உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஜாபர் சாதிக் மனைவி தலைமறைவு; அமலாக்கத்துறை அதிகாரிகள் வலை

ஜாபர் சாதிக் மனைவி தலைமறைவு; அமலாக்கத்துறை அதிகாரிகள் வலை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை : தலைமறைவான ஜாபர் சாதிக் மனைவி அமீனா பானுவை, அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக தேடி வருகின்றனர்.தி.மு.க., நிர்வாகியாக இருந்த ஜாபர் சாதிக், 36, என்பவர், வெளிநாடுகளுக்கு போதை பொருள் கடத்தலில் ஈடுபட்டு, 2,000 கோடி ரூபாய்க்கு மேல் சம்பாதித்துள்ளார். அவர் சட்ட விரோத பண பரிமாற்றத்திலும் ஈடுபட்டதற்கு, அவரது மனைவி அமீனா பானு, 32, சகோதரர் முகமது சலீம், 34, ஆகியோரும் உடந்தையாக இருந்துள்ளனர். இதுகுறித்து, அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரித்து, சென்னையில் நேற்று முன்தினம் முகமது சலீமை கைது செய்து, புழல் சிறையில் அடைத்துள்ளனர். தொடர் விசாரணையில், அண்ணனுடன் சேர்ந்து, போதை பொருள் கடத்தல் வாயிலாக, முகமது சலீம், 100 கோடி ரூபாய் வரை சம்பாதித்துள்ளார். அவரின் வங்கி கணக்கிற்கு, சட்ட விரோதமாக, 8 கோடி ரூபாய், 'டிபாசிட்' செய்யப்பட்டு இருப்பதை, அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.வி.சி., நிர்வாகியாக இருந்த முகமது சலீம், விலை உயர்ந்த ஜாகுவார் உள்ளிட்ட கார்களை வாங்கி பயன்படுத்தி வந்ததையும், அவர் சொகுசு வாழ்க்கை நடத்தியற்கான ஆதாரங்களையும், அமலாக்கத்துறை அதிகாரிகள் திரட்டி உள்ளனர். அவர் கைதாகி உள்ள நிலையில், அமீனா பானு, சென்னை சாந்தோமில் உள்ள வீட்டை பூட்டி விட்டு தலைமறைவானார். அவரை அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக தேடி வருகின்றனர்.அமலாக்கத்துறை அதிகாரிகள் கூறியதாவது: ''ெஹல்த் மிக்ஸ் பவுடர்' போல, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, மலேஷியா உள்ளிட்ட நாடுகளுக்கு ஜாபர் சாதிக், முகமது சலீம் குழுவினர் போதை பொருள் கடத்தியது தொடர்பாக, 2015ல் சென்னையிலும், 2018ல் மும்பையிலும், சுங்கத்துறை அதிகாரிகளிடம் சிக்கி உள்ளனர். இதனால், அவர்கள் அந்த காலக்கட்டத்தில் இருந்து, சட்ட விரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டது குறித்து, விசாரித்து வருகிறோம். அமீனா பானுவின் வங்கி கணக்கிற்கு வெளிநாடுகளில் இருந்து, சட்ட விரோதமாக கோடிக்கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டுள்ளது. குற்றத்திற்கு உடந்தையாக இருந்ததால், அவரை தேடி வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Thiru Thiru
ஆக 16, 2024 11:27

தீயது ஹராம் என்று தெரிந்தே செய்பவன் எப்படி அமைதி மார்க்கத்தை சேர்ந்தவனாக இருக்க முடியும் அதற்கு இங்கு மதம் மாறி ஒன்று முட்டுக் கொடுக்கிறது அது பல்லாயிரக்கணக்கான இளைஞர்களின் வாழ்வை சிதைப்பவன் எப்படி இறைவனுக்கு உகந்தவனாக இருக்க முடியும் கருத்துப் போடும் முன் இதை யோசிக்குமா தேர்தல் பத்திரம் என்பது நேர்மைக்கான ஒன்றுதான் ஒழிய மறைமுகமான ஒன்று இல்லவே


நிக்கோல்தாம்சன்
ஆக 15, 2024 09:29

அடப்போங்க அந்த பொம்பளை என்ன செய்வா பாவம் புருஷன் செய்ததை எல்லாம் சொன்னால் தலாக் சொல்லிடுவான் , சொல்லாம விட்ட அரசு குடையுது


ஆரூர் ரங்
ஆக 15, 2024 09:27

தலைமறைவு? இதுக்குதான்.


