உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆடு திருடிய இருவர் கைது

ஆடு திருடிய இருவர் கைது

விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே ஆடு திருடிய இருவரை போலீசார் கைது செய்தனர்.விருத்தாசலம் அடுத்த புலியூரை சேர்ந்தவர் சேட்டு மகன் நரசிம்மன், 17. நேற்று மதியம் 2:00 மணியளவில், அங்குள்ள உயர்நிலைப் பள்ளி அருகே உள்ள காலி இடத்தில் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது, பைக்கில் வந்த மர்ம நபர்கள் இருவர், ஒரு ஆட்டை பைக்கில் துாக்கி வைத்துக் கொண்டு திருடிச் செல்ல முயன்றனர்.அதிக போதையில் இருந்த இருவரும், அதிவேகமாக சென்று அங்குள்ள முட்புதரில் கீழே விழுந்தனர். அவர்களை கிராம மக்கள் மடக்கிப் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர்கள், கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் சமத்துவபுரம் கோவிந்தன் மகன் நவநீதகிருஷ்ணன், 28, பிரிதிவிமங்கலம், காட்டுக்கொட்டாய் பச்சமுத்து மகன் ஏழுமலை, 21, என்பதும், ஆடுகளை திருடி விற்பனை செய்ய முயன்றதும் தெரிந்தது.இது குறித்து சேட்டு புகாரின் பேரில், ஆலடி சப் இன்ஸ்பெக்டர் துரைக்கண்ணு வழக்குப் பதிந்து, நவநீதகிருஷ்ணன், ஏழுமலை ஆகிய இருவரை கைது செய்தார். அவர்களிடம் இருந்து பைக், மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