உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / எங்கள் குறைகளை யாரிடம் சொல்வது? :முதல்வர் தனிப்பிரிவு ஊழியர்கள் குமுறல்!

எங்கள் குறைகளை யாரிடம் சொல்வது? :முதல்வர் தனிப்பிரிவு ஊழியர்கள் குமுறல்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'பொது மக்கள் தங்கள் பிரச்னைகளுக்கு தீர்வு காண, எங்கள் அலுவலகத்தில் மனு கொடுக்கின்றனர். நாங்கள் படும் சிரமங்களுக்கு யாரிடம் போய் மனு கொடுப்பது' என, முதல்வரின் தனிப்பிரிவு அலுவலக ஊழியர்கள் குமுறுகின்றனர்.சென்னை தலைமை செயலகத்தில், முதல்வரின் தனிப்பிரிவு அலுவலகம் உள்ளது. தாலுகா, மாவட்ட அளவில் உள்ள அதிகாரிகளிடம் மனு கொடுத்து, நடவடிக்கை எடுக்காத நிலையில், முதல்வர் அலுவலகத்தில் மனு கொடுத்தால், தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை மக்களிடம் உள்ளது.

நுாற்றுக்கணக்கானோர்

எனவே, மாநிலம் முழுதுமிருந்து தினமும் நுாற்றுக்கணக்கானோர் வருகின்றனர். தனிப்பிரிவு ஊழியர்கள் மனுவை பெற்றுக்கொண்டு, அதற்கான சான்றை, எஸ்.எம்.எஸ்., தகவலாக அனுப்புகின்றனர்.அதிலுள்ள பதிவு எண்ணை வைத்து, தங்கள் மனு மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது; எந்த துறையில் மனு உள்ளது என்ற விபரத்தை, இணையதளம் வாயிலாக அறிய முடியும்.தனிப்பிரிவு ஊழியர்கள், தினமும் தங்களிடம் மக்கள் கொடுக்கும் மனுக்களை, கணினியில் பதிவேற்றம் செய்து, சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்புகின்றனர்.அந்த மனு மீது நடவடிக்கை எடுத்து, அந்த விபரத்தை அந்த துறையினர் தெரியப்படுத்துகின்றனர். அதன்பின், அந்த விபரம் மனுதாரர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.கடந்த 2021ல் முதல்வரின் தனிப்பிரிவு, முதல்வரின் உதவி மையம், ஒருங்கிணைக்கப்பட்ட குறை தீர்ப்பு மேலாண்மை அமைப்பு, உங்கள் தொகுதியில் முதல்வர் துறை ஆகியவை ஒருங்கிணைக்கப்பட்டு, 'முதல்வரின் முகவரி' என்ற புதிய துறை உருவாக்கப்பட்டது.'ஆன்லைன்' வழியாக மனு அனுப்ப வசதி இருந்தாலும், நேரடியாக முதல்வர் தனிப்பிரிவு அலுவலகத்தில் கொடுப்பதையே பலரும் விரும்புகின்றனர்.ஆனால், இப்பிரிவில் 40 சதவீதத்துக்கும் அதிகமான பணியிடங்கள் காலியாக இருப்பதால், பணிகள் பாதிக்கப்படுவதாகவும், அதிக பணிச்சுமையால் அவதிப்படுவதாகவும் ஊழியர்கள் குமுறுகின்றனர்.

பணிச்சுமையால் தவறு

இது குறித்து, ஊழியர்கள் சிலர் கூறியதாவது:பொது மக்கள் தங்கள் பிரச்னைகளுக்கு தீர்வு காண, முதல்வர் தனிப்பிரிவு அலுவலகம் வருகின்றனர். அங்கு பணிபுரியும் நாங்கள், யாரிடம் எங்கள் குறைகளை சொல்வது என்று தெரியவில்லை.தனிப்பிரிவு அலுவலகத்தில், 65க்கும் மேற்பட்ட பணியிடங்கள் உள்ளன. இவற்றில், பிரிவு அலுவலர், உதவி பிரிவு அலுவலர், தட்டச்சர், உதவியாளர், அலுவலக உதவியாளர் என, 25க்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன. பொது மக்கள் அளிக்கும் மனுக்களை, தட்டச்சர் இல்லாமல் கணினியில் பதிவு செய்வது சிரமமாக உள்ளது.உதவிப்பிரிவு அலுவலர் பணியிடங்கள் மட்டும் 10 காலியாக உள்ளன. இவற்றை நிரப்ப, அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், பணியில் உள்ளவர்களுக்கு கூடுதல் சுமை ஏற்படுகிறது.இது தவிர, முதல்வரின் முகவரி துறை உருவாக்கப்பட்ட பின், கூடுதல் பணி செய்ய வேண்டி உள்ளது. பணிச்சுமை காரணமாக தவறுகள் நடக்கின்றன. இதனால், அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுகிறது. இதை தவிர்க்க, காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

subramanian
மே 31, 2024 14:48

அரசு ஊழியர்கள், பொய் வாக்குறுதியை நம்பி மோசமான நிலையில் உள்ளனர்.


Bakavathi
மே 31, 2024 12:18

ஒப்பந்த ஊழியர்கள் பணியமர்த்த பட்டால் சீக்கிரம் வேலை முடியும்


Suriyanarayanan
மே 31, 2024 09:44

சி எம் மெயில் எங்களின் குடியிருப்பு பற்றி பல மெயில்கள் போட்டு இது வரை பதில் இல்லை.நாங்கள் 700 குடும்பங்கள் தவிக்கிறோம் எத்தனை முறை மெயில் போடுவது? ஆண்டவன் தான் எங்களை காப்பற்ற வேண்டும். இறைவன் எல்லோருக்கும் மேலானவர் காலம் பதில் சொல்லும் வணக்கம். நன்றி


DHESIKAN
மே 31, 2024 11:12

குடியிருப்பை காலி செய்து, எதாவது தென் மாவட்ட கிராமத்தில் போய் குடியேறுங்கள். யாரையும் நம்பி மெயில் போடாதிர்கள். இதுதான் காலத்தின் பதில். இதனால் உங்களின் வாரிசுகள் மற்றும் உங்கள் எதிர்காலம் பாதுகாக்கப்படும்.


நக்கீரன் (நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே)
மே 31, 2024 09:41

பணிச்சுமை அதிகம் என்றால் வேலையை தாராளமாக விட்டுவிடலாம். எனக்கு தெரிந்து ஒரு வேலைக்கும் லாயக்கு இல்லாதவர்கள்தாம் இப்படி அரசு துறைகளை ஆக்கிரமித்து உட்கார்ந்துகொண்டு அரசையும் மக்களையும் ஏமாற்றிக்கொண்டு இருக்கிறார்கள்.


R.RAMACHANDRAN
மே 31, 2024 07:31

முதல்வரின் தனிப்பிரிவு மற்றும் முதல்வரின் முகாரி கணினிவழி மனு செய்தல் எல்லாம் மக்களை ஏமாற்றும் வேலை.இந்த நாட்டில் எங்கு மனு செய்தாலும் அவை குற்றவாளிகளுக்கு வந்து எந்த நடவடிக்கையும் இன்றி நிராகரிக்கப்படுகிறது அல்லது ஏற்றுக் கொள்ளப்பட்டது என பதிவு செய்து முடிவுக்கு கொண்டுவருவதால் மீண்டும் மீண்டும் மனு செய்வதால் மனுக்கள் குவிகின்றன.இவர்கள் என்னவோ சாத்தியவான்கள் போல பேசுகின்றனர்.


Sankar Ramu
மே 31, 2024 05:48

முதல்வர் கொடைகானலில் இருக்காரா? ??


Kasimani Baskaran
மே 31, 2024 05:26

அத்தியாவசியமான இடங்களைக்கூட நிரப்பாத இவர்கள் கோடிக்கணக்கில் வேலைகளை உருவாக்கப்போகிறார்களாம்...


rama adhavan
மே 31, 2024 03:23

மாறுதல் வாங்கிக்கொண்டு செல்லவும். இருந்து கொண்டு புலம்ப வேண்டாம்.


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை