உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / உறுதி அளித்தபடி ஒப்பந்தத்தில் கையெழுத்திட முதல்வருக்கு மத்திய கல்வி அமைச்சர் கடிதம்

உறுதி அளித்தபடி ஒப்பந்தத்தில் கையெழுத்திட முதல்வருக்கு மத்திய கல்வி அமைச்சர் கடிதம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழகத்திற்கு, 'சமக்ரா சிக் ஷா' திட்டத்தின் கீழ், மத்திய அரசு வழங்க வேண்டிய, இந்த ஆண்டுக்கான முதல் தவணை 573 கோடி ரூபாய், முந்தைய ஆண்டுக்கான 249 கோடி ரூபாயை, மத்திய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும் என, கடந்த 27ம் தேதி பிரதமர் மோடிக்கு, முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார்.அதற்கு பதில் அளித்து, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், முதல்வருக்கு அனுப்பியுள்ள கடிதம்:கடந்த நிதியாண்டு, 'சமக்ரா சிக் ஷா' திட்டத்தின் கீழ், தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்ட 1,876.15 கோடி ரூபாயை மத்திய அரசு, நான்கு தவணையாக விடுவித்துள்ளது. நடப்பாண்டு இத்திட்டத்திற்கு 4,305.66 கோடி ரூபாய் ஒதுக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.பி.எம்.ஸ்ரீ பள்ளிகள் திட்டம், 2022 செப்டம்பரில் துவக்கப்பட்டது. இத்திட்டத்தில் சேர நடப்பு கல்வியாண்டில் கையெழுத்திடுவதாக, கடந்த மார்ச் 15ம் தேதி தமிழக அரசு உறுதி அளித்தது. அதைத் தொடர்ந்து புரிந்துணர்வு ஒப்பந்தம் வரைவு, தமிழக பள்ளி கல்வித்துறைக்கு அனுப்பப்பட்டது. அதன்பின், தேசிய கல்விக் கொள்கையை கைவிட வேண்டும் என, கடந்த ஜூலை 6ம் தேதி தமிழக அரசு கடிதம் எழுதியது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.தமிழகம் அமல்படுத்தி உள்ள, 'சமக்ரா சிக் ஷா' திட்டம், தேசிய கல்விக் கொள்கையின் ஒரு பகுதி. புதிய தேசிய கல்விக் கொள்கை, சிறந்த பலன்களை வழங்கும். பன்மொழி கற்றல் மற்றும் தாய் மொழியில் கல்வி கற்றலை ஊக்குவிக்க, மத்திய அரசு ஒருங்கிணைந்த முயற்சிகளை எடுத்து வருகிறது.உலகின் பழமையான செம்மொழிகளில் ஒன்றாக தமிழ் திகழ்வது பெருமைக்குரிய விஷயம். தமிழ் மொழியை கற்பதற்கு வசதியாக, கடந்த ஜூலை 29ல் பிரத்யேக தமிழ் அலைவரிசை துவக்கப்பட்டது. தமிழ் மொழி உட்பட பன்மொழிகளை, நாடு முழுதும் உள்ள மாணவர்கள் கற்பதை ஊக்குவிக்க, மத்திய அரசு ஒருங்கிணைந்த முயற்சி எடுத்து வருகிறது.கல்வியின் தரத்தை மேலும் மேம்படுத்தவும், அரசு பள்ளிகளை மேம்படுத்தவும், பி.எம்.ஸ்ரீ பள்ளிகள் திட்டத்தை, தமிழக அரசு ஏற்றுக்கொள்வது முக்கியம். தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த, தமிழகம் முன்வரும் என நம்புகிறோம்.கூட்டு முயற்சிகள் வழியே, அனைவருக்கும் பிரகாசமான எதிர்காலத்தை ஏற்படுத்தும் கல்வி முறையை உருவாக்குவதை, மத்திய அரசு நோக்கமாகக் கொண்டுள்ளது. எனவே, தமிழக அரசு ஏற்கனவே ஒப்புக்கொண்டபடி, பி.எம்.ஸ்ரீ பள்ளிகள் திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

ஆரூர் ரங்
ஆக 31, 2024 13:08

குறைந்தது இருபது- முப்பது சதவீதம் பிள்ளைகள் தெலுங்கு மலையாளம் கன்னடம் ஹிந்தியைத் தாய்மொழியாகக் கொண்ட குடும்பத்தினர். அவர்களுக்காகவாவது தங்கள் தாய் மொழியை மூன்றாவது மொழியாகப் படிக்க வசதி செய்து கொடுப்பதில் என்ன தயக்கம்? அந்நிய ஆங்கிலம் பிரஞ்சு ஜெர்மன் படிச்சா அறிவு வளர்ச்சி. ஆனா நம் நாட்டு ஹிந்தி சமஸ்கிருதத்தைப் படித்தால் மட்டும் திணிப்பா? மொழி வெறுப்பு கேவலமான அரசியல்.


பாமரன்
ஆக 31, 2024 10:00

அமிச்சரு நீங்க சேர்ந்தாதான் துட்டுன்னோ... மாநில அரசு நாங்க சேரமாட்டோம் ஆனால் துட்டு குடுங்கோன்னோ டைரக்டா சொல்லாம / கேட்காமல் கண்ணாமூச்சி ஆடுவதை பார்த்தா... டீ காசு குடுப்பதை தவிர்க்க கோயிந்தா டீ ரொம்ப சூடு கோயிந்தா... ஆமா கோயிந்தா..சூடுன்னு ரெண்டு நாமம் போட்டவர்கள் வரும் சினிமா ஜோக் தான் ஞாபகம் வருது...


