உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அமைச்சர் உதயநிதி சொன்ன நீட் ரகசியம் என்னாச்சு: கேட்கிறார் இ.பி.எஸ்.,

அமைச்சர் உதயநிதி சொன்ன நீட் ரகசியம் என்னாச்சு: கேட்கிறார் இ.பி.எஸ்.,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: அமைச்சர் உதயநிதி சொன்ன நீட் ரத்து ரகசியம் எப்போது தான் வெளியில் வரும்? என அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., கேள்வி எழுப்பியுள்ளார்.அவரது அறிக்கை: தஞ்சாவூர் மாவட்டம் சிலம்பவேளங்காடு பகுதியைச் சேர்ந்த மாணவர் தனுஷ், கடந்த 2 ஆண்டுகளாக நீட் தேர்வு எழுதியும் தேர்ச்சி பெற முடியாததால் தன் இன்னுயிரை மாய்த்துக்கொண்டதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. நீட் ரத்து என்ற பெயரில் அரசியல் நாடகம் நடத்தும் திமுக முதல்வர், தன்னுடைய ஒன்றுக்கும் உதவாத வெற்று விளம்பரப் பேச்சுகளை நம்பி ஏமாந்து உயிரை மாய்த்துக் கொள்ளும் மாணவர்களின் ரத்தக் கறைகள் தனது கைகளில் இருப்பதை உணர வேண்டும். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=iz2ew0c3&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

நீட் ரத்து ரகசியம்

40 எம்பிக்களை வைத்து பார்லிமென்டில் என்ன செய்துகொண்டு இருக்கிறீர்கள் முதல்வர் ஸ்டாலின் அவர்களே? அமைச்சர் உதயநிதி சொன்ன அந்த நீட் ரத்து ரகசியம் எப்போது தான் வெளியில் வரும்? இன்னும் எத்தனை மாணவச் செல்வங்கள் உயிரிழப்பதை நாம் பார்க்க வேண்டும்? நீட் ரத்து விவகாரத்தில் மாணவர்களை ஏமாற்றும் திமுக அரசுக்கு கடும் கண்டனம். இனியாவது நீட் ரத்து குறித்து ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் ஏதேனும் இருப்பின் மேற்கொள்ளுமாறு முதல்வரை வலியுறுத்துகிறேன்.

சாதனைக் கற்கள்

மாணவச் செல்வங்களே, உயிர் என்பது இன்றியமையாத ஒன்று. அதனை இழக்க வேண்டும் என்ற எண்ணம் ஒருபோதும் உங்கள் மனதில் வரக்கூடாது. வாழ்வில் பல சோதனைகள் வந்தாலும் அதனை நேரே எதிர்கொண்டு சாதனைக் கற்களாக மாற்றப் பாருங்கள். இந்த உலகத்தில் உங்களுக்கென்ற ஒரு அற்புதமான இடம் எப்போதும் இருக்கும் என்பதை நினைவிற்கொள்ளுங்கள். இவ்வாறு இ.பி.எஸ்., கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

krishna
ஆக 17, 2024 17:14

AAMAM KODANADU KOLAI KOLLAI RAGASIYAM ENNA AACHU.


தர்மராஜ் தங்கரத்தினம்
ஆக 17, 2024 16:27

சனாதனத்தை ஏன் கொசு வை அடிக்கிற மாதிரி அடிக்க முடியல ????


N.Purushothaman
ஆக 17, 2024 15:39

எப்படி குடிகாரன் மதுப்பிரியர் பேச்சு விடிஞ்சால் போச்சோ அதே மாதிரி தான் இதுவும் ...


karupanasamy
ஆக 17, 2024 15:27

பதிலுக்கு பங்காளி கொடநாடு கொலைன்னு சொல்லுவாரு எட்டப்பா


Suppan
ஆக 17, 2024 15:14

நீட் ரஹஸ்யமா? ஏழு கடல்கள் ஏழு மலைகளைத்தாண்டி ஒரு தீவில் ஒரு மரத்தின் அடியில் உள்ள வேரில் குடிகொண்டுள்ள புழுவின் வயிற்றில் உள்ளது. தேடிக்கண்டுபிடியுங்கள் பழனிசாமி ஐயா? உதயண்ணா தான் விளங்காமல் திமுகவின் வழக்கமான புருடாவை விட்டிருக்கிறார் என்பது நீட் எழுதும் மாணவர்களுக்குத் தெரியும் . தமிழக மக்களுக்கு இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும் .


Jysenn
ஆக 17, 2024 14:14

Komaaligal Rajyam.


Rajarajan
ஆக 17, 2024 13:59

நேற்றோடு நீ சொன்ன வார்த்தை, காற்றோடு போயாச்சு. திருமதி. நளினி சிதம்பரத்திடம் இதுபற்றி தி.மு.க. இதுவரை பேட்டி எடுக்காதது ஏன் ? எந்த தனியார் தொலைக்காட்சியும் கூட, அவரை தேடிப்பிடித்து, உண்மையை வெளிப்படுத்தாதது ஏன் ஏன் ஏன் ??


Indhuindian
ஆக 17, 2024 13:52

அவர்தான் ஏற்கனவே சொல்லிட்டாரே புலிக்கு பயந்தவங்கள்லாம் ஏன் மேலே படுத்துகொங்குன்னு அப்புறம் என்ன. கொஞ்சநாள் இருங்க தேர்தல் சமயத்துல இன்னும் ஏதாவது ஓவர் புருடா வுடைமையா இருப்பாங்க நீட் தேர்வு, சனாதனம், சமூகநீதி, இந்தி எதிப்பு, மாநில சுயாட்சி இதெல்லாம் திராவிட அரசியல் இருக்கறவரைக்கும் அப்படியே சாகமா இருக்கும் வோட்டு போட்டீங்கல்ல எண்ஜோய்


Anand
ஆக 17, 2024 13:40

மாறி மாறி விளையாடுங்க....


Kasimani Baskaran
ஆக 17, 2024 13:29

சீலிட்ட கவரில் போட்டு நீதிமன்றத்திடம் கொடுத்து விட்ட படியால் அதை யாரும் அறிந்து கொள்ள முடியாது. தலைமை நீதிபதியாக பிரியப்பட்டு கவரை பிரித்து பார்த்தல் அந்த ரகசியம் உலகுக்கு தெரியவரும்.


மேலும் செய்திகள்