உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விருதுநகர் புரோக்கர் கொலை

விருதுநகர் புரோக்கர் கொலை

திருநெல்வேலி:விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே பாலையம்பட்டியைச் சேர்ந்தவர் காளிராஜ் 45.நிலம் வாங்கி விற்கும் தொழில் செய்து வந்தார். காரை திருநெல்வேலிக்கு ஓட்டிச் சென்றார். காரில் ஏறிக்கொண்ட சிலர் திருநெல்வேலி ஜங்ஷன் அருகே கீழே இறக்கி அரிவாளால் வெட்டிகொலை செய்தனர்.திருநெல்வேலி ஜங்ஷன் போலீசார் விசாரித்தனர். காரில் நிலம் வாங்கி விற்பது தொடர்பான பல்வேறு ஜெராக்ஸ் பிரதிகள் உள்ளன. காளிராஜ் மீது நிலம் மோசடி தொடர்பான வழக்குகளும் உள்ளன. நில மோசடி முன்விரோதத்தில் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்