| ADDED : ஜூலை 24, 2024 06:37 AM
கோவில்பட்டி : அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு கூறியதாவது: தமிழகத்தில் ரேஷன் கடைகளில் மக்களுக்கு எந்தவித பொருட்களும் கிடைப்பதில்லை. எதற்கெடுத்தாலும், 'டுவிட்' போடும் நடிகர் கமல்ஹாசன், மின் கட்டண உயர்வை கண்டித்து ஏன் டுவிட் போடவில்லை.இந்தியன் - 2 படத்தில், 'மனிதர்களின் ரத்தத்தை குடிக்கும் உனக்கு மண்ணிலே இடம் எதற்கு' என்று வசனம் பேசிக்கொண்டே, தவறு செய்தவர்களை கொலை செய்வார்.மின்கட்டண உயர்வும் மனிதர்களின் ரத்தத்தினை உரியும் நிகழ்வு தான். மின் கட்டண உயர்வு, விலைவாசி உயர்வு ஆகியவற்றை கண்டித்து இந்தியன் - 2 திரைப்படத்தைப் போல, முதல்வர் ஸ்டாலினையும் கேள்வி கேட்டிருக்க வேண்டும்.இவ்வாறு கூறினார்.