உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வீடியோவை பார்த்து தெரிஞ்சிக்கோங்க: சவுமியா புது பிரசாரம்

வீடியோவை பார்த்து தெரிஞ்சிக்கோங்க: சவுமியா புது பிரசாரம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'என்னை பற்றி வீடியோ பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்' என, பெண்கள் மத்தியில் பேசி, தர்மபுரி பா.ம.க., வேட்பாளர் சவுமியா பிரசாரம் செய்து வருகிறார்.தர்மபுரி தொகுதியில், பா.ம.க., சார்பில் அறிவிக்கப்பட்ட அரசாங்கம் என்பவர் மாற்றப்பட்டு, அக்கட்சியின் தலைவர் அன்புமணியின் மனைவி சவுமியா களமிறக்கப்பட்டு உள்ளார். இத்தொகுதியில், தி.மு.க., சார்பில் மணி, அ.தி.மு.க., சார்பில் அசோகன் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர்.தனக்கு பா.ம.க., ஓட்டு வங்கி மட்டுமின்றி, தனிப்பட்ட செல்வாக்கும் கைகொடுக்கும் என்று, கட்சியினரிடம் சவுமியா கூறி வந்தார். ஆனால், கிராமப் பகுதிகளில் அவரை பலருக்கு தெரியவில்லை. சமீபத்தில், ஏற்றுமதி ஆலைக்கு சென்ற சவுமியா, அங்கிருந்த பெண்களிடம் உரையாடினார்.அப்போது, அவர் கூறியதாவது:என்னை பற்றி தெரியுமா என்று கேட்க, பலர் முழித்துள்ளனர். உடனே சவுமியா, 'என்னை பற்றி யு டியூப், வீடியோ பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். பெண்கள் உரிமைக்காக பேசிய வீடியோக்கள் நிறைய உள்ளன. சாமி கும்பிடுவதை பற்றி சொல்லி இருக்கிறேன். எனக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். ரெண்டு பேருக்கு கல்யாணம் முடிந்து விட்டது; பேத்திகள் உள்ளனர். ஒரு அம்மாவாக, பெண்கள் பிரச்னை எனக்கு தெரியும். என்னை, ஓட்டு போட்டு ஜெயிக்க வையுங்கள்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

ஆரூர் ரங்
மார் 31, 2024 10:23

பாட்டியான பின் அதிக அளவு மேக்கப் தேவைப்படுகிறதே.


Kasimani Baskaran
மார் 31, 2024 06:17

தீம்காவைப்பார்த்து வளர்ந்த வாரிசு அரசியல் கட்சிகள் அனைத்தும் நாசமாகப்போனதுதான் வரலாறு மொத்த குடும்பமே கட்சி என்றால் பொதுமக்கள் எப்படி ஏற்றுக்கொள்வார்கள்


D.Ambujavalli
மார் 31, 2024 03:59

She thinks every village, unprevilaged woman is access to computer, iPad and iPhone to know about her by YouTube watching Indian version of French queen who said, ‘if even bread is not available eat cakes


மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