உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சாதாரண மக்களின் நிலை என்ன?: தேர்தல் பிரசாரத்தில் கனிமொழி கேள்வி

சாதாரண மக்களின் நிலை என்ன?: தேர்தல் பிரசாரத்தில் கனிமொழி கேள்வி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தூத்துக்குடி: பா.ஜ.,வில் சேர்ந்து விட்டால் வழக்கும் கிடையாது விசாரணையும் கிடையாது என்றால் சாதாரண மக்களின் நிலை என்ன? என தேர்தல் பிரசாரத்தில் திமுக எம்.பி கனிமொழி கேள்வி எழுப்பினார்.தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் பகுதியில் தேர்தல் பிரசாரத்தில் கனிமொழி பேசியதாவது: எதிர்க்கட்சியில் இருப்போர் அனைவரும் பா.ஜ.,வில் இணைந்தால் வழக்கு ரத்து செய்யப்படும். ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் என அதிமுக, பாஜ., துடித்துக் கொண்டு இருக்கின்றன. ஸ்டெர்லைட் ஆலையை மூடிக் காட்டியவர் முதல்வர் ஸ்டாலின். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=wde2djae&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0நடைபெற உள்ள லோக்சபா தேர்தல் நம்முடைய உரிமைகளை மீட்டெடுப்பதற்கான தேர்தல். பா.ஜ.,வில் சேர்ந்து விட்டால் வழக்கும் கிடையாது விசாரணையும் கிடையாது என்றால் சாதாரண மக்களின் நிலை என்ன?. பா.ஜ.,வில் சேர்ந்த எதிர்க்கட்சி தலைவர்கள் 25 பேரில் 3 பேர் மீதான ஊழல் வழக்கு முடித்து வைக்கப்பட்டது. இவ்வாறு கனிமொழி பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

குமரி குருவி
ஏப் 04, 2024 07:26

ஆண்கள் மது குடித்து உயிரை மாய்ப்பார்கள் இளம் பெண்கள் தாலியை அறுத்து இளம் விதவையாக மாறுவார்கள் தி.மு.க. புண்ணியத்தில்


Gowtham Saminathan
ஏப் 04, 2024 01:51

திமுக வில் சேர்ந்துவிட்டால் போதும்.... கஞ்சா விற்கலாம், சர்வதேச அளவில் போதை மருந்து கடத்தலாம், சாராய ஆலை நடத்தலாம், கல்வி தந்தை ஆகலாம்... சாதாரண மக்களின் நிலை என்ன? கனிமொழி கருணாநிதி அவர்களே


vijai
ஏப் 04, 2024 00:31

5000 கோடி என்ன ஆச்சு


sri
ஏப் 03, 2024 23:14

சாதாரண மக்கள் தண்ணி அடித்துவிட்டு மல்லாக்க படுக்கணும் பெண்கள் ஆயிரம் ரூபாய் உரிமை தொகையை வாங்கி ஃபேர் அண்ட் லவ்லி, பாண்ட்ஸ் பவுடர் போட்டு மினுக்கணம்


R.MURALIKRISHNAN
ஏப் 03, 2024 22:50

அந்த டாஸ்மாக் மூடி காமிக்கிறேன்னு சொன்ன டீம்கா லேடி எங்கப்பா


Bala
ஏப் 03, 2024 22:32

கொள்ளையடிக்கவில்லை புரிகின்றதா?


Varadarajan Nagarajan
ஏப் 03, 2024 20:29

எதிர் கட்சியில் இருந்தபோது போட்ட வழக்கில்தான் செந்தில் பாலாஜி தற்பொழுது சிறையில் உள்ளார் எதிர்க்கட்சியாக இருந்தபோது அ தி மு க அமைச்சர்கள் மீது நீண்ட புகாரை ஆளுநரிடம் அளித்தீர்கள் உங்கள் ஆட்சியில் தற்பொழுது அவர்கள் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தண்டனை பெற்றுக்கொடுத்தாகிவிட்டதா? அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் இல்லையே காரணம் என்ன?


duruvasar
ஏப் 03, 2024 19:35

உங்கள் அன்பு அண்ணணை பார்த்து கேட்க வேண்டிய கேள்வி ஏதோ பேச வேண்டுமென்பதற்காக பேசாதீர்கள்


Krishnamurthy Venkatesan
ஏப் 03, 2024 19:25

உங்கள் தேர்தல் வாக்குறுதிகள் ஓடும் நீரில் காற்றில் கரையும் வகையில் உள்ளன உதாரணம் முதல் கையெழுத்தே டாஸ்மாக் ஐ மூடுவது பெட்ரோல் டீசல் விலை குறைப்பு நீட் தேர்வு ஒழிப்பு போன்றவை இனியும் மாக்கள் ஏமாற மாட்டார்கள் என நம்புகிறோம்


ArGu
ஏப் 03, 2024 18:59

அந்த கெரகத்த தான் நானும் கேட்கறேன் கொஞ்சம் கூட அறிவே இல்லாம டெங்கு கும்பலுக்கே ஒட்டு போடறீங்களே இன்னும் கொஞ்ச நாள் போனா உங்க நெலம தான் என்னன்னு கேட்கறேன்


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை