மேலும் செய்திகள்
பாஜ கூட்டணிக்கான காரணம்: முதல்வருக்கு இபிஎஸ் பதில்
2 hour(s) ago
சென்னை : நடப்பாண்டு அங்கன்வாடி குழந்தைகளுக்கு சீருடை வழங்க, 31.89 கோடி ரூபாயை அரசு ஒதுக்கியுள்ளது.அங்கன்வாடி மையங்களுக்கு வரும் குழந்தைகளுக்கு ஆண்டுதோறும், 300 ரூபாயில், இரண்டு வண்ண சீருடைகள் வழங்கப்பட்டு வருகின்றன.இத்திட்டம் முழுமையாக, மாநில அரசின் நிதியில் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்திற்காக நடப்பாண்டு, 31.80 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிதியில், நடப்பாண்டு அங்கன்வாடி மையங்களுக்கு வரும், 2 முதல் 3 வயதுக்கு உட்பட்ட, 7 லட்சத்து, 19,532; மூன்று முதல் 4 வயதுக்கு உட்பட்ட, 6 லட்சத்து, 45 ஆயிரத்து 74; மற்றும் 4 முதல் 5 வயதுக்கு உட்பட்ட, 4 லட்சத்து, 94,926 என, மொத்தம், 18 லட்சத்து, 59,532 குழந்தைகளுக்கு வண்ண சீருடை வழங்கப்பட உள்ளது.இதற்கு, சமூக நலத்துறை சார்பில் டெண்டர் கோரப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு இந்த ஆண்டு பனியன் துணியில், மெருன் நிற அரை பேண்ட், சந்தன நிற சட்டை வழங்கப்பட உள்ளது.ஆண் மற்றும் பெண் குழந்தைகளுக்கு ஒரே மாதிரி சீருடை வழங்கப்பட உள்ளது. குழந்தைகளுக்கு எந்த அளவு சீருடை வழங்க வேண்டும் என்ற விபரமும், டெண்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த ஆண்டில் ஆகஸ்டிற்கு பின் சீருடை வழங்கப்பட்டது. இந்த ஆண்டு, இந்த மாதம் தான் டெண்டரே கோரப்பட்டுள்ளது. எனவே, டெண்டர் பணிகளை முடித்து, விரைவாக சீருடை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அங்கன்வாடி ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
2 hour(s) ago