உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும் போது தமிழகத்தில் மின் கட்டணம் எவ்வளவு?

மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும் போது தமிழகத்தில் மின் கட்டணம் எவ்வளவு?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை : தமிழகத்தில் வீடு உட்பட அனைத்து பிரிவுகளுக்குமான மின் கட்டணம், 4.83 சதவீதம் உயர்த்தப்பட்டது. வீடுகளுக்கான மின் கட்டணம், மற்ற மாநிலங்களில் எவ்வளவு உள்ளது என்ற எதிர்பார்ப்பு, தமிழக மக்களிடம் எழுந்துள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=bg36c8xi&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

அதன் விபரம்:

மின் பயன்பாடு அதிகம் உள்ள முக்கிய மாநிலங்களில்2 மாதங்களுக்கான மின் கட்டணம் - ரூபாயில்-------------------------------------------------------------மாநிலம்/ யூனிட்கள் - 100 - 200 - 300 - 400 - 500 - 600 - 700 - 800 - 900 - 1000--------------------------------------------------------------------தமிழகம் - கட்டணம் இல்லை - 235 - 705 - 1,175 - 1,805 - 2,880 - 3,825 - 4,770 - 5,820 - 6,870கர்நாடகா - 846 - 1,662 - 2,508 - 3,114 - 3,960 - 4,806 - 5,652 - 6,258 - 7,344 - 7,950கேரளா - 415 - 880 - 1,440 - 2,215 - 3,065 - 4,190 - 5,425 - 6,430 - 7,510 - 8,300 தெலுங்கானா - 215 - 545 - 1,220 - 1,700 - 2,890 - 3,680 - 4,600 - 5,500 - 6,490 - 7,440 மேற்கு வங்கம் - 594 - 1,324 - 2,122 - 2,866 - 3,681 - 4,496 - 5,472 - 6,394 - 7,424 - 8,346 குஜராத் - 571 - 1,157 - 1,763 - 2,414 - 3,065 - 3,871 - 4,637 - 5,403 - 6,219 - 6,985 மஹாராஷ்டிரா - 732 - 1,246 - 2,721 - 3,686 - 4,651 - 5,616 - 6,920 - 8,224 - 9,528 - 10,832ராஜஸ்தான் - 935 - 1,585 - 2,235 - 3,060 - 3,795 - 4,530 - 5,435 - 6,200 - 6,965 - 7,730 ம.பி., - 575 - 1,220 - 1,777 - 4,190 - 4,885 - 6,060 - 7,494 - 8,208 - 9,962 - 10,676 * தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில், அரசு மானியம் போக, நுகர்வோர் செலுத்த வேண்டிய தொகை தெரிவிக்கப்பட்டுள்ளது; அதன்படி, 100 யூனிட் பயன்படுத்தும் வீட்டிற்கு முற்றிலும் மின் கட்டணம் இலவசம் என்பதால், 480 ரூபாய் மானியமாக வழங்கப்படுகிறது. 200 யூனிட் உள்ள வீடுகளில் முதல் 100 யூனிட் இலவசம், அடுத்த, 100 யூனிட்டிற்கு, 245 ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது. இதேபோல் முதல், 500 யூனிட் வரை மானியம் வழங்கப்படுகிறது. 500 யூனிட் மேல் உள்ள வீடுகளில், முதல், 100 யூனிட் மட்டும் இலவசம்; மீதியுள்ள யூனிட்களுக்கு, அதற்கு ஏற்ப நிர்ணயித்துள்ள மின் கட்டணத்தை செலுத்த வேண்டும்.மற்ற மாநிலங்களும், குறைந்த மின் பயன்பாடு உள்ள வீடுகளுக்கு, 1 - 30, 30 முதல் 40 யூனிட் வரை என, ஒவ்வொரு பிரிவாக பிரித்து, அதற்கு ஏற்ப மானியம் வழங்குகின்றன. அவ்வாறு மானியம் போக செலுத்தக்கூடிய கட்டண விபரம், மேற்கண்ட அட்டவணையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.***மின் பயன்பாடு அதிகம் உள்ள முக்கிய மாநிலங்களில் 2 மாதங்களுக்கான மின் கட்டணம் - ரூபாயில்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

venugopal s
ஜூலை 17, 2024 13:59

மற்ற மாநிலங்கள் உள்ள மின் கட்டணத்தை விட தமிழகத்தில் குறைவு தான் என்று தானே நாங்களும் பல வருடங்களாக சொல்லிக் கொண்டே இருக்கிறோம். இப்போதாவது புரிந்து கொண்டு ஒப்புக் கொண்டால் சரி தான்!


ஆரூர் ரங்
ஜூலை 17, 2024 13:15

காற்றாலை மூலம் குறைந்த செலவில் மின்சாரம் எடுக்கும் இயற்கை அமைப்பு தமிழகத்தில் மட்டுமே அதிகம். இதற்கு அரசு காரணமில்லை. . ஆனால் தொடர்ந்த ஊழல்களால் மின்வாரியம் நஷ்டமடைந்து கட்டணத்தைக் கூட்டுகிறது. ஆக மற்ற மாநிலங்களுடன் ஒப்பீடு தவறு. இன்றுவரை 95 சதவீத அரசுக் கட்டிடங்களில் சோலார் பொருத்தப்படவில்லை.


MADHAVAN
ஜூலை 17, 2024 12:25

மின்கட்டணம் உயர்வு என்பது மக்களால் ஏற்றுக்கொள்ளக் கூடியதுதான், எதிர்க்கட்சிகள் பேசுவது அரசியல்தான், அவர்களுக்கும் மின்வாரிய உண்மை நிலவரம் தெரியும்,


Arul Narayanan
ஜூலை 17, 2024 10:17

தமிழ் நாட்டை விட குறைவாக மின் கட்டணம் உள்ள மாநிலங்களின் பட்டியலை அண்ணாமலை வெளியிடுவார்.


Thananjeyan E
ஜூலை 17, 2024 09:53

அடுத்து பஸ் கட்டண உயர்வை எதிர்பார்க்கலாம்


pandit
ஜூலை 17, 2024 07:15

விக்கிரவாண்டி மக்களுக்கு தமிழகம் நன்றிக்கடன் பட்டுள்ளது. அவர்கள் அளித்த ஆதரவு மின்கட்டண உயர்வு என்ற அன்பு பரிசாக தமிழகம் பெற்றுள்ளது.


Rpalnivelu
ஜூலை 17, 2024 07:15

திருட்டு த்ரவிஷன்களுக்கு நிர்வாகம் தெரியாது. நிதி / நீதி நிர்வாகம் சுத்தமாக தெரியாது, தெரியவே தெரியாது, தெரிந்ததெல்லாம் ஊழல், கொள்ளை, அடுக்கு மொழி பேசி ஊரை /மக்களை ஏமாற்றுவது, சாராயம் விற்பது, கள்ள சாராயம் விற்பது. குடும்ப வாரிசை ஊக்குவித்து சொத்து வாங்கி குவிப்பது


Svs Yaadum oore
ஜூலை 17, 2024 06:31

தமிழ் நாடு விடியல் திராவிடர்கள் ஆளும் மாநிலம் .....விடியல் திராவிடர்கள் நெற்றி வியர்வை நிலத்தில் சிந்த மிக கடுமையாக உழைத்து , பல தியாகங்கள் செய்து , அவர்கள் சொந்த காசில் செலவு செய்து தமிழ் நாட்டை நன்கு படித்து முன்னேறிய அதிக வரி செலுத்தும் மாநிலமாக மாற்றியுள்ளார்கள் ...இந்த மாநிலத்தை படிக்காத பின்தங்கிய வடக்கன் மாநிலங்களான குசராத்து உத்தர பிரதேசம் மேற்கு வங்கம் மாநிலங்களுடன் ஒப்பிடுவதே தவறு ....விடியல் சொல்வது போல தமிழ் நாட்டை முன்னேறிய ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடுவதுதான் முறையாக இருக்கும் ...


Kasimani Baskaran
ஜூலை 17, 2024 05:35

மஹாராஷ்டிராவில் கொள்ளைக்கட்டணம் வசூலிக்கப்படுவது போல தமிழகத்தில் வசூலிக்கப்படவிலை என்று அடுத்த உருட்டு வரும். அதே சமயம் அங்குள்ள சராசரி வருமானம் போன்றவை பற்றி சொல்லவே மாட்டார்கள்.


hariharan
ஜூலை 17, 2024 05:21

மின்சார நுகர்வு கட்டணம் இரண்டு மாதத்திற்கு பதிலாக மாதத்திற்கு ஒரு முறை என்று மாற்றப்படும் என்ன திமுக தேர்தல் வாக்குறுதி என்ன ஆயிற்று.


மேலும் செய்திகள்