Barakat Ali
ஆக 15, 2024 09:00

குற்றவாளிகளைத் தண்டிக்க நீதித்துறை உதவவில்லை ....... ஜட்ஜார் காங்கிரஸ் ஆட்சியில் நியமிக்கப்பட்டவர்கள் என்பது பாஜக விடும் நீலிக்கண்ணீர் ..... தமிழக மக்களே சாதிக் ஒரு அப்பாவி, வழக்கில் சிக்க வைக்கப்பட்டுள்ளார் என்று நம்புகிறார்கள் ....


Barakat Ali
ஆக 15, 2024 08:48

இது போலப் பலரைப் பிடித்தால் தேர்தல் பத்திரங்கள் மூலம் கட்சியை வலுப்படுத்த வேண்டிய அவசியமே பாஜகவுக்கு இருக்காது ..... சம்பாத்தியம் என்று வந்தால் பாஜகவும் சமரசம் செய்து கொள்ளக்கூடிய கட்சியே .... உதாரணம் முடிவு தெரியாத பல ரெயிடுகள் ....


N.Purushothaman
ஆக 15, 2024 09:33

ரெய்டுகளுக்கு பிறகு சம்மந்தப்பட்ட தரப்பு முந்திக்கொண்டு நீதிமன்றம் சென்று மனு மேல் மனு போடுவது அல்லது வழக்கை இழுத்தடிக்க என்ன செய்யணுமோ அத்தனையும் செய்வது என செல்லும் போது நீதி கிடைப்பது தாமதமாகிறது .....செந்தில் பாலாஜி மேல் குற்றச்சாற்று பதிவு செய்ய அமலாக்கத்துறை எவ்வளவு மென கெட வேண்டி இருந்தது என்பது சமீபத்திய உதாரணம் ...


N.Purushothaman
ஆக 15, 2024 07:12

ஜாபர் தம்பியை கைது செஞ்சிட்டாங்கன்னு வருத்தப்படுவாரா இல்லை மனைவி தலைமறைவுங்கிறதை நினைச்சு சந்தோஷப்படுவாரா ?


VENKATASUBRAMANIAN
ஆக 15, 2024 07:08

இவ்வளவு நாட்களாக என்ன செய்து கொண்டு இருந்தார்கள். தலைமறைவு ஆகும் வரை வேடிக்கை பார்த்தார்களா. ஆமை வேகத்தில் விசாரணை இருந்தால் மக்களுக்கு நம்பிக்கை போய் விடும்.எதிரிகளுக்கு சாதகமாக இருக்கும்.


ஆரூர் ரங்
ஆக 15, 2024 09:29

அரெஸ்ட் ஆகும் எல்லோருக்கும் உடனடியாக ஜாமீன் அளிக்க சுப்ரீம் கோர்ட்டீன் சமீப தீர்ப்பு வழி வகுத்துள்ளது. கைது செய்து என்ன பயன்?


Barakat Ali
ஆக 15, 2024 06:44

நேர்மைக்குப் பெயர் போன பாஜகவும் இவர்களிடம் நன்கு கறந்துவிட்டது என்று புரிகிறது ....


Naga Subramanian
ஆக 15, 2024 06:09

உயர்திரு அசோக் பாலாஜி அவர்கள், செயற்கை நுண்ணறிவு துணைகொண்டு, பூமியை விட்டு சந்திரனின் தென்துருவப் பகுதிக்குச் சென்றிருக்கலாம். அதேபோல, ஜாபர் சாதிக் மனைவியும் வேறோர் கிரகத்திற்கு போயிருக்கலாம். தயவு செய்து, இனிமேலும் தாமதிக்காமல், பைனாகுலர் உதவி கொண்டாவது மற்ற எந்த கிரகத்தில் இருக்கிறார்கள் என்பதை அறிந்தால் நல்லது.


மேலும் செய்திகள்



புதிய வீடியோ