உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இனி தமிழகம் வரமாட்டோம்: கதறும் இலங்கை அகதிகள்

இனி தமிழகம் வரமாட்டோம்: கதறும் இலங்கை அகதிகள்

ராமநாதபுரம் : மண்டபம் முகாமில் தங்கியுள்ள அகதிகள், 'இனி தமிழகத்திற்கு வரமாட்டோம்; பாஸ்போர்ட் வழங்கி இலங்கை அனுப்ப வேண்டும்' என, மனு அளித்தனர். ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் முகாமைச் சேர்ந்த இலங்கை அகதிகள் ரஜிந்தி, அம்பிகா, கிஹாளினி, கலைச்செல்வி, அக்கினேஸ்வரி, செல்வராஜ், ராஜனி, தர்ஷிகா உள்ளிட்டோர் கலெக்டர் அலுவலகத்தில்நேற்று மனு அளித்தனர்.அகதிகள் கூறியதாவது:பொருளாதார நெருக்கடியால் இலங்கையில் இருந்து 2022, 2023ல் கள்ளப்படகில் இந்தியா வந்தோம். மீண்டும் தாயகம் செல்ல விரும்புகிறோம்.பாஸ்போர்ட் வழங்கக் கோரி, இந்திய துாதரகத்தில் பதிவு செய்து, இரண்டு ஆண்டுகளாக, எட்டு குடும்பத்தினர் அலைகிறோம். இனி தமிழகத்திற்கு வரமாட்டோம்.எங்கள் விருப்பத்தை புரிந்துகொண்டு, இலங்கை செல்வதற்கு பாஸ்போர்ட் வழங்க மத்திய, மாநில அரசுகள் உதவ வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

veeramani
மார் 04, 2025 10:05

ஸ்ரீலங்கா அகதிகளை அவர்களது நாட்டிற்கு கப்பலில் ஏற்றி அனுப்புங்கள். அவர்களுக்கு எதர்கு இந்திய பாஸ்போர்ட்.


R.RAMACHANDRAN
மார் 04, 2025 09:16

லஞ்சம் கொடுத்தால் இந்த நாட்டில் எதையும் செய்வர். இன்றேல் கதறவிடுவர் அரசு அங்கங்களில் உள்ளோர்.மானம் கெட்டவர்கள் ஊருக்கு பெரியவர்கள் என்ற பழமொழிக்கு ஏற்ப மானம் கேட்ட அரசு ஊழியர்களாக உள்ளனர்.


நாஞ்சில் நாடோடி
மார் 04, 2025 09:09

திராவிட ஆட்சிகளின் சாதனை. உண்மையில் திராவிட மாடல் ஆட்சியினர் தமிழர்களுக்கு எதிரி ...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை