உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழக அரசின் சாதனைக்கு கிடைத்த வெற்றி

தமிழக அரசின் சாதனைக்கு கிடைத்த வெற்றி

ஈரோடு:ஈரோடு லோக்சபா தொகுதியில் தி.மு.க., வேட்பாளராக போட்டியிட்ட பிரகாஷ், அ.தி.மு.க., வேட்பாளர் ஆற்றல் அசோக்குமாரைவிட, 2 லட்சத்து, 38,588 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் ராஜகோபால் சுன்கராவிடம் வெற்றி பெற்றமைக்கான சான்றிதழை பெற்று கொண்ட பிரகாஷ் கூறியதாவது:ஜனநாயக முறையில் நடந்த தேர்தலில் ஈரோடு உட்பட, 40 தொகுதிகளிலும் வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி கூறுகிறேன். மிகப்பெரிய வெற்றிக்கு, தமிழக அரசின் மூன்று ஆண்டு சாதனைகள், திட்டங்கள், முதல்வரின் உழைப்புக்கு கிடைத்த வெற்றியாகும்.இளைஞர் அணிக்கு முன்னுரிமை கொடுத்து, ஈரோடு தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கிய அமைச்சர் உதயநிதி, தேர்தலில் பணியாற்றிய அமைச்சர் முத்துசாமி மற்றும் நிர்வாகிகள், தொண்டர்களுக்கும், கூட்டணி கட்சியினருக்கும் நன்றி கூறுகிறேன். கட்சி வழிகாட்டுதல்படி, மக்களுக்கான பணியை சிறப்பாக செயலாற்றுவேன்.இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