உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வள்ளலார் சர்வதேச மையம்: என்னென்ன வசதிகள்?: அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

வள்ளலார் சர்வதேச மையம்: என்னென்ன வசதிகள்?: அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: வள்ளலார் சர்வதேச மையத்தில் என்னென்ன வசதி செய்யப்பட உள்ளன? என்பது குறித்து விரிவான அறிக்கையை தமிழக அரசு தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.வள்ளலார் சர்வதேச மையத்தை வடிவமைக்க, சர்வதேச அளவில் கோரப்பட்ட ஒப்பந்தத்தில் பங்கேற்ற, ஏழு நிறுவனங்களில் தகுதியான நிறுவனம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. அதன்பின், கடலுார் மாவட்ட கலெக்டர் தலைமையில் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தப்பட்டு, 100 கோடி ரூபாயில், வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.இந்நிலையில், வடலூர் சத்திய ஞானசபை நிலத்தில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க தடை கோரி பா.ஜ., நிர்வாகி வினோத் ராகவேந்திரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று (ஏப்ரல் 03) விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில், ‛‛ சர்வதேச மையம் அமைத்தாலும் அந்த நிலம் ராமலிங்க அடிகளார் அறக்கட்டளை வசம் தாம் இருக்கும். அடிப்படை வசதிகள் இல்லை என பக்தர்கள் தரப்பில் கோரிக்கை வந்ததால் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கப்படுகிறது என விளக்கம் அளிக்கப்பட்டது.இதையடுத்து, வள்ளலார் சர்வதேச மையத்தில் என்னென்ன வசதி செய்யப்பட உள்ளன? என்பது குறித்து விரிவான அறிக்கையை தமிழக அரசு தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

JAYACHANDRAN RAMAKRISHNAN
ஏப் 04, 2024 14:11

நிலம் அவர்கள் கையில் இருக்குமாமா அனால் கட்டம் இவர்கள் கட்டுவார்களாம் நாளை கட்டத்தை பூட்டி விட்டு சென்றுவிட்டால் நிலத்துக்காரன் என்ன செய்வான் இன்னும் ஒரு இருபது முப்பது வருடம் கழித்து கட்டத்தை இடித்து விட்டு வேறு கட்டடம் இவர்கள் வாரிசுகள் கட்டி குடியிருந்தால் நிலத்துக்காரன் நிலை என்ன?


A P
ஏப் 03, 2024 17:05

காசு குடுத்து வாங்கிய ஆட்டைப் போட்டு சாப்பிடுவதில் தப்பில்லை ஆனால் ஆட்டையைப் போடக்கூடாது


Arul Narayanan
ஏப் 03, 2024 16:27

அடிப்படை வசதிகளுக்காக சர்வதேச டெண்டர் ?


Rajasekar Jayaraman
ஏப் 03, 2024 15:33

ஆட்சி மாற்றத்தில் அகற்றப்படும் ... செலஃபீ கூட்டத்தை விரட்டி அடிப்போம்.


Chennaivaasi
ஏப் 03, 2024 14:14

இது போல அறநிலைய துறை சுமார் ஆயிரத்து ஐநூற்று ஐம்பது கோவில்களுக்கு குடமுழுக்கு செய்ததாக தெரிவித்து இருக்கிறார்கள் ஒரு கோவிலுக்கு சுமார் பதினைந்து லட்சம் என்றால் கூட சுமார் நூற்று ஐம்பது ஐந்து கோடி ருபாய் கோவில் பணத்தில் இருந்து செலவு செய்யப்பட்டு உள்ளது இதற்கு ஏதாவது தணிக்கை அறிக்கை உள்ளதா?


மேலும் செய்திகள்





புதிய வீடியோ