உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அரசு வேலை வாங்கித்தருவதாக ரூ.2.5 லட்சம் மோசடி: கைது 1

அரசு வேலை வாங்கித்தருவதாக ரூ.2.5 லட்சம் மோசடி: கைது 1

திண்டுக்கல்:அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி ரூ.2.50 லட்சம் மோசடி செய்த நபரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். திண்டுக்கல் மாவட்டம் வேடச்சந்துார் அடுத்த சித்துாரை சேர்ந்தவர் ஆலம்மாள் 46. 2022ல் இவரின் அலைபேசியில் பேசிய நத்தம் வாடிப்பட்டியை சேர்ந்த கருப்பையா 35, அரசியல் பிரமுகரிடம் டிரைவராக வேலை செய்கிறேன். உங்கள் மகனுக்கு அரசு வேலை வாங்கி தருகிறேன். முன்பணமாக ரூ.2.5 லட்சம் தரவேண்டும் என கூறி உள்ளார். அதன்படி கருப்பையா வங்கி கணக்கிற்கு ரூ.2.5 லட்சம் அனுப்பி உள்ளார். இரு ஆண்டுகளாகியும் வேலை வாங்கி தராததால் ஆலம்மாள், திண்டுக்கல் எஸ்.பி., பிரதீப்பைசந்தித்து புகார் அளித்தார். கருப்பையாவை சைபர் கிரைம் ஏ.டி.எஸ்.பி., தெய்வம், இன்ஸ்பெக்டர் விக்டோரியா லுார்துமேரி கைதுசெய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை