உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சென்னை - நாகர்கோவில் வந்தே பாரத் கட்டணம் குறையுமா?

சென்னை - நாகர்கோவில் வந்தே பாரத் கட்டணம் குறையுமா?

சென்னை:சென்னை - நாகர்கோவில், மதுரை - பெங்களூரு, மீரட் - லக்னோ இடையேயான, மூன்று, 'வந்தே பாரத்' ரயில்களை, பிரதமர் மோடி, காணொளி வாயிலாக இன்று துவக்கி வைக்கிறார்.புதன் தவிர மற்ற நாட்களில், எழும்பூரில் இருந்து காலை 5:00க்கு புறப்படும் வந்தே பாரத் ரயில், மதியம் 1:50 மணிக்கு நாகர்கோவில் செல்கிறது. நாகர்கோவிலில் இருந்து மதியம் 2:20க்கு புறப்பட்டு, இரவு 11:00 மணிக்கு எழும்பூர் வரும். தாம்பரம், விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, கோவில்பட்டி, திருநெல்வேலியில் நின்று செல்லும். டிக்கெட் முன்பதிவு நேற்று துவங்கியுள்ளது. சென்னை - நாகர்கோவிலுக்கு, 'ஏசி சேர்' பெட்டியில் ஒருவருக்கு 1,760 ரூபாய் கட்டணம். 'எக்சிகியூடிவ்' பெட்டியில் ஒருவருக்கு, 3,240 ரூபாய் கட்டணம்.இதேபோல, மதுரையில் இருந்து காலை 5:15க்கு புறப்படும் வந்தே பாரத் ரயில், மதியம் 1:00 மணிக்கு பெங்களூரு கன்டோன்மென்ட் செல்கிறது. பெங்களூரு கன்டோன்மென்ட்டில் இருந்து மதியம் 1:30க்கு புறப்பட்டு, இரவு 9:45 மணிக்கு மதுரை வருகிறது.திண்டுக்கல், திருச்சி, கரூர், நாமக்கல், சேலம், கிருஷ்ணராஜபுரத்தில் நின்று செல்லும். 'ஏசி சேர்' பெட்டியில் ஒருவருக்கு 1,575 ரூபாய், எக்சிகியூடிவ் பெட்டியில் ஒருவருக்கு 2,865 ரூபாய் கட்டணம்.

கட்டணம் அதிகம்

இதுகுறித்து, ரயில் பயணியர் சிலர் கூறியதாவது: இந்த ரயிலுக்கான கட்டணம் அதிகம். ஏற்கனவே இயக்கப்படும் எழும்பூர் - திருநெல்வேலி வந்தே பாரத் ரயிலில், திருநெல்வேலிக்கு, 'ஏசி சேர்' பெட்டியில் பயணிக்க ஒருவருக்கு 1,610 ரூபாய் கட்டணம். ஆனால், நாகர்கோவில் வந்தே பாரத் ரயிலில் திருநெல்வேலிக்கு 1,665 ரூபாயாக உள்ளது.நடுத்தர மக்கள் அதிகளவில் பயணிக்க வசதியாக, கட்டணத்தை குறைக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி