உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / குடிநீர் வழங்காததை கண்டித்து கிராம பெண்கள் சாலை மறியல்

குடிநீர் வழங்காததை கண்டித்து கிராம பெண்கள் சாலை மறியல்

சங்கராபுரம்: சங்கராபுரம் அருகே குடிநீர் வழங்காததை கண்டித்து பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.கள்ளக்குறிச்சி - திருவண்ணாமலை சாலை ரூ.126 கோடி மதிப்பில் நான்கு வழி சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது. இந்த பணியில், மூரார்பாளையம் அடுத்த பரமநத்தம் கிராம குடிநீர் குழாய் உடைந்தது. அதனை மூன்று மாதமாகியும் சீரமைக்காததால், கிராம மக்கள் குடிநீருக்கு அவதிப்பட்டு வருகின்றனர்.இதனால் ஆத்திரமடைந்த பரமநத்தம் கிராம பெண்கள் 50 பேர் நேற்று காலை 10 மணிக்கு, காலிக்குடங்களுடன் திருவண்ணாமலை-கள்ளக்குறிச்சி சாலையில் மறியலில் ஈடுபுட்டனர். அவர்களிடம், சங்கராபுரம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அதனைத் தொடர்ந்து 11 மணிக்கு மறியல் கைவிடப்பட்டது..


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Matt P
செப் 05, 2024 11:21

ஐயா அமெரிக்காவில் இருக்காரு.ஏரிக்கரையில் சைக்கிள் ஓட்டுறாரு. இந்த மாதிரி அடிப்படை தேவைகளுக்கும் ஏதாவது திட்டம் வைச்சிருப்பாரு. அமெரிக்காவிலே இருந்து குழாய் வழிலேயே தண்ணி கொண்டு வந்தாலும் வரலாம் ...யாரு கண்டஆங்க. ..இங்கே தண்ணி பஞ்சம் என்பதே கிடையாது. ..சாராயக்கடைகளை மூடினால் கூட தண்ணி தட்டுப்பாடு இல்லாமல் இருக்குமோ என்னமோ.


Mani . V
செப் 05, 2024 07:28

இந்தப் புத்தி தேர்தலின் போது காசு வாங்கிக் கொண்டு ஓட்டுப் போட்ட போது வந்திருக்கணும்.


சமீபத்திய செய்தி