமாற்று நாடகம்: என்கிறார் இ.பி.எஸ்.,

குறுவை சாகுபடி தொகுப்பு அரசியல் ஏமாற்று நாடகம்: என்கிறார் இ.பி.எஸ்.,

சென்னை: 'தமிழக அரசு அறிவித்துள்ள குறுவை சாகுபடித் தொகுப்பு ஒரு அரசியல் ஏமாற்று நாடகம்' என அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=5t80uy7k&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0காவிரியில் தண்ணீரை பெற, தி.மு.க., அரசு இதுவரை முயற்சி செய்யவில்லை. தி.மு.க., அரசு கடந்த 3 ஆண்டுகளாக குறுவை சாகுபடிக்கு பயிர்க்காப்பீடு செய்யவில்லை. பயிர்க் காப்பீடு செய்யப்படாததால் ஏக்கர் ஒன்றுக்கு நிவாரணமாக ரூ.35 ஆயிரம் கிடைக்காமல் டெல்டா விவசாயிகள் நஷ்டம் அடைந்துள்ளனர்.

துயரம்

தமிழக அரசு அறிவித்துள்ள குறுவை சாகுபடித் தொகுப்பு ஒரு அரசியல் ஏமாற்று நாடகம். டெல்டா விவசாயிகளின் தேவை என்ன என்பதை கண்டு கொள்ளாமல் அவசர கதியில் குறுவை தொகுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. காவிரி டெல்டா விவசாயிகளின் கண்ணீரைத் துடைக்கவும் முடியாது. அவர்களின் துயரத்தை போக்கவும் முடியாது. டெல்டா பகுதியில் குறுவை சாகுபடிக்கு மும்முனை மின்சாரம் வழங்கப்படுமா என எந்த அறிவிப்பும் இல்லை. இவ்வாறு இ.பி.எஸ்., கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Varadarajan Nagarajan
ஜூன் 15, 2024 16:48

இரண்டு திராவிட கட்சிகளும் ஒன்றுக்கு ஒன்று சளைத்தவர்கள் அல்ல. வேளாண்மை செய்யும் விவசாயிகள் படும் துன்பங்கள் எதிர்க்கட்சியாக இருக்கும்போதுமட்டுமே தெரியும். தங்கள் ஆட்சிக்கு வந்தபிறகு அதை சரிசெய்ய போதுமான நடவடிக்கைகள் எடுக்கமாட்டார்கள். கர்நாடகாவிலிருந்து காவிரியில் தண்ணீர் பெறுவது என்பது உயிர்ப்புடன் இருக்கவேண்டிய ஒரு பிரச்சனை. அதை வைத்துதான் அரசியல் செய்கின்றனர். இந்த ஒன்றை தவிர விவசாயிகளுக்கு வேறு எந்த பிரச்சனைகளும் இல்லாததுபோல அறிக்கைகள் போராட்டங்கள் செய்வார்கள். பெயருக்கு செயல்படும் கூட்டுறவு வங்கிகள், நூறு நாள் வேலைத்திட்டத்தால் ஏற்பட்டுள்ள ஆள் பற்றாக்குறை, பெயருக்கு செயல்படும் வேளாண்மை துறை, பயிர் காப்பீட்டு நிவாரண தாமதம், நெல் கொள்முதல் நிலையங்களில் நடக்கும் லஞ்ச ஊழல் மற்றும் முறைகேடுகள், உயர்ந்துவரும் உர விலை, கோடை மற்றும் குருவை சாகுபடி செய்யும்போது ஏற்படும் மின் தட்டுப்பாடு மற்றும் குறைந்த மின் அழுத்த பிரச்சனை என பல பிரச்சனைகளுடன்தான் விவசாயம் நடைபெற்றுக்கொண்டுள்ளது. இதை அனைத்து அரசியல் கட்சிகளும் அறிந்ததே.


S Srinivasan
ஜூன் 15, 2024 16:17

நீங்க அடி நீங்க அடி நான் வாங்கிக்கிறேன் நான் வாங்கிக்கிறேன் இரண்டு திராவிட கட்சிகள் நடத்தும் நாடகம் இது


பேசும் தமிழன்
ஜூன் 15, 2024 15:30

இவர் மூன்று ஆண்டுகள் தூக்கத்தில் இருந்து இப்போது தான் தூக்கத்தில் இருந்து விழித்து வந்து இருக்கிறார் போல..... எதிர்கட்சி வேலையை பிஜெபி கட்சி அண்ணாமலை அவர்கள் சிறப்பாக செய்து வருகிறார்.... நீங்கள் எப்போதும் போல பங்காளி கட்சிக்கு அனுசரணையாக இருங்கள்.


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி