உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கருணாநிதி நூற்றாண்டு நாணயங்களை தி.மு.க., வீசி எறிந்து விடுமா? அன்புமணி கேள்வி

கருணாநிதி நூற்றாண்டு நாணயங்களை தி.மு.க., வீசி எறிந்து விடுமா? அன்புமணி கேள்வி

சென்னை: தமிழக அரசின் ஆவணத்தில் இப்போது ₹ அடையாளத்தை நீக்கியிருக்கும் தி.மு.க., அதே அடையாளத்தைக் கொண்டிருக்கும் கருணாநிதி நினைவு நாணயங்களையெல்லாம் வீசி எறிந்து விடுமா? என்று பா.ம.க., தலைவர் அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார். அவரது அறிக்கை; தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை தொடர்பான முன்னோட்டத்தில் ரூபாய் என்பதன் அடையாளமான ₹ என்ற குறியீட்டை நீக்கி விட்டு, அதற்கு பதிலாக ரூ என்ற குறியீட்டை வைத்து, அதை ஏதோ புரட்சி போன்று தி.மு.க., அரசு விளம்பரம் செய்து கொண்டிருக்கிறது. தி.மு.க., அரசின் செயலற்ற தன்மையால் ஏற்படும் வேதனைகளைத் தாங்க முடியாமல் மக்கள் குமுறிக் கொண்டிருக்கும் நிலையில், அதை திசை திருப்பும் நோக்குடன் இத்தகைய நாடகங்களை தி.மு.க., அரசு அரங்கேற்றிக் கொண்டிருக்கிறது. இது கண்டிக்கத்தக்கது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=wxitlwb4&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0எதையாவது செய்து மக்களை பதற்றத்திலேயே வைத்திருக்க வேண்டும். எவரும் அரசை எதிர்த்து வினா எழுப்பாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற பரபரப்பில் பழைய வரலாறுகளை தி.மு.க., மறந்து விடுகிறது. ₹ அடையாளம் நேற்றோ, அதற்கு முன்நாளோ வெளியிடப்பட்டது அல்ல. 15 ஆண்டுகளுக்கு முன் 2010ம் ஆண்டு ஜூலை 15ம் தேதி தி.மு.க., அங்கம் வகித்த மன்மோகன்சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் தான் வெளியிடப்பட்டது. அப்போது அதை தி.மு.க., ஆதரித்தது. ₹ அடையாளத்தை வடிவமைத்தவர் ரிஷிவந்தியம் தொகுதி தி.மு.க., முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தர்மலிங்கத்தின் மகன் உதயகுமார். அந்த அடையாளத்தை வடிவமைத்ததற்காக 201ம் ஆண்டு ஜூலை 24ம் தேதி உதயகுமாரையும், அவரது குடும்பத்தினரையும் அன்றைய முதல்வர் கருணாநிதி, அவரது கோபாலபுரம் இல்லத்துக்கு வரவழைத்துப் பாராட்டினார். அப்போதெல்லாம் பெருமைக்குரியதாக போற்றிய அடையாளத்தை தான் தி.மு.க., இப்போது நீக்கியிருக்கிறது.அவ்வளவு ஏன்? கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 18ம் தேதி கருணாநிதியின் பிறந்தநாள் நூற்றாண்டையொட்டி ₹.100 நினைவு நாணயம் மத்திய அரசால் வெளியிடப்பட்டது. மத்திய அரசால் மிகவும் எளிமையாக நடத்தப்படவிருந்த அந்த விழாவை தி.மு.க., அரசு, மக்களின் வரிப்பணத்தில் மிகவும் பிரமாண்டமாக நடத்தியது. அப்போது வெளியிடப்பட்ட நாணயத்தில் ₹ அடையாளம் தான் இடம் பெற்றிருந்தது. அதற்கான அந்த நாணயத்தை தி.மு.க., வெறுக்கவில்லை. மாறாக, ரூ.4,470 விலை கொண்ட நாணயத்தை தி.மு.க., வினரிடமே ரூ.10 ஆயிரத்துக்கு விற்று லாபம் பார்த்தது தி.மு.க., தமிழக அரசின் ஆவணத்தில் இப்போது ₹ அடையாளத்தை நீக்கியிருக்கும் தி.மு.க., அதே அடையாளத்தைக் கொண்டிருக்கும் கருணாநிதி நினைவு நாணயங்களையெல்லாம் வீசி எறிந்து விடுமா? என்பதற்கு பதிலளிக்க வேண்டும். இது போன்ற நாடகங்களை நடத்துவதற்கு பதிலாக தமிழகத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்த தி.மு.க., அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 36 )

ameen
மார் 20, 2025 13:15

ராஜ்யசபா சீட் இல்லை என திமுக சொல்லிடுச்சு போலிருக்குது....


