உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 5 ஆண்டாக என்ன செய்தீர்கள்? மதுரை எய்ம்ஸ் எப்போது கட்டி முடிக்கப்படும்: ஐகோர்ட் கிளை சரமாரி கேள்வி

5 ஆண்டாக என்ன செய்தீர்கள்? மதுரை எய்ம்ஸ் எப்போது கட்டி முடிக்கப்படும்: ஐகோர்ட் கிளை சரமாரி கேள்வி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை: 'ஐந்தாண்டுகளாக என்ன செய்தீர்கள்? மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை எப்போது கட்டி முடிக்கப்படும்' என ஐகோர்ட் மதுரைக்கிளை, மத்திய சுகாதாரத்துறையை கேள்வி எழுப்பி உள்ளது. மதுரை தோப்பூரில் 221 ஏக்கரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு மத்திய அரசு 2018 டிசம்பரில் ஒப்புதல் அளித்தது. 2019 ஜனவரியில் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். முதற்கட்டமாக மருத்துவமனை, அவசர சிகிச்சை பிரிவு, விடுதி உள்ளிட்டவை 18 மாதங்களில் கட்டி முடிக்கப்படும்; https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=t51sdcit&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0மொத்த கட்டுமானமும் 33 மாதங்களில் முடிக்கப்படும் என எய்ம்ஸ் நிர்வாகம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் குறிப்பிட்ட காலத்திற்குள் எய்ம்ஸ் மருத்துவமனையை கட்டி முடிக்க கோரி பாஸ்கர் என்பவர் ஐகோர்ட் மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

சரமாரி கேள்வி

இந்நிலையில், இன்று (ஆகஸ்ட் 29) வழக்கை விசாரித்த ஐகோர்ட் மதுரைக்கிளை நீதிபதிகள், 'மதுரையில் எய்ம்ஸ் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டு 5 ஆண்டுகளாக என்ன செய்தீர்கள்? எப்போது கட்டி முடிப்பீர்கள்?' என மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பினர்.

மத்திய அரசு பதில்

இதற்கு,'கொரோனா தொற்று காலத்தால் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதில் தாமதம் ஏற்பட்டது. கட்டுமானப் பணிகளுக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. 2026க்குள் பணி முடிந்துவிடும்' என மத்திய அரசு பதில் அளித்தது.

உத்தரவு

'கொரோனா 2023ம் ஆண்டிலேயே முடிந்துவிட்டது அதை காரணம் காட்டாதீர்கள்? கட்டுமானப்பணி எப்போது நிறைவடையும் என மத்திய சுகாதரத்துறை செயலாளர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 27 )

Varadarajan Nagarajan
ஆக 29, 2024 21:55

இந்த கட்டுமானம் மத்திய அரசால் மேற்கொள்ளப்பட்டாலும் அதற்கு தேவைப்படும் நிலம் கையகப்படுத்துதல் மற்றும் சுற்று சூழல் அனுமதி போன்றவை மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. இவை இரன்டும் எப்பொழுது கிடைக்கப்பெற்றது என்பதையும் சேர்த்து பார்க்கவேண்டும். மேலும் அங்கிருந்து செங்கல் திருடப்பட்டதாக காவல் நிலையத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. அதையும் கணம் கோர்ட்டார் அவர்கள் கருத்தில் கொள்ளவும். கோவை மற்றும் திருச்சி விமான நிலைய விரிவாக்கம் போன்ற திட்டங்கள் காலதாமதத்திற்கு என்ன காரணம் என்பதையும் கவனத்தில் கொண்டால் நல்லது


Mohan D
ஆக 30, 2024 09:50

வர வர நம்ம உயர் நீதிமன்றம் டி ம் கே வின் ஊது குழலாகவும் உச்ச நீதிமன்றம் இன்டி கூட்டணியின் ஊது குழலாகவும் செய்ல்படுகிறது ..வேதனை


Mohan
ஆக 29, 2024 18:43

அன்புள்ள நீதியரசர் அவர்களே எப்பொழுது நிலம் கையகப்படுத்தி தரப்பட்டது என்பதை குறித்துக் கொள்ளவும், விடியல் அரசாங்கத்தில் அவர்களது அனுமதியின்றி மத்திய அரசு எந்த விதத்தில் முனைப்புடன் செயலாற்ற இயலும் என உங்களுக்கு தெரியாதா ? 14/15 புதிய மருத்துவ கல்லூரிகள் கடந்த சில வருடங்களில் செயல் படுத்தப்பட்டதை மாநில அரசு மறைக்கலாம். நீங்கள் அறிந்து கொண்டால் நல்லது. இந்த மாதிரி மத்திய அரசு, மாநில அரசின் ஒத்துழைப்பு தேவைப்படும் திட்டங்களில் எந்த உதவியையும் செய்யாது பொதுக்கூட்டங்களில் செங்கல்லை காண்பித்து வெறுப்பு பேச்சின் உச்சத்தை தொட்ட மதுரை கம்யூனிஸ்ட் எம்பிக்கு நீதியரசர் அறிவுரை கூறுவாரா


ganapathy
ஆக 29, 2024 17:07

நிலம் ஏன் கொடுக்கலேன்ன திமுக அரசை மறந்து போய் எங்கயாச்சும் கேள்வி கேட்டுறப்போறீங்க..


ganapathy
ஆக 29, 2024 17:05

அப்ப 4 கோடி தேங்கிய வழக்குகளும் பைசல் ஆகிவிட்டதா நீதிபதியே?


venugopal s
ஆக 29, 2024 15:31

நீதிமன்றம் செருப்பால் அடிப்பது போல் கேள்வி கேட்டாலும் மத்திய பாஜக அரசு வெட்கம் மானம் ரோஷம் எதுவுமே இல்லாமல் சிரித்துக் கொண்டு நிற்பார்கள்! அவர்கள் டிஸைனே அப்படித்தான்!


ganapathy
ஆக 29, 2024 17:41

கோவாலு பாஜகவுக்கு ஓட்டு போட்டியா மொதல்ல? எத்தனை எம்பி பாஜக கெலிச்சுச்சு நீ போட்ட ஓட்டால? இதுல வாய் மட்டும் நீளுது...தனக்கு ஓட்டு போடாதவங்கள மமதா செஞ்ச மாதிரியா பாஜக செய்யுது?


சரமாரி கேள்வி
ஆக 29, 2024 15:13

அப்போ coronaa வால ஒத்தி வைக்கபட்ட எல்லா வழக்குகள் பைசல் ஆகிவிட்டதா யுவர் ஆனர்


Sridhar
ஆக 29, 2024 15:05

பொதுவாக, திருட்டு கும்பலுக்கு பேரம் படியலன்னா மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கமாட்டாங்க, இல்ல அவிங்க ஆளுகளுக்கு எதிர்பார்த்த அளவுக்கு கொள்ளை அடிக்கமுடியாமல் போனாலும், அதுனால தாமதம் ஏற்படும். ஆனா மத்திய அரசுக்கு என்ன வந்தது? மருத்துவ கல்லூரிக்கான நிலங்களை ஆர்ஜித படுத்தவேண்டியது மாநில அரசின் பொறுப்பு. அதில் ஏதாவது தாமதம் ஏற்படுத்தினார்களா? வேறு என்ன காரணிகளால் இந்த திட்டம் இவ்வளவு தாமதமாகிறது? அனாவசியமாக ஏன் மத்திய அரசு கெட்ட பெயரை சம்பாதித்துக்கொள்கிறது? இதற்க்கு பொறுப்பானவர்களை தமிழக பிஜேபி தீவிரமாக விசாரிக்கவேண்டும். அவர்களும் ஏன் இதை துரித படுத்த முயலவில்லை?


ஆரூர் ரங்
ஆக 29, 2024 14:56

பத்தாண்டுகளில் தமிழ்நாட்டில் மட்டும் 14 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளை அமைக்க மத்திய அரசு உதவியுள்ளது. அதனை கோர்ட் பாராட்டினரா?. பதினைந்தாவது கல்லூரி தாமதமானதற்கு மட்டும் பொங்குறீங்க. என்னைக் கேட்டால் தென் மாவட்டங்களில் குப்பை சாக்கடை பிரச்னைகளை மாநில அரசு தீர்த்தாலே புதிய மருத்துவக் கல்லூரி தேவைப்படாது.எய்ம்ஸ் ஒரு வேண்டாத ஆணி. நிதியை வேறு உருப்படியான திட்டத்திற்கு மாற்றுங்கள்.


ஆரூர் ரங்
ஆக 29, 2024 14:51

சிவில் வழக்குகளில் தீர்ப்பு வர பத்தாண்டுக்கு மேல் ஆகிறது. அதை முதலில் சரி செய்யுங்க. மத்திய அரசு செய்த தவறு எவ்வளவோ பின்தங்கிய மாநிலங்கள் காத்திருக்கையில் திராவிட மூடநம்பிக்கை அகராதி பிடிச்ச ஆளுங்களுக்கு நல்லது செய்ய நினைச்சிட்டு ஏமாந்தது.


venkatapathy
ஆக 29, 2024 17:51

ஆஸ்பத்திரி கட்டறது பள்ளிக்கூடம் கட்டறது அதெல்லாம் அரசு நிதிநிலைமை கடன் கொடுக்கறவன் எப்பத்தான்தான் மாநில அரசு நிலம் எடுத்து கொடுக்கறது அதை நில உடமைகள் எதிர்த்து கோர்ட்டுக்கு போறது இப்படி எதனனி எத்தனையோ பிரச்சனைகள் இருக்குது அதை பற்றிய கேள்வி கேட்டு ஆர்டர் போட்டு செய்யமுடியுமா பேப்பர்ல இருக்கிற கேசுகளையே முடிக்க பத்து பதினஞ்சு வருஷம் ஆகுது ,இதெல்லாம் என்ன நீதி பரிபாலனத்தில் வருதா ?


venkatapathy
ஆக 29, 2024 17:53

பரந்தூர் பசுமை வெளி விமான நிலையம் வருவதற்கு முன் கட்டி முடிக்க படுமுன்னு சொன்னா சரி


Kumar Kumzi
ஆக 29, 2024 14:06

ஜஸ்டிஸ் ஐயா விடியல்கார்ர்ரூ தேர்தல் வாக்குறுதிகளை பத்தி வாய் தொறக்க மாட்டிங்களா ஹீஹீஹீ


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை