உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / போக்குவரத்து ஊழியர்கள் அரசு ஊழியராக அறிவிப்பா?

போக்குவரத்து ஊழியர்கள் அரசு ஊழியராக அறிவிப்பா?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ''போக்குவரத்து ஊழியர்களை, அரசு ஊழியர்களாக அறிவிப்பது குறித்து, ஆலோசித்து முடிவு தெரிவிக்கப்படும்,'' என, போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கூறினார். போக்குவரத்து ஊழியர்களின், 15-வது ஊதிய ஒப்பந்தம் தொடர்பான இரண்டாம் கட்ட பேச்சு, சென்னை குரோம்பேட்டையில் உள்ள மாநகர போக்குவரத்து கழக பயிற்சி மையத்தில் நேற்று நடந்தது. அமைச்சர் சிவசங்கர் தலைமை வகித்தார். அதிகாரிகள் மற்றும் 74 சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்றனர்.நான்கு மணி நேரம் நடந்த பேச்சிற்கு பின், அமைச்சர் சிவசங்கர் அளித்த பேட்டி: போக்குவரத்து ஊழியர்களின் புதிய ஊதிய ஒப்பந்தத்தை விரைந்து முடிக்க வேண்டும் என, தொழிற்சங்கங்கள் கோரியுள்ளன. அரசு ஊழியர்களாக அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து, முதல்வர் அலுவலகத்தில் விவாதிக்கப்படும். சில கோரிக்கைகளை நிதித்துறையுடன் விவாதிக்க வேண்டியுள்ளது. சிலவற்றை முதல்வர் கவனத்துக்கு எடுத்து சென்று, எவற்றை நிறைவேற்ற முடியுமோ, அவற்றை நிறைவேற்றுவோம். இது தொடர்பாக, அடுத்த கட்டமாக அனைத்து சங்கங்களையும் ஒரு சேர அழைத்து பேச்சு நடத்தப்படும். அதன் பிறகு ஊதிய ஒப்பந்தம் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

P.BASKAR
பிப் 15, 2025 19:34

எப்பொழுதெல்லாம் அரசுக்கு கால அவகாசம் தேவையோ அப்பொழுதெல்லாம் அரசு ஊழியர்கள் கோரிக்கை வந்து விடும்.பின் அதைப் பற்றியே பேச வைத்து ஒப்பந்தத்தில் தொழிலாளர்களை ஏமாற்றுவதே இந்த அரசு, கழகங்கள், தொழிற்சங்கங்களுக்கு வாடிக்கை ஆகிவிட்டது.தொழிலாளர்கள் அரசு ஊழியர்கள் ஆகப் போவதுமில்லை நல்ல ஒப்பந்தம் கிடைக்கப் போவது மில்லை.ஒன்றே ஒன்று நிச்சயம் தொழிலாளர்கள் ஏமாறுவது.34ஆண்டுகால பணியில் நான் கண்டது இதுதான்.


Kuppan
பிப் 15, 2025 15:50

அரசு ஊழியர்களுக்கு பழைய பென்சன் வழங்குவதாக வாக்களித்து இதுவரை வழங்கவில்லை. இதிலே அரசு ஊழியராக ஆக்கிவிடுவார்களா?


M Ramachandran
பிப் 15, 2025 12:41

தீ மு க்கா வின் தேர்தல் வாக்குறுதிகள் நம்பிக்கைக்கு உகந்ததல்ல. பித்தலாட்டம் ஏமாற்றுதல் அவர்களுக்கு கை வந்தகலை.


venkat
பிப் 15, 2025 12:20

ஏற்கெனவே கையில பிடிக்க முடியாது இதுல இது வேற யா உருப்படும்.


pmnr pmnr
பிப் 15, 2025 11:42

ஒரு டிரைவர் எப்படி அரசு ஊழியர் ஆக முடியும் ?


Tamil Arasan
பிப் 15, 2025 14:14

கஷ்ட படர அவங்கள சொல்லாம அப்ரோ வேற யாரை அரசு ஊழியர்னு சொல்லணும் சும்மா உக்காந்துருகிற டீச்சர் கலெக்டர் ஆபீஸ்ல இருக்கிற கிளெர்க்ஸ் கூப்பிடலாமா அரசு ஊழியர்னு.


சுந்தரம் விஸ்வநாதன்
பிப் 15, 2025 09:47

ஏணுங்க மந்திரி சார், இந்த போக்குவரத்து ஊழியர்களை அரசு ஊழியர்களாக மாற்றலாமா வேண்டாமா, மாற்றலாம் என்றால் எப்படி மாற்றுவது, வேண்டாம் என்றால் எதற்காக வேண்டாம் என்றெல்லாம் ஆராய ஒரு கமிட்டி போட்டு அதன் முடிவை சற்றொப்ப பதினைந்து மாதங்களுக்குள் அரசுக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்று சொல்லி கனி விழியார் தலைமையில் கமிட்டி அமைக்கலாமே .


சுந்தரம் விஸ்வநாதன்
பிப் 15, 2025 09:43

எல்லாமே சுமுகமாக சென்று கொண்டிருக்கும்போது அதில் ஒரு பிரச்சினையை உருவாக்கி நாளடைவில் அந்த பிரச்சினையை தீரக்கிறோம் என்று குளிர் காய்வதில் உலகளாவிய திறமைசாலிகள் நமது தில்லு முல்லு கழகத்தினர். பிரச்சினையே இல்லாமல் சென்று கொண்டிருந்த கச்சத்தீவை பிரச்சினை ஆக்கியது இவர்களே. அதே போல உரிய காலத்தில் ஒப்பந்தத்தை புதுப்பிக்காமல் பின்னர் நீதி மன்றம் சென்று அதன் பின்னர் வழக்கை வாபஸ் பெற்று காவிரி நீரை பிரச்சினை ஆக்கினார்கள். அதுபோல அரசு போக்கு வரத்துத்துறை " Madras State Transport Department" ஆக இயங்கிய துறையை இவர்கள் ஆட்சிக்கு வந்ததும் அரசியல் காரணங்களுக்காகவும் கட்சிக்காரர்களை அரசுப்பணியில் அமர்த்தி கல்லா கட்டவும் அரசுத்துறையை அரசு சார்ந்த நிறுவனமாக மாற்றி அதற்கு பல்வேறு பெயர்கள் சூட்டி குழப்பி பிரச்சினை ஆக்கினார்கள். இப்போது அந்த குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க அரசு ஊழியர்களாக ஆக்குவோம் என்கிறார்கள். அவர்களுக்கே தெரியும், இன்றைய போக்குவரத்து நிறுவன ஊழியர்களை அரசு ஊழியர்களாக ஆக்க முடியாது என்பது. தேர்தல் வருவதால் நாக்கு மட்டுமல்ல உடம்பு முழுவதும் தேன் தடவி நெய் ஒழுக பேசுகிறார்கள். அதைக்கேட்டு ஏமாறுவது போக்குவரத்து ஊழியர்கள் மட்டுமே


Laddoo
பிப் 15, 2025 11:05

தன்னுடைய ஊழலுக்காக டிவிஎஸ் பஸ் போக்குவரத்து நிறுவனத்தை அரசுடைமையாக்கினார் கருநநிதி அதை அன்று எம் ஆர் ராதா தன்னுடைய மேடை நாடகத்தில் கேலி செய்தார் கருணாநிதியை மேடையில் வைத்துக் கொண்டே.


Bhaskaran
பிப் 15, 2025 09:04

அனைவரையும் ஒப்பந்த ஊழியராக்குவாங்க


சுந்தரம் விஸ்வநாதன்
பிப் 15, 2025 09:48

அனைவரையும் என்பதில் போக்குவரத்துத் துறை அமைச்சரையும் சேர்க்க சொல்கிறீர்களா , இல்லை அவரை மட்டும் அரசு ஊழியராக இருக்க சொல்கிறீர்களா?


Minimole P C
பிப் 15, 2025 07:51

It will be a wrong decision to corporation staff as Govt. servants. Already one wrong done by KK, that declalring local bodies staff as Govt. officials just for the votes. Due to that declartion by KK only corruption increased by manifolds and today just a person joins local bodies as a clerk and retires with an amazed wealth of Rs. 20 to 25 crores properties. One day these politicians will sell this state to other country just for money and move to other area to loot.


Kasimani Baskaran
பிப் 15, 2025 07:18

அரசு பேருந்து - அதை இயக்கக ஒப்பந்தத்தில் ஆட்கள். பகுதி நேர வேலை செய்யும் அரசியல்வாதிகளுக்கு குத்தகை அடிப்படையில் சம்பளம் கொடுக்கலாமே.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை