உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மதுரை மீனாட்சி கோவிலின் வீர வசந்தராயர் மண்டபம், புது மண்டபம் நிலை என்ன? ஐகோர்ட் கேள்வி

மதுரை மீனாட்சி கோவிலின் வீர வசந்தராயர் மண்டபம், புது மண்டபம் நிலை என்ன? ஐகோர்ட் கேள்வி

மதுரை:மதுரை மீனாட்சி அம்மன்கோவிலில் தீ விபத்தில் சேதம் அடைந்த வீர வசந்தராயர் மண்டபத்தின் தற்போதைய நிலை என்ன என்பது குறித்து பதில் அளிக்க மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டு உள்ளது.மதுரையை சேர்ந்த வக்கீல் மணிபாரதி தாக்கல் செய்த பொது நல மனு குறித்து மதுரை மீனாட்சி அம்மன்கோவில் இணை ஆணையருக்கு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டு இருப்பதாவது. வீர வசந்தராயர் மண்டபத்தின் தற்போதைய நிலை என்ன, எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து நிலை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். மேலும் புது மண்டபம்புதுப்பித்தது தொல்லியல் சின்னமாக பாதுகாக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து பதில் மனு தாக்கல்செய்ய வேண்டும் என கேள்வி ஐகோர்ட் கிளை உத்தரவிட்டு வழக்கை ஜூலை மாதம் 8-ம் தேதிக்கு ஒத்தி வைத்து உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை