உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மீனவர் பிரச்னைக்கு காரணம் யார்; தமிழக கவர்னர் குற்றச்சாட்டு!

மீனவர் பிரச்னைக்கு காரணம் யார்; தமிழக கவர்னர் குற்றச்சாட்டு!

ராமேஸ்வரம்: தமிழக மீனவர்கள் சந்திக்கும் பிரச்னைகளுக்கு, 1974ம் ஆண்டு நடந்த தவறும், அதற்கு அப்போதைய மத்திய அரசுடன் கூட்டணியில் இருந்த இன்றைய ஆளும் கட்சியும் தான் காரணம் என்று என தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி., குற்றம் சாட்டி உள்ளார்.ராமேஸ்வரம் தங்கச்சிமடம் சென்ற தமிழக கவர்னர் ரவி, இலங்கை அரசை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மீனவர் குடும்பத்தினரை சந்தித்து கோரிக்கைளை கேட்டறிந்தார். பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு ஆறுதல் கூறினார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=438v7qto&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இது குறித்து சமூகவலைதளத்தில் கவர்னர் ஆர்.என்.ரவி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ராமேஸ்வரத்துக்கு இன்று நான் சென்றிருந்தபோது, துன்பத்தில் உழலும் நமது மீனவ சமுதாயத்தைச் சேர்ந்த சகோதர, சகோதரிகளைச் சந்தித்தேன். அவர்களின் நிலை மீது நான் ஆழ்ந்த இரக்கம் கொள்கிறேன். நமது வறியநிலை மீனவர்களின் வாழ்வாதார கவலைகளுக்கு காரணமான மிகவும் உணர்திறனற்ற 1974ம் ஆண்டு அநியாயமான ஒப்பந்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் அவர்கள். கச்சத்தீவு சுற்றுவட்டார கடல் பகுதியில் நமது மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையைப் பறித்ததன் மூலம் மத்தியிலும், தமிழகத்திலும் அப்போது ஆட்சியில் இருந்த அரசுகள் பெரும் பாவத்தை இழைத்தன. அன்றிலிருந்து இன்று வரை நமது மீனவ சமூகம் தொடர்ந்து இன்னல்களை அனுபவித்து வருகிறது. இலங்கை அரசால் அவர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களின் படகுகள் பறிமுதல் செய்யப்படுகின்றன. இந்த நீடித்த பிரச்னைக்கு நிரந்தரமான தீர்வு வேண்டும். இதற்கு மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும். இந்தப் பிரச்னையை அரசியலாக்குவதற்குப் பதிலாகவும், மத்திய அரசைக் குறை கூறுவதற்குப் பதிலாகவும், ஆக்கபூர்வமான அணுகுமுறையை மாநில அரசு மேற்கொண்டால் அது பாதிக்கப்பட்ட மக்களின் கண்ணீரைத் துடைப்பதற்கு பெரிதும் உதவும். எல்லாவற்றுக்கும் மேலாக, 1974ம் ஆண்டு நடந்த தவறும், அதற்கு அப்போதைய மத்திய அரசுடன் கூட்டணியில் இருந்த இன்றைய ஆளும் கட்சியும் தான் காரணம். இவ்வாறு கவர்னர் ரவி கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

தர்மராஜ் தங்கரத்தினம்
மார் 02, 2025 20:29

கிம்ச்சை மன்னர் இதை பார்த்துட்டு அடுத்த வாரம் அங்கே போயி கொடுக்க வேண்டியதைக் கொடுத்து மீனவர்களை நல்லா கூல் பண்ணிடுவாரு .....


Sundar R
மார் 02, 2025 20:26

திமுகவினரின் தலைக்கனமும், தெனாவட்டும், தாங்கள் செய்த தவறுக்குக் கூட தமிழக மக்களிடம் மன்னிப்பு கேட்காத அயோக்கியத்தனமும், சம்பந்தப்படாத தற்போதைய மத்திய அரசுக்கு மேதாவித்தனமாக லெட்டர் எழுதி தமிழக மக்களின் காதுகளிலிருந்து கால்கள் வரை பூச்சுற்றுவதும், கச்சத்தீவு விஷயத்தில் தெரிகிறது. ஏழை மீனவமக்கள் பாதிக்கப்படும் போது அதற்குக் காரணமான திமுகவினரும், காங்கிரஸும் தான் பொதுமக்களுக்கு பதில் சொல்ல வேண்டும். மற்றவர்கள் யாரும் இதற்கு பொறுப்பல்ல.


vivek
மார் 02, 2025 19:17

ஓடமுடியாது.....வேண்டும் என்றால் கொத்தடிமைகள் உண்ணாவிரதம் இருக்கலாம்....


Oviya Vijay
மார் 02, 2025 18:45

ஆக மொத்தத்தில் இங்கே பதிவிடும் சங்கிகள் பழங்கதைகள் மட்டும் பேசிக் கொண்டே இருப்பீர்கள். அப்படித் தானே. இப்போது மூன்றாவது முறையாக மத்தியில் சொ(ச)ங்கி ஆட்சி பொறுப்பேற்றும் இந்த பிரச்சனைக்கு இன்னமும் உங்களால் நிரந்தர தீர்வு காண முடியவில்லை... அதற்கு உங்கள் எவரிடம் இருந்தும் பதிலில்லை. தமிழகமும் இந்தியாவின் ஒரு மாநிலம் தானே... கேட்டால் என்னை வசை பாட மட்டும் கங்கணம் கட்டிக்கொண்டு வரிசையாக வருவீர்கள்... தூதரக ரீதியில் இரு நாட்டு மீனவர்கள் மத்தியில் அடிக்கடி சந்திப்புக்கு ஏற்பாடு... கடலில் நம் நாட்டுக்குரிய எல்லையை நம் மீனவர்கள் கண்டுபிடிக்க எளிதான வழிமுறைகள். இவையெல்லாம் நம் எல்லையை நம் மீனவர்கள் எளிதாக அறிந்து கொண்டு எல்லை தாண்டாமல் இருக்க முடியும். அவர்களுக்கு வழிகாட்ட நிரந்தர இந்திய கடற்படையின் ரோந்து உதவி... இவை தான் இப்போதைய பிரச்சனைக்கு மிகவும் தேவையான வழிமுறைகள்... வேண்டுமென்றே எல்லை தாண்டி மாட்டிக்கொண்டு லட்சக்கணக்கில் அபராதம் செலுத்த நம் மீனவர்களுக்கு என்ன தலையெழுத்தா??? லட்சக்கணக்கான மதிப்பிலான படகுகளை அவர்கள் நம் மீனவர்களிடமிருந்து பறிமுதல் செய்து நமக்கு திரும்ப கிடைக்காமல் அது அங்கேயே ஏலம் விடப்படுகிறது... நம் மீனவர்கள் மீது குறைகள் இருப்பின் அதை கலந்து பேசி நிவர்த்தி செய்ய துப்பில்லாமல் மத்திய அரசில் மூன்றாவது முறையாக பத்து ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி செய்து என்ன பிரயோஜனம்...


Visu
மார் 02, 2025 19:50

14 வரும் நல்ல செழிப்பான துறைகளுக்காக மட்டும் பேரம் பேசினவரிடம் இத கேட்டுயிருந்தால் உங்கள பாராட்டியிருக்கலாம்


மோகனசுந்தரம் லண்டன்
மார் 02, 2025 20:39

ஓவியா அவர்களே ஒரு சொத்தை கொடுத்து விட்ட பின் அதை எப்படி மீட்பது. அது முடியாத காரியம் அல்லவா அதனால் தான் அன்று தவறிழைத்ததை சுட்டிக்காட்டுகிறார்கள்.


அப்பாவி
மார் 02, 2025 18:32

கச்சத்தீவு இந்தியாவை வட இகங்கைக்கு அருகில் உள்ளது. கச்சத்தீவை குடுத்ததின் மூலம் பல்லாயிரக்கணக்காண சதுர கிலோ மீட்டர் கடல் பரப்பளவை நாம் பெற்றிருக்கிறோம். இங்கே இருக்குற மீனளையெல்காம் அரிச்சி புடிச்சி தின்னாச்சு. இன்னிக்கு கச்சத்தீவு நம் வசம் இருந்தாலும் அங்கேயு ஒரு புழு பூச்சி இல்லாம ப்ய்டிச்சு தின்னு, இலங்கைப் பக்கம் போய்தான் மீன் பிடிச்சு மாட்டிப்போம். இதுக்கு ஒரே தீர்வு, ட்ரம்ப் மாதிரி ஸ்ரீலங்காவையே விலை குடுத்து வாங்க வேண்டியதுதான். 1970 களில் சுமார் ஆயிரம் பேர் மீன் பிடிச்சா இடத்தில் இன்னிக்கி 30, 40 ஆயிரம் பேர் மீன் புடிச்சா என்ன ஆகும்? வாழ்வாதாரம் அத்தனை பேருக்கும் குடுக்க முடியாது.


திருட்டு திராவிடன்
மார் 02, 2025 20:41

அப்பாவி அவர்களுக்கு வாழ்த்துக்கள். இப்பொழுதுதான் ஒரு அருமையான கருத்தை பதிவிட்டு உள்ளீர்கள்


Suppan
மார் 02, 2025 16:44

இதில் சம்பந்தப்பட்டவர்கள் சொல்வது. கச்சத்தீவை ஊற்றி உள்ள இடங்களில்தான் நிறைய மீன்கள் கிடைக்கின்றன. ஆகவே பல நேரங்களில் தெரிந்தே நம் மீனவர்கள் அங்கு செல்கின்றனர். மாட்டிக்கொள்கின்றனர். ஸ்ரீலங்காவைப்பொறுத்தவரை அவர்களுடைய எல்லையை மீறுபவர்களை கைது செய்வதைக் குறை சொல்ல முடியாது. திமுகவோ காங்கிரஸோ தாங்கள் செய்த ஹிமாலயத் தவறை ஒப்புக்கொள்ளாமல் மத்திய அரசைக் குறை சொல்லியே காலம் கழிக்கின்றனர். இன்றுவரை கச்சத்தீவைக் காவு கொடுத்த விஷயத்துக்கு காங்கிரசம் திமுகவும் காரணம் சொல்லவில்லை. பாராளுமன்ற ஒப்புதலும் பெறவில்லை. ஓவியா போன்ற உபி க்கு ஜால்றா தட்டுவதைத் தவிர வேறு ஒன்றும் தெரியாது.


ஆரூர் ரங்
மார் 02, 2025 16:29

நேற்று கூட இலங்கை தமிழர் தலைவர் விக்னேஷ்வரன் வட இலங்கையின் மீன்வளத்தை தமிழக மீனவர்கள் அத்துமீறி நுழைந்து சுருக்குமடி வலைகளைப் பயன்படுத்தி சுரண்டுறாங்க என புகாரளித்துள்ளார். வறுமையில் வாடும் இலங்கைத் தமிழ் கட்டுமர மீனவர்கள் உணவில் மண்ணள்ளிப் போடும் திராவிஷத் திருடர்கள்.


