உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஏடிஸ் கொசுக்கள் வீரியம் அதிகரிப்பா? மரபணு பகுப்பாய்வு செய்கிறது அரசு!

ஏடிஸ் கொசுக்கள் வீரியம் அதிகரிப்பா? மரபணு பகுப்பாய்வு செய்கிறது அரசு!

சென்னை: ''இந்தியாவில் முதல் முறையாக, டெங்கு காய்ச்சலில் வீரியம் குறித்த மரபணு பகுப்பாய்வு, பொது சுகாதாரத்துறை ஆய்கவகத்தில் ஓரிரு நாட்களில் துவங்கும்,'' என, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்.பருவநிலை மாற்றத்தால், 'ஏடிஸ் - இஜிப்டி' வகை கொசுக்களால், டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்தாண்டில் இதுவரை, 12,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 5 பேர் உயிரிழந்துள்ளனர். தினமும், 200க்கும் மேற்பட்டோர், டெங்கு காய்ச்சல் பாதிப்பால் சிகிச்சை பெற்று வருகின்றனர்.டெங்கு பாதிப்பு அதிகரித்து வருவதால், 'ஏடிஸ்' கொசுக்களின் ஆயுட்காலம் குறித்த மரபணு பகுப்பாய்வு, பொது சுகாதாரத்துறை ஆய்வகத்தில் மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை நேற்று ஆய்வு செய்தபின், அமைச்சர் சுப்பிரமணியன் அளித்த பேட்டி:ஐந்தாண்டுக்கு ஒருமுறை, டெங்கு தீவிர பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. டெங்கு குறித்து ஆய்வு செய்ய, ஏராளமான ஆய்வகங்கள் தனியார் அரசு மருத்துவமனைகளில் இருந்தாலும், அதன் வீரியம் குறித்த சோதனைக்கான ஆய்வகம் இல்லை. உலகம் முழுதும், 80 நாடுகளில் டெங்கு பாதிப்பு இருப்பதால், இந்தியாவில் முதன் முறையாக தமிழகத்தில், டெங்கு வீரியம் குறித்து, மரபணு பகுப்பாய்வு செய்யப்பட உள்ளது.இந்த மரபணு ஆய்வுக்காக, அமெரிக்காவில் இருந்து, வேதிப்பொருட்கள் வாங்கப்பட்டுள்ளன. ஓரிரு நாட்களில், டெங்கு காய்ச்சலின் வீரியம் குறித்த மரபணு பரிசோதனை நடைபெறும்.இவ்வாறு அவர் கூறினார்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை