உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பத்திரப்பதிவு டோக்கன் நிறுத்தம் ஏன்?

பத்திரப்பதிவு டோக்கன் நிறுத்தம் ஏன்?

சென்னை: சார் - பதிவாளர் அலுவலகங்களில், 'ஆன்லைன்' முறையில், 'டோக்கன்' பெறும் வசதி இரண்டு நாட்களாக நிறுத்தப்பட்டுள்ளது.தமிழகத்தில், 582 சார் - பதிவாளர் அலுவலகங்களில், 'ஸ்டார் 2.0 சாப்ட்வேர்' வாயிலாக, பத்திர விபரங்கள் முன்கூட்டியே சரி பார்க்கப்படும். பத்திரம், அதை எழுதி கொடுப்பவர், பெறுபவர் குறித்த அடையாள ஆவணங்களும் சரி பார்க்கப்பட்ட பின், பத்திர பதிவுக்கான நேரம் ஒதுக்கி, 'ஆன்லைன்' முறையில் டோக்கன்கள் வழங்கப்படும். அந்த டோக்கன் வரிசை அடிப்படையில் தான் ஒவ்வொரு பத்திரமும் பதிவு செய்யப்படும்.இந்நிலையில், செப்., 2 முதல் ஆன்லைன் முறையில் புதிதாக டோக்கன் வழங்கப்படவில்லை. இதனால், சார் - பதிவாளர் அலுவலகங்களில் பத்திரப்பதிவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.இது குறித்து, பதிவுத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: பத்திரப்பதிவுக்கான, 'ஸ்டார் - 2.0' சாப்ட்வேர் மற்றும் இணையதளத்தில் தொழில்நுட்ப ரீதியாக சில மாற்றங்கள் செய்து வருகிறோம். இந்த பணிகளை முடிக்க, நான்கு நாட்கள் வரையாகும் என, தொழில்நுட்ப குழுவினர் தெரிவித்துள்ளனர். அதனால், டோக்கன் வழங்கும் பணிகளில் ஏற்பட்டுள்ள பாதிப்பு தற்காலிகமானது தான். விரைவில் சரி செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Kasimani Baskaran
செப் 04, 2024 05:35

இரவு பகலாக வேலை செய்து முடிப்பதை விட்டுவிட்டு நான்கு நாட்கள் ஜவ்வாக இழுத்து வேலை செய்வதைப்பார்த்தால் ஒப்பந்தம் பெற்றது அரசு துறை நிறுவனமாக இருக்குமோ என்ற சந்தேகம் வருகிறது. பாமரர் வேலை செய்யும் நிறுவனமாக இருக்க வாய்ப்பு இருக்கிறது.


முக்கிய வீடியோ