மேலும் செய்திகள்
வாக்காளர் திருத்தம் முறையாக நடக்கவில்லை!
9 hour(s) ago | 15
1 கோடி பேர் கையெழுத்து தமிழக காங்., பெருமிதம்
9 hour(s) ago | 3
துரோகிகள் இருக்கும் வரை ராமதாசுடன் சேர மாட்டேன்: அன்புமணி
9 hour(s) ago | 1
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் கடந்த 18ம் தேதி விற்கப்பட்ட மெத்தனால் கலந்த சாராயத்தை குடித்த, 223 பேர் உடல் நிலை பாதிக்கப்பட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை, விழுப்புரம், சேலம், புதுச்சேரி ஜிப்மர், சென்னை ராயப்பேட்டை மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.இவர்களில், 58 பேர் சிகிச்சை பலனின்றி இறந்தனர். மற்றவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.அவர்களில், சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கருணாபுரத்தை சேர்ந்த ஜான்பாஷா, 58, நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தார். இதனால் பலி எண்ணிக்கை, 59 ஆக உயர்ந்தது.கள்ளச்சாராயம் குடித்து பாதிப்படைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களில், ஏற்கனவே எட்டு பேர் குணமடைந்த நிலையில், நேற்று கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் 20 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். தற்போது கள்ளக்குறிச்சியில், 91 பேர், சேலத்தில், 29 பேர், புதுச்சேரியில், 11 பேர், விழுப்புரத்தில், 4 பேர், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் ஒருவர் என, மொத்தம் 136 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இவ்வழக்கை விசாரித்து வரும் சி.பி.சி.ஐ.டி., போலீசார் நேற்று முன்தினம் வரை 15 பேரை கைது செய்திருந்தனர். மெத்தனால் சப்ளை செய்த மாதேஷ், மதுரவாயல் சிவக்குமார் ஆகியோருக்கு கம்பெனிகளில் இருந்து மெத்தனால் சப்ளை செய்த, தனியார் கெமிக்கல் நிறுவன உரிமையாளர்கள் சென்னை பன்ஷிலால், 32, கவுதம்சந்த் உதயன், 50, உட்பட ஆறு பேரை நேற்று முன்தினம் நள்ளிரவு கைதுசெய்தனர். இவ்வழக்கில் இதுவரை 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் வழக்கு தொடர்பாக மூவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
9 hour(s) ago | 15
9 hour(s) ago | 3
9 hour(s) ago | 1