உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மதுவிலக்கு வருவதில் எங்களுக்கு நோ அப்ஜெக் ஷன் டாஸ்மாக் சங்க தலைவர் தாராளம்

மதுவிலக்கு வருவதில் எங்களுக்கு நோ அப்ஜெக் ஷன் டாஸ்மாக் சங்க தலைவர் தாராளம்

புதுக்கோட்டை:புதுக்கோட்டையில் டாஸ்மாக் விற்பனையாளர்கள் நல சங்க துவக்க விழா நேற்று நடைபெற்றது. இதில், அச்சங்கத்தின் சிறப்பு தலைவர் பாரதி, மாநில பொறுப்பாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.பின், செய்தியாளர்களிடம் அச்சங்கத்தின் சிறப்பு தலைவர் பாரதி கூறியதாவது:தமிழகத்தில் டாஸ்மாக் கடையில் விற்பனையாளர்களாக பணியாற்றுபவர்களுக்கு குறைந்த அளவிலான ஊதியமே வழங்கப்படுகிறது. 23 ஆண்டுகளாகியும் பணி நிரந்தரம் என்பது இல்லை. தற்காலிக பணியாளர்களாகவே உள்ளோம். தமிழகம் முழுதும் டாஸ்மாக் கடைகளில் பணியாற்றும் விற்பனையாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். டாஸ்மாக் நிறுவன உயர் அதிகாரிகள், 99 சதவீதம் பேர் ஊழலில் திளைத்து வருகின்றனர்.அவர்கள் எந்த தவறு செய்தாலும் லஞ்ச ஒழிப்பு துறையால் கைது செய்யப்படுவது கிடையாது. குறைந்த ஊதியம் பெற்றுக் கொண்டு, அவர்கள் கூறியதால் பாட்டிலுக்கு 5 ரூபாய் உயர்த்தி விற்பனை செய்யும் விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை பாய்கிறது.அரசு பூரண மதுவிலக்கு கொண்டு வந்தால் எங்களுக்கு ஆட்சேபனை கிடையாது. ஆனால், டாஸ்மாக் விற்பனையாளர்கள் மற்றும் பணியாளர்களை வேறு துறைக்கு மாற்றம் செய்துவிட்டு மதுவிலக்கை கொண்டு வாருங்கள்.டாஸ்மாக் துவங்கும் போது, 2003ம் ஆண்டில் 36,000 பேர் டாஸ்மாக்கில் பணியாற்றி வந்தனர். தற்போது, 23,000 பேர் மட்டுமே உள்ளனர். டாஸ்மாக் கடைகளில் நஷ்ட கணக்கு காண்பிக்கவே, தற்போது, எப்.எல்., 2 பார், ஆளுங்கட்சி பிரமுகர்களுக்கு வழங்கப்படுகிறது.டாஸ்மாக் மதுபானம் தான் அங்கும் விற்பனை செய்யப்படுவதால், டாஸ்மாக் கடைகளில் விற்பனை குறையும். எப்.எல்., 2 பாரில் விற்பனை அதிகமாகும். இதனால், டாஸ்மாக் விற்பனையாளர் தலையில் தான் விடியும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