Dharmavaan
மார் 02, 2025 15:41

இதற்கு இப்போதைய தீர்வு என்ன .கட்சத்தீவை திரும்பப்பெறும் வழி என்ன


Oviya Vijay
மார் 02, 2025 14:29

இது ஒன்றும் முதல்முறை நடக்கக் கூடியது அல்ல... ஆயிரக்கணக்கான முறை தொடர்ந்து நடந்துகொண்டு தான் உள்ளது... மூன்றாம் முறை தொடர்ந்து மத்தியில் பதவி ஏற்றிருக்கும் பிஜேபியின் கேவலமான அரசியலையே இது காட்டுகிறது... பத்து வருடங்களுக்கு மேலாக மத்தியில் பதவியில் இருக்கும் சங்கீ அரசுக்கு இது தெரியாமல் இல்லை... கண்டும் காணாதது போல் நடந்து கொண்டு வருகின்றனர் என்பதே உண்மை... இலங்கை அரசு திவாலாகும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்ட போதும் கூட நம் மத்திய அரசு அதற்கு கை கொடுக்கத் தான் முனைகிறது... அவர்களுக்கு பொருளாதார சிக்கலில் இருந்து மீண்டு வர பண உதவி, UPI Payment முறையை அந்நாட்டில் நடைமுறைப் படுத்துவதற்கு உதவி, நம் இந்திய நாட்டில் தயாரிக்கப் படும் ரயில் பெட்டிகளை அவர்களுக்கு கொடுத்து உதவி என பல வகைகளில் உதவி செய்ய சித்தமாக இருக்கிறதே தவிர தமிழகத்தை சேர்ந்த இந்திய மீனவர்கள் தொடர்ந்து இலங்கை ராணுவத்தினரால் தாக்கப் படுவதற்கும், கைது செய்யப்பட்டு படகுகள் பறிமுதல் செய்யப்படுவதற்கும் ஒரு நிரந்தர தீர்வு காண முயலவில்லை... இலங்கை அரசுக்கு ஒரு கடிவாளம் போடக் கூட துணிவில்லை. துணிவில்லை என்பதை விட இலங்கையை நம்மால் ஆட்டிப் படைக்க முடியும் என்ற நிலை இருந்தும் கூட அதை மத்திய அரசு விரும்பவில்லை என்பதே உண்மை. நமக்கு ஓட்டு போடாத தமிழக மக்களுக்கு நாம் ஏன் உதவி செய்ய வேண்டும் என்ற இருமாப்பில், நடப்பதை வேடிக்கை மட்டும் பார்த்துக் கொண்டிருக்கிறது மத்திய அரசு... தமிழக மக்களை தொடர்ந்து பல்வேறு வழிகளில் வஞ்சித்துக் கொண்டிருக்கும் பிஜேபி அரசு தாங்கள் செய்யும் செயல்களால் என்றைக்குமே தமிழகத்தில் கால் பதிக்கவே முடியாது என்பதை உணர மறுக்கின்றனர்... வெளியுறவுத் துறை அமைச்சர் மற்றும் பல மட்டத்து உயர் அதிகாரிகள் அவ்வப்போது இலங்கைக்கு விஜயம் செய்தும் எந்த பலனுமில்லை... தங்களுக்கு தெரிந்த பக்கோடா செய்வது எப்படி என்பதை அவர்களுக்கு சொல்லிக் கொடுத்து விட்டு வருகின்றனர் என்றே தோன்றுகிறது. வேறு ஒன்றும் பிரயோஜனமாக எதுவும் அவர்கள் செய்வதில்லை... நம் இந்திய நாட்டில் மாநில அரசுகளுக்கு ராணுவத்திற்கு உத்தரவிடும் வகையில் அதிகார வரம்பு இல்லை... அதன் காரணமாக மத்திய அரசை சார்ந்தே இருக்க வேண்டிய அவல நிலை நமக்கு. நமக்கு அவ்வாறான அதிகாரம் இருந்திருந்தால் இந்நேரம் இலங்கை மீனவர்கள் பெரும்பாலானோர் இந்திய ராணுவத்தினரால் சிறைபிடிக்கப்பட்டு தமிழக சிறைகளில் இருந்திருப்பர்... இனியும் பொறுத்திருக்காமல் தமிழகமே ஸ்தம்பிக்கும் அளவிலான ஒரு போராட்டத்தை தமிழகத்தில் உள்ள கட்சிகள் முன்னெடுத்துச் சென்றால் மட்டுமே மத்திய அரசு கொஞ்சமாவது சொரணை கொண்டு ஏதாவது துணிந்து செய்வதற்கு செவி மடுக்கும்... அதுவரை தமிழகத்தைச் சார்ந்த இந்திய மீனவர்களுக்கான பிரச்னைக்கு ஒரு நிரந்தர தீர்வு என்பது கேள்விக்குறியே...


Dharmavaan
மார் 02, 2025 15:44

கட்டுமரம்கெடுத்து வைப்பான்... பிஜேபி சரிசெய்ய வேண்டுமா


பேசும் தமிழன்
மார் 02, 2025 16:17

.. கச்ச தீவை இலங்கைக்கு தாரை வார்த்துக் கொடுத்தது யார்.... உங்கள் இண்டி கூட்டணி கான் கிராஸ் கட்சி தானே.... அதற்க்கு உடந்தை அப்போது ஆட்சியில் இருந்த திமுக கட்சி.... இப்போது தமிழக மீனவர்கள் மீது அக்கறை இருப்பது போல நடிக்கிறீர்கள்..... மக்களுக்கு எல்லா உண்மைகளும் தெரிந்து விட்டது.... அதனால் இப்படி எதையாவது சொல்லி மடை மாற்ற முடியாது..... முந்தைய கான் கிராஸ் மற்றும் திமுக கூட்டணி ஆட்சியில் தான்..... 700 க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சுட்டு கொல்லப்ட்டார்கள்..... ஆனால் இப்போது அது போன்ற செய்தி எதுவும் வருவதில்லை..... இலங்கை வாலை சுருட்டி கொண்டு இருக்கு..... அது உங்களுக்கு பொறுக்கவில்லையா ???


saravan
மார் 02, 2025 16:37

வழக்கம் போல் மோடி வெறுப்புணர்வை இங்கு உமிழ்ந்துள்ளாய்...நீ ஒரு திராவிட சொம்பு என்பது தெளிவு...மீனவர்கள் என்றால் கட்டுப்பாடு கிடையாதா...அடுத்தவன் வீட்டுக்குள் போனால் அடிக்கத்தான் செய்வான்...மீனை இலவசமாக கொடுக்கிறார்களா...??? பேராசை பெருநஷ்டம்...மற்ற மாநில மக்கள் பாதுகாப்பாக மீன் பிடிக்கவில்லையா...??? மீனவர்களை கொம்பு சீவி விட்டு வேடிக்கை பார்ப்பதே இந்த மாடல் அரசுதான் என்பதை மறந்து வெறுப்பை உமிழ்கிறாய்...மத்திய அரசு சங்கியே தவிர சொங்கி அல்ல...


தமிழ்வேள்
மார் 02, 2025 14:22

கள்ள கடத்தல் தொழிலில் ஈடுபட்டு திளைக்கும் அல்லேலூயா படகு ஓனர்கள் திராவிட கட்சிகளின் படகு ஓனர்கள் திருச்சபை பாஸ்டர் கும்பல் இவர்கள் அனைவரும் முதல் காரணம்..சிலோன் ராணுவம் கைது செய்தால் மட்டும் கூறுவார்கள்.இவர்களது தவறு வசதியாக மறக்க பட்டுவிடும்.. இலங்கை கடற்படை ஈவு இரக்கம் இல்லாமல் ஒரு பத்து பயல்களை குருவி சுடுவது போல சுட்டு பிணத்தை கடலில் மூழ்கடித்தால்தான் இவர்கள் வழிக்கு வருவார்கள்.


கோபாலகிருஷ்ணன் பெங்களூர்
மார் 02, 2025 15:43

உண்மை தமிழ்வேல்.....இதுவரை எத்தனை இலங்கை மீனவர்களை இந்திய கப்பற்படை சிறை பிடித்திருக்கிறது.... அவர்கள் எல்லை தாண்டி வருவதில்லை ....ஆனால் நம் மீனவர்கள் பேராசை காரணமாக எல்லையை கடக்கிறார்கள் தவிர எத்தனை முறை தான் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை மீட்பது.....இத்தனைக்கும் காரணமான கச்சத்தீவை தாரை வார்த்த காங்கிரஸ்சையோ அல்லது திமுகவையோ குற்றம் சாட்ட திராணி இல்லாத இவர்களுக்கு முட்டு கொடுத்து மத்திய அரசை குற்றம் சொல்லி தமிழக மீனவர்களுக்கு வக்காளத்து வாங்குகிறார்..... எல்லாவற்றிற்கும் மேலாக தேர்தல் என்று வந்தால் சர்ச்சுகளில் பாதர்கள் சொல்லும் திமுக, காங்கிரஸ்சுக்கு ஓட்டு போடுவது.....தங்களுக்கு பிரச்சனை என்று வந்தால் மத்திய பாஜக அரசை குற்றம் சொல்வது....நான் சாதாரண இந்தியன் பிரஜை அரசியல்வாதி இல்லை எனக்கு மீனவர்கள் ஓட்டு தேவை இல்லை.... ஆதனால் அவர்களின் தவறுகளை சுட்டி காட்டுவேன் என்னமோ தமிழக மீனவர்கள் தப்பே செய்யாதது போலவும் இலங்கை அரசு இந்திய எல்லையை கடந்து வந்து இந்திய மீனவர்களை சிறைப்பிடித்து செல்வதை போல இலங்கை அரசை குற்றம் சொல்கிறார்கள்.....இறுதியாக திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்பதை போல் மீனவராய் பார்த்து பேராசை எல்லை தாண்டுவதை நிறுத்தாவிட்டால் இதற்கு ஒரு தீர்வு கிடைக்காது.....!!!


சமீபத்திய செய்தி