பாமரன்
ஆக 31, 2024 09:56

திரும்ப சொல்றேன்... இதற்கு மத்திய அரசு கோர்ட்டில் குட்டு வாங்கப்போவது உறுதி...


venugopal s
ஆக 31, 2024 18:26

அது ஒன்றும் புதிதல்ல,அவர்களுக்கு உச்ச நீதிமன்றத்தில் செருப்படி வாங்கிப் பழக்கம் தானே!


Dharmavaan
ஆக 31, 2024 07:47

திராவிட பிரிவினைவாத கூட்டம் நாட்டை துண்டாக்கும் இதை விட கூடாது


Kasimani Baskaran
ஆக 31, 2024 07:37

அதெப்படி சும்மா சொல்வதையெல்லாம் சீரியஸாக எடுத்துக்கொள்ள முடியும். உச்ச நீதிமன்றம், அது முடியவில்லை என்றால் ஐநா சபை வரை சென்று நிதியை விடுவிக்க போராடுவார்கள்.


Just imagine
ஆக 31, 2024 06:57

""கடந்த மார்ச் 15ம் தேதி தமிழக அரசு உறுதி அளித்தது. "" ........ அப்போதைய நிலையில் , அடுத்து மத்தியில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டு எங்கள் கூட்டணி ஆட்சி என்ற கனவிலே உறுதி அளித்தோம் ........ ""அதன்பின், தேசிய கல்விக் கொள்கையை கைவிட வேண்டும் என, கடந்த ஜூலை 6ம் தேதி தமிழக அரசு கடிதம் எழுதியது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. "" .......... எங்கள் கூட்டணி ஆட்சி ஏற்படாத காரணத்தால் பல்டி அடித்தோம் .....


vadivelu
ஆக 31, 2024 06:38

அப்பாவுக்கு இது தெரியாதா ? கல்வி அமைச்சர் இதை எல்ல தமிழக அமைச்சர்களுக்கும் அனுப்பனும்.


Svs Yaadum oore
ஆக 31, 2024 06:36

ஆந்திராவில் அணைத்து பள்ளிகளும் CBSE பள்ளிகளாக மாற்றம் செய்ய திட்டம் வகுத்து அங்குள்ள 45000 அரசு பள்ளிகளில் ஆயிரம் பள்ளிகளுக்கு மேல் ஏற்கனவே CBSE பள்ளிகளாக மாற்றம் ....ஆந்திரா , தெலுங்கானா வில் அரசியல்வாதிகள் பள்ளி கல்வியில் தலையிடுவது கிடையாது ....அதனால்தான் chennai IIT இல் பெரும்பாலான மாணவர்கள் ஆந்திர மாணவர்கள் .... தமிழ் நாட்டில் இந்த திராவிடத்தால் அரசு பள்ளி கல்வி மொத்தமாக அழிந்ததுதான் மிச்சம் ....


Svs Yaadum oore
ஆக 31, 2024 06:36

ஹிந்தி மற்றும் சமஸ்கிருதம் திணிக்கிறார்கள் என்று பொய்யான விடியல் பிரச்சாரம் ..உருது மொழி மூன்றாவது மொழி என்றால் விடியல் உடனே சரி என்பார்கள் .. உருது மொழி பேசுகிறவர்கள் தமிழ் நாட்டில் எத்தனை நபர்கள் உள்ளார்கள் ??...தமிழக மக்கள் வரிப்பணத்தில் விடியல் அரசு நடத்தும் உருது மொழி பள்ளி இங்கு எத்தனை உள்ளது ??....தமிழக அரசு நடத்தும் உருது மொழி பள்ளியில் தமிழ் பாடம் தேவையில்லை என்று சட்டம் கொண்டுவந்தது எந்த விடியல் ஆட்சி?? ..தமிழே படிக்காமல் தமிழன் வரிப்பணத்தில் தமிழ் நாட்டில் பள்ளி படிப்பை முடிக்கலாம் ....இவனுங்கெல்லாம் தமிழை வளர்த்தார்களாம்


Svs Yaadum oore
ஆக 31, 2024 06:36

தமிழ் நாட்டில் பள்ளி மாணவர்களில் கிட்டத்தட்ட ஐம்பது சதம் CBSE பள்ளி மாணவர்கள் ...விடியல் திராவிட கல்வித்தந்தை நடத்தும் அணைத்து பள்ளிகளிலும் CBSE ... சமச்சீர் வந்த பிறகு தரமில்லாத சமச்சீர் வைத்து வசூல் செய்ய முடியாது என்று பல கல்வி தந்தை மாநில கல்வித்திட்டம் பள்ளிகள் cbse பள்ளிகளாக மாற்றம் செய்தார்கள் ...CBSE எப்போதுமே மூன்று மொழிகள்தான் ..முன்றாவது மொழி என்பது பெயருக்குத்தான் ..ரொம்ப அடிப்படை கற்றுத்தருவார்கள் ..இந்த முன்றாவது மொழியில் யாரையும் பெயில் செய்வது கிடையாது ...இதை தான் புதிய கல்வி திட்டம் சொல்வது.....இதில் விடியலுக்கு என்ன பிரச்சனை ??.... வீம்புக்கு விளக்கெண்ணெய் குடிக்காமல் விடியல் புதிய கல்வி திட்டம் அமல் செய்யட்டும் ..


சமீபத்திய செய்தி