S.jayaram
மார் 20, 2025 06:36

அரசியல் வாதிகள் எப்போது ரோசப்பட்டுள்ளீர்கள் இதற்குத்தான் அண்ணா அப்போதே கூறினார் அரசியல் என்பது சாக்கடை அதில் நெளியும் புழுக்களே அரசியல் வாதிகள் எனவே அந்த சாக்கடையை சுத்தப் படுத்துவது படித்த இளைஞர்களின் பணியாக கொள்ளவேண்டும் என்றார் ஆனால் அவருக்குப் பின் வந்த தலைமை அதை மேலும் கழிவை கலக்கி அதிலேயே தான் குடும்ப சாம்ராஜ்யத்தை அமைத்துக் கொண்டது. அதைப் பார்த்து இன்னும் சில காட்சிகளும் தங்களையும் அதில் குடும்ப சாம்ராஜ்யத்தை உருவாக்க முயல்கின்றன இவர்களை நம்பிபோகிறவர்கள் என்றும் கரையேற முடியாது ஆனால் இவர்களின் பின்பலத்தில் அவர்கள் கரை ஏறி விடுவார்கள். இதுதான் நிதர்சனம் இதில் மொழியோ, இனமோ, மான, அவமானம் எதைப்பற்றியும் கவலைப் படாத ஜென்மங்கள்


gopalakrishnan
மார் 17, 2025 17:05

பிடிக்காத கலைஞர் ₹. 100 நாணயத்தை திமுககாரர்கள் மற்றவர்களுக்கு தானமாக வழங்கலாம். ஒரு வேளைக்கு உணவுக்கு ஆகும்.


Madhavan
மார் 15, 2025 07:46

தமிழ் நாடு என்பதை இவர்களே தமிழகம் எனப் பல முறை அரசியல் மேடைகளிலும், சட்ட்சபையிலும் கூடக் குறிப்பிட்டிருக்கிறார்கள் ஆனால், மேதகு கவர்னர் அவர்கள் தமிழகம் என்று குறிப்பிட்டுப் பேசிய போது அவர் சட்டத்திற்குப் புறம்பாகப் பேசுவதாகச் சொன்னவர்கள், இன்று இந்திய அரசாங்கத்தின் நாணயக் குறியீட்டை ஒரு 15 ஆண்டுகளுக்குப் பிறகு ரூ என அரசாங்க பட்ஜெட்டில் இடம் பெறும் விதமாக மாற்றி விட்டு தாங்கள் சட்டத்திற்குப் புறம்பாக ஏதும் செய்யவில்லை என சப்பை கட்டு கட்டுகிறார்கள்.


முருகன்
மார் 14, 2025 20:14

நீங்கள் எம்பி பதவி இல்லாமல் இருந்தால் அதுவும் நடக்கும்


JAYACHANDRAN RAMAKRISHNAN
மார் 14, 2025 17:23

கருணாநிதியையே ஒரு சீனியர் மந்திரி சந்தடி சாக்கில் பொறுக்கி என்று சொல்லிவிட்டார். கருணாநிதியாவது ஒன்றாவது எல்லாமே இனி நாக்கறுக்கும் எங்கள் ஸ்டாலின் அப்பா தான்னு இன்னொரு சீனியர் சீனியர் மந்திரி சொல்லி இருக்கிறார். அப்பாவோ நாசகார நாக்பூர் அப்படிங்கிறார். எப்படியாவது வெறுப்பேத்தி 375 வந்து ஆட்சியை கலைத்தால் போதும்னு இப்போ திமுக நினைக்குது.


vijai hindu
மார் 14, 2025 17:01

பூனை கண்ணை மூடிட்டா உலகம் இருண்டிடுமா


vijai hindu
மார் 14, 2025 16:53

ஐந்தறிவுள்ள ஜீவனுக்கு என்ன தெரியும்


ponssasi
மார் 14, 2025 16:03

இனி ரூ என இருக்கும் ருபாய் எடுத்துவந்தால் தான் டாஸ்மார்க் சரக்கு கிடைக்கும். மற்றவை எல்லாம் செல்லாதவை. அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு மீண்டும் நெஞ்சுவலி வந்துவிடும்.


K V Ramadoss
மார் 14, 2025 15:24

அருமையான கேள்வி கேள்விக்கென்ன பதில் ?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை