உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மோசடி நிதி நிறுவனங்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன: அறிக்கை கேட்கிறது ஐகோர்ட்

மோசடி நிதி நிறுவனங்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன: அறிக்கை கேட்கிறது ஐகோர்ட்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: முதலீடுகள் பெற்று மோசடி செய்ததாக, ஆருத்ரா, ஹிஜாவு உள்ளிட்ட நிதி நிறுவனங்களுக்கு எதிராக பதிவான வழக்குகள் மீது, இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, காவல்துறை அறிக்கை தாக்கல் செய்ய, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை உயர் நீதிமன்றத்தில், திருவண்ணாமலையை சேர்ந்த ரமேஷ் லட்சுமிபதி தாக்கல் செய்த மனு:ஆருத்ரா, ஹிஜாவு, எல்.என்.எஸ்., என, பல நிதி நிறுவனங்கள், அதிக வட்டி தருவதாகக் கூறி, 15,000 கோடி ரூபாய்க்கு மேல், வெளிநாடுகளுக்கு சட்ட விரோதமாக பண பரிவர்த்தனை செய்துள்ளன.இதுபோன்ற நிதி நிறுவனங்களை நடத்த, அரசுகள் எவ்வித விதிகளையும் வகுக்கவில்லை. ஒரு சில மாதங்களுக்கு வட்டி கொடுத்து விட்டு, பின் நஷ்ட கணக்கை காட்டி நிறுவனங்களை மூடிவிட்டு, வெளிநாடுகளுக்கு தப்பியோடுகின்றனர். முதலீடு செய்தவர்கள் பணத்தை திரும்ப பெற முடியாமல் தற்கொலை செய்கின்றனர்.மோசடி வழக்குகளை, சி.பி.ஐ.,க்கு மாற்றி, ஐகோர்ட் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரிக்க வேண்டும். மோசடி செய்த முதலீட்டு நிறுவனங்கள் மீது, போலீசார் நடத்திய விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய, டி.ஜி.பி.,க்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இந்த வழக்கு, பொறுப்பு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவன், நீதிபதி முகமது சபீக் அடங்கிய அமர்வு முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.முனியப்பராஜ் ஆஜராகி, ''ஹிஜாவு, ஆருத்ரா போன்ற நிதி நிறுவன மோசடி வழக்குகளில், 30க்கும் மேற்பட்ட நபர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர்,'' என்றார்.இதையடுத்து, இந்த நிதி நிறுவன மோசடி வழக்குகள் மீது, இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, காவல்துறை அறிக்கை தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டு, வரும் 24க்கு விசாரணையை தள்ளிவைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Kasimani Baskaran
ஜூன் 08, 2024 06:35

தீம்காவினர் மீது நடவடிக்கை எடுத்தல் ஓட்டு கிடைக்காது என்பதை கணம் கோர்ட்டார் அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.


GMM
ஜூன் 08, 2024 06:26

15000 கோடிக்கு மேல் பரிவர்த்தனை. இந்த மோசடியை மத்திய விசாரணை அமைப்புகள் தான் விசாரிக்க வேண்டும். மாநில பொலிஸார் எந்த அரசு நிர்வாக நடவடிக்கையில் நேரிடையாக நடவடிக்கை எடுக்க கூடாது. அப்படி இருந்தால் பொது சொத்து, மக்களை பாதுகாக்க ஆர்வம் குறையும். தனியார் நிர்வாக மோசடியை நேரடியாக விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய அதிகாரம் இல்லை. நிர்வாக நடவடிக்கைக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டிய பணி மட்டும் தான். மனுதாரர் cbi விசாரிக்க வேண்டும் என்று தேர்வு செய்து நீதிமன்றத்தில் மனு தாக்கல் கூடாது. மத்திய போலீஸ் படை பாதுகாப்பு பணியில் மட்டும் தான் ஈடுபடுகிறது.


vaiko
ஜூன் 08, 2024 03:09

நடவடிக்கை எடுத்தால் அண்ணாமலை, அமர் பிரசாத், போன்றோரை உள்ளே தள்ள வேண்டி இருக்கும். கணம் நீதிபதி அவர்களுக்கு இது பரவாயில்லையா ?


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை